Monday, August 31, 2009

அம்புட்டுகிட்டாறு தும்பிட்டிக்கா பட்டரு...

எசகு பிசகா மாட்டிக்கிட்டா எங்க ஊர்ல சொல்லுவாங்க அம்புட்டுகிட்டாறு தும்பிட்டிக்கா பட்டருன்னு. அதுக்கு சத்தியமா இது வரைக்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனா இன்னிக்கு கோயம்பத்தூர் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் பத்தி செய்தி படிச்சதும் அம்புட்டு...................................... தான் எனக்கு ஞாபகம் வந்தது.

மேல படியுங்க முழுசா புரியும்.

ஊர்: ஸ்ரீரங்கம், விலாசம்: காந்திநகர், வருஷம்: 60 - 65 மாதங்கள்: ஏப்ரல் - ஜூன்

கிழமை: ஞாயிறு முதல் ஞாயிறு வரை நேரம்: மதியம் சுமார் ஒரு மணி

குமார்: வாங்கடா, நேரா எல்லாரும் ஹோ அண்ட் கோ மாமியாத்துக்கு போலாம்.

வெங்கடேஷ்: ஆமாண்டா, அது தாண்டா சரி, நேத்தே நான் பாத்தேன், மாங்காஎல்லாம் முத்திப் போச்சுடா. இன்னும் ரெண்டு நாள் உட்டா பழுத்துடும், அப்புறம் மாமியே பரிச்சுடுவா. நமக்கு கெடைக்காது.

சுரேஷ்: இந்த தடவ நான் மரத்துல ஏற மாட்டேன். நான் வேணா காம்பவுண்டுக்கு வெளில நின்னு காட்ச் புடிக்கறேன்.

ராசு: அதெல்லாம், அங்க போய் பாத்துக்கலாண்டா.

குமார்: சரிடா! ராகவா, நீ வீட்லேர்ந்து ஒரு சின்ன கத்தியும், கொஞ்சம் உப்பும் எடுத்திக்கிட்டு நேரா வெங்கடேஷ் வீட்டு மாடிக்கு வந்திடு.

நாங்க நாலு பெரும், துணைக்கு தமிழன், கருவண்டு, குண்டன் துணையோட ஹோ அண்ட் கோ மாமியாத்துக்கு படை எடுத்தோம்.

அவர்கள் வீட்டை அடைந்ததும் குமார், எங்கள் எல்லோரிலும் பெரியவன் எல்லோருக்கும் அவரவர் பங்கை விவரிக்க ஆரம்பித்தான். குண்டன், பாட்ராச்சாரியார் வீட்டுப் பக்கம். அங்கிருந்து கொண்டுதான் மரத்தின் உச்சியிலிருந்து வீசி எறியப்படும் மாங்காய்களை லாவகமாகப் பிடிப்பான். தமிழன் அவன் பின்னாடி நின்னு எண்ணி கூடையில எடுத்து வைப்பான். கருவண்டு, தெருவுல வேற யாரும் வந்தா கவனமா இருந்து குரல் கொடுப்பான்.

குமார் குனிஞ்சு நிக்க, அவன் முதுகு மேல ஏறி வெங்கடேஷ் சுவத்துக்கு வெளியில வளந்திருக்கிற கிளைய புடிச்சு குரங்கு மாதிரி தாவி மரத்துல ஏறுவான்.

சுரேஷுக்கு வேலை வெளிக்கதவுக்கு பக்கத்துல நின்னுக்கிட்டு மாமி வெளிய வந்த குரல் கொடுக்குற வேலை. சுளுவான வேலை. ஏன்னா மாமி சாப்பாடு சாப்டுட்டு அசந்து தூங்கற நேரம்.

ஏழெட்டு முத்தின மாங்கா சேர்ந்திருக்கும்.

வெங்கடேஷ் மர உச்சிலேருந்து லேசா குரல் குடுத்தான். டேய்! நாலஞ்சு பழம் இருக்குடா.

குமார் பதிலுக்கு சொன்னான் - தூக்கி எறியாதடா, கெட்டுப்போயிடும், சட்டையை கயட்டி அதுல கட்டிக்கோ.

வெங்கடேஷ் சொன்னபடியே செய்தான்.

சுரேஷ் கவனமாக வீட்டு வாசற்புறம் இருந்த தோட்டத்தை பாத்துக்கிட்டு இருந்தான். திடீர்னு, வீட்டு பின் பக்கத்திலேருந்து யாரோ வர மாதிரி நிழல் தெரிந்தது. உணர்வதற்கு முன்னர் மாமி மரத்தடியில் நின்றிருந்தாள்.

சுரேஷ் மாமி என்று கத்தவும், வெங்கடேஷ் கழட்டிய சட்டையில் மாம்பழத்துடன் இறங்கும்போது, பிடி தவறி, மாமியின் காலடியில் தொப்பென்று விழுந்தான். அவன் கழுத்தைப்பிடித்து தூக்கினாள் மாமி.

சுரேஷ், ராசு, குமார், குண்டன், தமிழன், கருவண்டு எல்லோரும் பறந்து மறைந்தனர், அம்புட்டுகிட்டாறு, தும்பிட்டிக்கா பட்டாரு.............................

இந்தியாவின் சிறைக்கைதிகள்


அப்பா: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

தாத்தா: அதிகம் இருக்கறது நம்ம நாட்டு சுதந்திரத்துக்காக போராடரவ்ங்க. சில குற்றவாளிகளும் இருப்பாங்க, திருட்டு, பிக் பாக்கெட் அந்த மாதிரி குற்றங்களுக்காக.

நான்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

அப்பா: குற்றம் செய்து பிடி பட்டவர்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு இது மாதிரி பற்பல குற்றங்கள்.

என் மகன்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

நான்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள், பெரிய பெரிய கம்பெனி உயர் அதிகாரிகள், பெரிய பெரிய டாக்டர்கள், வக்கீல்கள், சார்டெட் அக்கௌண்டண்டுகள், ஆசிரியர்கள், பிரின்சிபால், முன்னாள் மந்திரிகள், அவங்களோட மகன்கள். சுருக்கமா சொல்லணும்னா, இப்ப இருக்கற ஜெயில்ல, அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிலேருந்து அசெம்ப்ளி, பார்லிமென்ட் வர எதுவேணும்னாலும் நடத்தலாம்.

Thursday, August 27, 2009

அப்பு குப்பு உரையாடல் 10

அப்பு: என்ன குப்பு? ரொம்ப சிரிச்சிக்கிட்டே வர!குப்பு: ஒண்ணுமில்லண்ணே, ஏதோ நெனப்பு வந்திச்சு சிரிப்பு அடக்க முடியலே!அப்பு: சரி குப்பு, சொல்றத சொல்லிட்டு சிரி, இல்ல, சிரிச்சுட்டு சொல்லு.குப்பு: நம்ம எலிமெண்டரி ஸ்கூலு ராஜாராமனும், சீனிவாசனும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க அண்ணே.அப்பு: அவுங்க எப்பவுமே சந்தோசமா தான இருக்காங்க, இப்ப என்ன புதுசா?குப்பு: முன்னெல்லாம், டோனேஷன் வாங்கற பணத்துல கொஞ்சம் கமிஷன் தான் கிடைச்சுக்கிட்டு இருந்தது. இந்த வருஷம் முழு பணத்தையும் ஆட்டைய போட்டுட்டாங்க அண்ணே! அதனால தான் டபுள் சந்தோசம்.அப்பு: புரியலையே, குப்பு, புரியும்படியா விளக்கமா சொல்லுகுப்பு: ஒண்ணுமில்லண்ணே நம்ம ஊரு லோகல் சானல்காரன், அவன்தான் வைத்தி, தன்னையும் டயம்ஸ் நௌ கணக்கா நினச்சிக்கிட்டு அந்த ஸ்கூல்ல டொனேஷன் வாங்கற வீடியோவ போட்டு மூணு நாள் அசத்திட்டான். இது ஊர் பூரா பரவவும், அந்த ஸ்கூல் ஓனர் அது தான் நம்ம ஜகன்னாதன் "எனக்கும் அந்த ஸ்கூலுக்கும் சம்பந்தம் எதுவுமில்லைன்னு" சொல்ல அதையும், ரெண்டு நாள் உடாம டீவில போட்டுத்தள்ளிட்டான். இதுதான் சான்ஸுன்னு ராஜாராமனும், சீனிவாசனும், ஆமாம், ஆமாம், ஜகன்னாதனுக்கும் ஸ்கூலுக்கும் சம்பந்தமில்ல, நாங்களும் பணம் ஒண்ணும் வாங்கலான்னு சொல்லி, மொத்த பணத்தையும் ஆட்டைய போட்டுட்டாங்கண்ணே!அப்பு: இதெல்லாம் பாத்துக்கிட்டு ஜகந்நாதன் சும்மா விட்டுருவாரா?குப்பு: அவுரு என்னண்ணே பண்ண முடியும். அவுரு என்ன ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வா? கூட்டணி ஆட்சி எம்.பியா? மினிஸ்டரா? குறைஞ்சது ஒரு வட்டம், மாவட்டமா. ஜீரோண்ணே! ஜீரோ! ஒண்ணுமில்லண்ணே, டீச்சரா இருந்து, ராத்திரி பகலா ட்யூஷன் எடுத்து சம்பாதிச்சவரு, கொஞ்சம் கூட ஆசைப்பட்டுட்டாரு. அடிச்சது யோகம் ராஜாராமனுக்கும், சீனிவாசனுக்கும். ஆசைப்பட்டாரு ஜகன்னாதன், ஆட்டையப் போட்டாங்க ராஜாவும், சீனியும்.

ஸ்வைன் ஃப்ளூ என்றால் பயம் ஏன்?

தலைப்பைப் பார்த்து ஸ்வைன் ஃப்ளூ பாதுகாப்பு அது இதுன்னு எழுதி போரடிக்கப்போறேன்னு நினைக்காதீங்க. ஸ்வைன் என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் பாரத்தால் புரியும், ஸ்வைன் என்பது, பருமனான {அதாவது கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட} உடலுடன், குள்ளமான கால்கள் கொண்ட தாவர உணவும், மாமிச உணவும் உண்ணும் ஒரு பிராணி. மிருகம் என்றும் சொல்லலாம்.


இந்த ஃப்ளூ இந்தியர்களை ஓரளவு தாக்கலாம். ஆனால் பெருமளவு தாக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்று கேட்கிறீர்களா? மற்றொரு பிராணி, அதாவது மிருகம், நம்மை, அதாவது இந்தியாவில் வாழும் இந்தியர்களை, நமது தேசம் விடுதலை பெற்ற தினத்திலிருந்து தாக்கி இன்னல் செய்கிறது. அதற்கு இரண்டு பெயர்கள் உண்டு.


ஒன்று ஊழல் அரசு அதிகாரிகள், மற்றொன்று ஊழல் அரசியல்வாதிகள். ஊழல் அரசு அதிகாரிகள், ஸ்வைனுக்கு இணையாக நெஞ்சடைப்பை வர வைப்பார்கள். விழுந்து செத்த்தாலும் பாக்கெட்டை காலி செய்யத் தயங்க மாட்டார்கள். நேரடியகத்தாக்குவார்கள். இவர்கள் கிட்டத்தட்ட எல்லா அரசு நிறுவனங்களிலும் நிறைந்து இருப்பார்கள். அந்த அலுவலகத்தில் உங்களுக்கு வேலை இருந்து அங்கு நுழைந்தால் இந்த மனித ஸ்வைன் ஃப்ளுவால் பாதிக்கப்படுவது நிச்சயம். நேர்மையான அதிகாரிகள் ஒதுக்கப்படுவார்கள்.


ஊழல் அரசியல்வாதி, வித்தியாசமானவன். தாக்குவதற்கு நம்மிடம் ஒப்புதல் வாங்கி விடுவான். அதற்குப் பெயர் ஓட்டு. ஓட்டு பசப்பியும் வாங்குவான். பணம் கொடுத்தும் வாங்குவான்.


இந்த ஊழல்வாதிகளால் அறுபத்தி இரண்டு வருடங்களாக நோய் வாய்ப்பட்ட இந்தியனுக்கு வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் ஸ்வைன் ஃப்ளூ ஜுஜூபி!

Tuesday, August 25, 2009

சிறை தண்டனை முடிந்தது, முழுமையான தண்டனை இனிமேல்தான்

சில நாட்களுக்கு முன்னால் நான் எழுதினேன், உயர் சமூக கேடுகெட்ட உறுப்பினன், குடி போதையில் காரோட்டிக் கொலை செய்த சஞ்சீவ் நந்தா பற்றி. கொலை செய்தது மட்டுமல்லாமல், அதற்குப்பிறகு செய்த தகிடு தத்தங்கள் பற்பல. முழு குடும்பமுமே, அவனுக்குத்துணையாக இருந்து, கேடு கெட்ட செயல்கள் செய்யத்துணிந்தார்கள். சிறைக்குச்சென்றான். கொலைகளுக்கும், அவற்றை மீறிய அநியாயங்களுக்கும், அவனுக்கு முழுமையான தண்டனை கிடைக்கவில்லை.


சிறையை விட்டு வெளியே வந்ததும் குடும்பத்துடன் சிருடி சென்றான். சத்ய சாயி தரிசிக்க. பாவ மன்னிப்புக்காகச் சென்றிருக்கலாம். ஆனால் இந்திய நீதித்துறை கொடுக்காத தண்டனையை, நான் இயற்கையின் நியதி என்றோ, ஆங்கிலத்தில் 'Natural Justice' என்றோ சொல்வேன். இதைப் படிப்பவர்கள் கடவுள் என்று சொல்லலாம். அவனுக்கு அத்தண்டனை விரைவில் கிடைப்பது நிச்சயம்.


மறந்து விட்டீர்களா? ஷிபு சோரன் என்னும் அரசியல்வாதி கொலைக் குற்றங்களிலிருந்து நமது நீதித்துறையிலிருந்து விடுபட்டாலும், குறிகிய நாட்களில், ஒரு அறையில், மகன் தனிமையில் மண்டையிலிருந்து ரத்தம் கசிய செத்துக் கிடந்தான். புத்திர சோகத்தில் ஆழ்ந்தான். நீதி மன்றம் கொடுக்காத தண்டனையை இயற்கை கொடுத்தது. கொடுக்கும்.


உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 1
நந்தா என்பது இவர்கள் குடும்பப்பெயர். தாத்தா நந்தா அதாவது எஸ்.எம்.நந்தா இந்திய கடற் படையில் அட்மிரல் பதவி வகுத்தவர். இப்பொழுது அவர் தம் மகன் சுரேஷ் நந்தாவும், பேரன் சஞ்சீவ் நந்தாவும் செய்யும் தேச விரோத செயல்களைப் பற்றிக் கேட்கும்பொழுது, எஸ்.எம்.நந்தா மீதும் சந்தேகம் வருகிறது. அந்த ஆளு கடற் படை தலைவராக இருக்கும்பொழுது, நாட்டுக்கு என்னென்ன பாதகம் செய்திருக்கக் கூடும் என்று நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது. எனென்றால், சுரேஷும், சஞ்சீவும் செய்திருக்கும் செயல்களை நினைத்தால் குடும்பமே ஒரு உயர் சமூகத்தின் ஒரு கேடு கெட்ட அங்கமாக புலப்படுகிறது.பேரன் சஞ்சீவ் நந்தா அதிகாலை நேரத்தில் குடி போதையில் தன் பி.எம்.டபில்யூ. காரை நூற்றி நாற்பது கிலோ மீட்டெர் வேகத்தில் ஓட்டி, ஆறு பேரை கொன்று, சிறிதும் ஈவிரக்கம் இல்லாமல் வண்டி ஓட்டி மறைந்தான். கூடவே இருந்த நண்பன் வீட்டிற்கு ஓட்டிச் சென்று, நண்பனின் தந்தை மற்றும் வேலைக்காரர்களின் உதவியுடன் வண்டியை சுத்தமாகக் கழுவி சாட்சியங்களை அழித்தான்.மனோஜ் என்று ஒருவன் தப்பிப்பிழைத்தான். உயர் சமூக அநீதியாளர்களுக்கு விலை போனான். ஏற்றிக்கொன்றது லாரி என்று பொய் வாக்கு மூலம் கொடுத்தான். அதற்குப்பிறகு மனோஜ் முழுவதுமாக காணாமல் போனான்.சுனில் குல்கர்னி என்பவர் தானாகவே சாட்சி சொல்ல வந்தார். சஞ்சீவ் நந்தா விபத்துக்குப் பிறகு வண்டியில் இருந்து இறங்கி, வண்டிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்ததாகச் சொன்னார். காலம் கடந்து செல்ல தடுமாற்றத்துக்கு உள்ளானார். பாவிகள் அவரை எப்படி எல்லாம் பயமுறுத்தினார்களோ.இதற்கு உச்சி கட்டமாக, உயர் நிலை வழக்கறிஞர்கள் ஆனந்தும், கானும், வெட்கங்கெட்டு, சாட்சிகளை மாற்றும் ஈனமான செயலுக்குத் துணை போனார்கள். இதைத்தவிர சுரேஷ் நந்தா பாரக் மிசைல் ஊழலில் குற்றவாளி. மேலும் தந்தையும், மகனும், அதாவது சுரேஷும், சஞ்சீவும் வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கையில், மும்பை மாநகரித்தில் கைதானார்கள்.எந்த விதத்தில் பார்த்தாலும், உயர் குடும்பத்தில் பிறந்து, உயர் படிப்பு படித்து ஈனமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட, ஈடுபடும் நந்தா குடும்பம் வேரோடு களையப்பட வேண்டியது நாட்டுக்கு அவசியம். ஈனச்செயல்களுக்கு துணை போன அனைத்து குடும்ப உறுப்பினர்களும், ஆனந்தும், கானும் வாழ்க்கை முழுவதும் சிறையிடப்பட வேண்டும்

Sunday, August 23, 2009

சோனாவின் சுயம்வரம்

இந்தி அலை வரிசைகளில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு வரலாறு சிறப்பு பெற்ற நிகழ்ச்சி. ராக்கி சாவந்த் என்ற நடன (நடன என்று சொவது சிரமமாக இருக்கிறது, ஆட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்) நடிகை. சபல மன ஆண்களுக்கு கிளு கிளுப்பு மூட்டும் ஆட்டங்கள் ஆடுவதில் சிறப்புப் பெற்றவர். அவருக்கு தொலைகாட்சி மூலம் சுயம்வரம். ஒரே நிகழ்ச்சியில் மூன்று பேருக்கு லாபம்.ராக்கிக்கு உலக அளவு விளம்பரம், பணம் உண்டா என்று தெரியவில்லை. பெட்டி நிறைய பணம் என்று நம்ப இடமிருக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பெருத்த லாபம் வந்திருக்கும், கூடவே அளவிட முடியாத விளம்பரம். மக்களுக்கோ அளவில்லாத கிளு கிளுப்பு. ராக்கி எப்படியெல்லாம் கேள்வி கேட்டாள் - அசத்திட்டாங்க போங்க. இதுவரைக்கும் அவுங்க ஆட்டத்தை மட்டும் தான் பார்த்தோம். இந்த தடவ பேசியும் அசத்திட்டாங்க, அவங்க பேசுறத கேட்டப்ப, இல்ல, பாத்தப்ப என்ன ஒரு மகிழ்ச்சி.லேட்டஸ்ட்டா ஒரு நியூஸ். தமிழ் நாடு இந்த விஷயத்துல பின்னோட்டம் அடையப்போவதில்லை. ஹிந்துசினிமா.காம் படித்துப்பாருங்கள். திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழ்ப்பெண், பிகினி உடையில் வந்து கோடானு கோடி தமிழ் உள்ளங்களை கொள்ளை கொண்ட சோனா ஹைடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார். இந்தச்செய்தியின் படி, சோனா ஹைடன் சுயம்வரம் செய்து கொள்வார். இந்நிகழ்ச்சி சன் டி.வி. யில் இடம் பெறும்.சன் டி.வி.யாளர்களே, இந்த சரித்திர முக்கியம் பெறப் போகும் நிகழ்ச்சியை நடத்த எந்த விதத்திலும் தவற விடாதீர்கள். கோடானு கோடி தமிழர்கள் கிளு கிளுப்பு அடைவது மட்டுமல்லாமல், தங்களிடம் அளவு கடந்த நன்றியுணர்வு கொள்ளுவார்கள். இது மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக சார்ந்து இருக்கும் திராவிட இயக்கத்திற்கும் இது ஒரு சிறந்த தொண்டாக இருக்கும். தந்தை பெரியாரிலிருந்து, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வரை அனைவரும் இந்நிகழ்ச்சியை நடத்துபவர்களையும், இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களையும், இந்நிகழ்ச்சியை கண்டு களிக்கும் ஒவ்வொரு தமிழனையும் உளமார வாழ்த்துவார்கள்.


வாழ்க தமிழ்! வளாக தமிழினம்!

திருவிழா கொண்டாட்டம்

சுதந்திர தினத்திலிருந்து பிள்ளையார் பெருவிழா வரை, தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வரிசையாகக்கண்டால் கொண்டாட்டம் தான். நடிகைகளின் பேட்டியாக இருந்தால் இரண்டே விதிகள் தான். சிவப்பு நிறத்தில் பளிச்சிட வேண்டும். தமிழ் பேசுவதில் தடுமாற்றம் இருக்க வேண்டும். கேரள நாட்டு குமரிகளிலிருந்து சூரத்தைச் சேர்ந்த நமீதா வரை எல்லோருக்கும் ஓகே. போகிற போக்கைப்பார்த்தால் எதிர்காலத்தில் தமிழ்த் திருவிழாவிலும் கொண்டாட்டம் தமிழ் பேசத்தெரியாத சிவப்பு நிறக்குமரிகளுடன்தான் இருக்கும்.
இவையெல்லாம் அதிகம் எந்த அலை வரிசையில் என்று கேட்கிறீர்களா? தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் பாதுகாப்பதற்காகவே, பிறப்பு எடுத்து, தன் வாழ் நாளில் பெரும் பகுதியை அதன் முயற்சியிலேயே, அர்ப்பணித்து, நெஞ்சுக்கு நீதி தேடும் தமிழ்த் தலைவர்கள் சார்ந்த அலைவரிசைகள்.
அது போகட்டும். ஆறுதலுக்கு, உயர்திரு.சாலமன் பாப்பையா, மற்றும் அவருடன் ஐந்தாறு உண்மைத் தமிழர்கள். தமிழ்த் தெளிவாகவும், வலுவாகவும் பேசுபவர்கள். வாழ்க சாலமன் அய்யா மற்றும் அவர் தம் குழுவினர்.
வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது சிவப்பு நிற தமிழ் பேசாத தமிழ்த்திறைப்பட அழகிகளாக இருக்கட்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள், தமிழ் இன பாதுகாவலர்கள்.

Wednesday, August 19, 2009

சத்தியம் ஆனால் நெஞ்சம் பதைக்கிறது

கீழே உள்ளது நான் மே மாதம் முப்பதாம் தேதி எழுதியது. இன்றைய தினம் நான் கேள்விப்படுவது, படிப்பது, இது உண்மை, சத்தியம் என்று நிரூபிக்கிறது. நெஞ்சம் பதைக்கிறது தமிழா! என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்?

இலங்கைத்தமிழன் செத்து மடிந்தான்
இதற்கு முன்னரும் எழுதினேன். தமிழன் செத்து மடிகி்றான் இலங்கையில். தமிழ் அரசியல் வாதிகளும், மற்றும் பலரும், நாடகம் ஆடுகிறார்கள், பசப்பித் திரிகிறார்கள் என்று. நம்பிக்கைக்குரிய தகவல் இன்று சொல்லுகிறது - இருபது ஆயிரத்திற்கும் மேலான தமிழ் மக்கள் விதிகளுக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலை இயக்கமும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம். அதுவல்ல இன்று என்னுடைய வாதம்.

வெறி பிடித்த இலங்கை அரசு, நாட்டு விரோத அமைப்பை ஒழிக்கிறோம் என்ற பெயரில், முழுவதுமாக அறிந்தே, முன்னேற்பாடுகளுடன், தமிழ் இனத்தை, இலங்கை மண்ணில், அதன் எண்ணிக்கையை குறைக்கும் நோக்குடன், தனது ராணுவத்தை கட்டவிழ்த்து விட்டது. தரம் கெட்ட, இலங்கை அரசை தன விரிவான குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து செயல் படும் ராஜ பக்சே, ஒரு தேர்ந்த அரசியல்வாதி. புலிகள் அமைப்பை அழிப்பது அவன் முதல் நோக்காக இருப்பினும், இதை காரணம் காட்டி, தனது மேலும் பெரிய துணை நோக்கான, தமிழ் இன எண்ணிக்கையை தம் நாட்டில் குறைப்பது என்பதில் பெரும் வெற்றி அடைந்துவிட்டான்.

ராஜா பக்சே, மற்றும் அவர்தம் ராணுவ அமைச்சர், ராணுவ தளபதி, மேலும் பலர் உண்மையில் உலகக் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நான் முன்னமே சொன்னேன் - பெரும் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது என்று. மேலும் சொன்னேன், உலக அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், கண் பொத்திக்குருடர்களாக, காது மூடி செவிடர்களாக, வாய் மூடி ஊமைகளாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்று.

அது போகட்டும். நமது உடன்பிறப்புகள், தமிழ் நாட்டில் தமிழ்த் தியாகிகள், தமிழர்களுக்காக, அவர்தம் நலன்களுக்காக, பல முறை, மீண்டும் மீண்டும் உயிர் துறந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே கட்டில், மெத்தை மீது, குளிர் சாதனப் பெட்டிகள் சூழ உண்ணா விரதம் இருந்தார்கள். சங்கிலிப் போராட்டம் நடத்தி நாள் கணக்காக தொலைக்காட்சிப் பெட்டிகளில் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

நெருங்கி வந்து விட்டது தேர்தல். நேரம் எங்கே நம் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழனைப் பற்றி யோசிக்க, மற்றும் செயல் பட? தலைவர்கள் ஒட்டுக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்கள். தலைவர்களின் தலைவர் பிள்ளைக்காகவும், பெண்ணுக்காகவும் பதவிக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் சாதாரணத் தமிழனும், இலவசப் பொருள்கள் பெற்று, தலைவர்கள் போக்கில் சென்று, இலங்கைத் தமிழனை மறந்தான். ஓட்டுகளை குவித்தான். தமிழ்த் தலைவர்கள் இன்று வெற்றிக் களிப்பில் உலா வருகிறார்கள். பேரம் பேசி பதவிகள் பெற்றார்கள்.

இலங்கையில் தமிழனா? எங்கே இருக்கிறது இலங்கை? எங்களுக்கு தெரிந்ததெல்லாம் டெல்லி மாநகரம் தான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் அங்கு இருக்கும் நாற்காலி தான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நாற்காலியுடன் இணைந்த செல்வாக்கு, அதிகாரம், கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் வாய்ப்புகள் தான்.

கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன:
விருந்து முடிந்த பின், விழுந்த இலைகளை
நக்கிடும் நாய்க்கும், நாளொன்று கழியும்
நாளைக்கழிப்பதே நானிலப் பிறப்பெனில்
வாழ்வென தாழ்வென வருவன சமமே
Posted by TAMIZHANBAN at 7:41 AM 30th May, 2009 0 comments
Labels:

Saturday, August 15, 2009

சுதந்திர இநதியாவின் வக்கிரமான வெளிப்பாடுகள்

இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தினத்தில் எனக்கு ஞாபகம் வந்தது, காந்திஜி மட்டுமல்ல. சுதந்திர இநதியாவின் வக்கிரமான வெளிப்பாடாக என்னால் உணரப்பட்ட சிலரும் ஞாபகத்துக்கு வந்தனர். அவற்றில் முக்கியமான ஒருவன் சந்தன கடத்தல் வீரப்பன். ஏன் அவன் ஞாபகத்துக்கு வந்தான் என்று விவரிக்கிறேன்.


கூஸ் முனிசாமி வீரப்பன் கர்நாடகத்தில் பிறந்து, பின்னர் கர்நாடக, தமிழ்நாடு, கேரளா காடுகளில் கொலோச்சியவன். மூன்று மாநில எல்லைகளிலும் துணிவாகத்தன் கூட்டத்துடன் திரிந்தவன். செய்த கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், அதற்கான ஈடாக பெற்ற கோடிகள் எக்கச்சக்கம். அவன் கையில் உயிர் இழந்த அப்பாவிகள், அப்பாவி போலீஸ் அதிகாரிகள் பலர்.அவன் கொள்ளையடிக்க, கொள்ளையடிக்க, கொலைகள் செய்ய, லாபம் பெற்றவர் அவனும், அவன் கூட்டத்தினர் மற்றும் அல்ல. மூன்று மாநிலத்திலும், குறிப்பாக தமிழ் நாட்டில் அவனால் கொள்ளை லாபம் பெற்ற உயர் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், - வட்டத்திலிருந்து அமைச்சர் வரை பற்பலர். அதன் காரணத்தினாலேயே வீரப்பன் இருபது வருங்களுக்கும் மேலாக காடுகளில் கோலோச்ச முடிந்தது.கடைசியாக, அக்டோபர், பதினெட்டாம் நாள், இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு, அவன் கதை முடிக்கப்பட்டது. உண்மைதான், அவன் உயிருடன், அவன்தம் உண்மைக் கதை முடிக்கப்பட்டது. அவன் சொல்லாமல் சென்ற கதைகளும் அவனுடன் முடிந்து விட்டன. அவன் உயிருடன் பிடிபட்டு இருந்தால், அவனுக்கு உண்மை பேசும் சுதந்திரம் இருந்திருந்தால், இன்று நமது சுதந்திரக்கொடி ஏற்றி அதன் முன் பெருமையாக போஸ் கொடுத்த பல தலைவர்களும், அதிகாரிகளும், போலீஸ் துறையினரும், சிறையில் அமர்ந்து களி தின்னும் நிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கல்லாம். இது நடந்திருந்தால் நானும் இன்றைய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடி இருப்பேன்.


அதுவன்றி, சுதந்திரம் இந்தியாவில் யாருக்கு என்ற பெரிய கேள்வியுடன் பெரும் பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன்.


வாழ்க இந்தியா! ஒழிக ஊழல்வாதிகளின் சுதந்திரம்!

யாருக்குச் சுதந்திரம்?

இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் அறுபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் கிடைத்தது உண்மை. பெரும் முன்னேற்றம் கண்டதும், காண்பதும் உண்மை. ஆனால் இந்த அறுபத்தி இரண்டு ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சுதந்திரம் அடைந்த வர்க்கம் சில இருக்கின்றன. முக்கியமான சில:
௧. ஊழல் அரசியல்வாதிகளும் அவர்தம் குடும்பத்தினரும்.
௨. அவர்களை முழுதும் சார்ந்து வியாபாரம் நடத்தும், கள்ள, கீழ்த்தர வியாபாரிகளும் அவர்தம் குடும்பத்தினரும்.
௩. ஊழல் அரசியல்வாதிகளுக்கும், கள்ள வியாபாரிகளுக்கும், முழுதாக துணை சென்று பெரும்பொருள் ஈட்டும் ஊழல் அதிகாரிகளும் அவர்தம் குடும்பத்தினரும்.
௪. மிதமான அறிவு, மிகக்குறைந்த துணிவு, அதிக அளவு பயம் கொண்டு, அவ்வப்பொழுது அவர்கள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளை பொறுக்குவதில் பெருமை கொள்ளும், பெருவாரியான மக்கள்.
இவர்களுக்கு இருக்கும் சுதந்திரம், உண்மையான குற்றவாளிகளுக்குக் கூட கிடையாது. பிக் பாக்கெட், செய்பவனுக்குக்கூட பயம் உண்டு. பிடி படலாம். அடி உதை விழலாம் என்று. ஆனால் அவனிடம் கமிஷன் வாங்கி அவனைத்தப்பிக்க விடும் போலீசுக்கு எந்த பயமும் கிடையாது. பிக் பாக்கெட் செய்யும் ரவுடி பயந்து செய்வான் தன் தொழில். ஆனால் அவனிடம் கமிஷன் வாங்கும் போலீசுக்கு எந்த விதமான பயமும் கிடையாது. வாங்கற கமிஷனை வெட்கமில்லாமலும், அதிகார தோரணையுடனும் வாங்குவான். வெகு சுதந்திரமாக வாங்குவான். வாங்கும் அவனுக்கும் வெட்கம் கிடையாது. அப்பணத்தை செலவு செய்யும் அவன் குடும்பத்தினருக்கும் வெட்கம் கிடையாது.
அரசியல்வாதியின் கணக்கை கேட்க வேண்டாம். அவன் குறிக்கோள் நாட்டின் நன்மை கிடையாது. நாட்டைக்கெடுத்து, மக்களின் நலன்களை கெடுத்து தனக்கும், தன் விரிவான குடும்பத்தினருக்கும், பதவி, புகழ், பணம், தேடுகிறான். அவனுக்கு வழி வகுத்துக்கொடுப்பவன் மிக்கப் படித்த, பெரும் அறிவு கொண்ட உயர் நிலை அதிகாரிகள். அவர்களுக்கு அரசியல்வாதிகளின் கொள்ளையில் பங்கு பெறும் சுதந்திரம் உண்டு.
சாதாரண இந்தியன், முதுகு எலும்பு இன்றி பிறந்த உண்மை இந்தியன், இவற்றை கண்டும் காணாதது போல், கேட்டும் கேட்காதது போல், வேலைக்கு தினம் சென்று, உணவு தினம் உன்று, மெகா சீரியல் தினம் பார்த்து, வாழ்க்கையில் பரவச நிலை அடையும், புனிதமான உயிர் நிலை. அவனுக்கு சுதந்திரம் பற்றி கவலை இல்லை. அவனுடைய சுதந்திரம் கோலங்களிலும், தங்கமான புருஷனிடனும் ஆரம்பித்து, செல்வியில் முடிவடைந்து விடுகிறது.
வாழ்க இந்தியா! ஒழிக இவர்கள் சுதந்திரம்!

Monday, August 10, 2009

உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 6

தருமம் என்பதன் அர்த்தம் தெரியாதவன் தர்ம பால் யாதவ். அரசியல்வாதி என்கின்றன போர்வையில், அநியாயம் பல புரியும், ஆயிரங்களில் ஒருவன். காஜியாபாத் நகரில் கள்ளச்சாராயத்தில் துவங்கியது இவன் முறை கேடான வாழ்க்கைப் பயணம். இதில் இவனுக்கு குருவாக இருந்தவன், மகேந்திர சிங் பாட்டி என்பவன். பின்னர் அவனுக்கே விரோதியாகி அவனையே கொன்று தீர்த்தான். ஹரியானா மாநிலத்தில், இவனுடைய கள்ளச்சாராய விநியோகத்தில் இறந்தவர் எண்ணிக்கை முன்னூற்றி ஐம்பத்து.
கொலைக்குற்றங்கள், கொலை வெறித் தாக்குதல்கள், பண ஈட்டுக்காக கடத்தல்கள், தேச விரோதக் குற்றங்கள் என்று இவன் மீது இருக்கும் வழக்குகள் இருபத்தி ஐந்துக்கும் மேலாக உள்ளன. இவை அனைத்தும் அவனுக்கு முழு நேர அரசியல்வாதியாக, உயர் நிலை தகுதிகளாயின. பின்னர், உத்திர பிரதேசத்தில் பி.ஜெ.பி. அரசால் கைது செய்யப்பட்டான். இதன் உச்சம் என்னவென்றால், சில வருடங்களுக்குப் பிறகு, அதே பி.ஜெ.பி. யினால் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தான். பத்திரிக்கை உலக எதிர்ப்புக்கும், மக்கள் எதிர்ப்புக்கும் அசைந்து அவன் பதவி விலக்கப்பட்டான்.
இவன் சார்ந்துள்ள கட்சியின் பெயர், சமாஜ்வாதிக் கட்சி. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் துறை அமைச்சரானான். இக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ். அமிதாப் பச்சன் நண்பர் அமர் சிங்கும் இக்கட்சியை சேர்ந்தவர். ஜெயா பச்சன் ராஜ்ய சபா உறுப்பினர். ஜெயப்பிரதா பார்லிமெண்டு உறுப்பினர்.
சரி. டி.பி.யாதவுக்கு வருவோம். இந்த ஈனமான அப்பனின் கேடு கெட்ட பிள்ளை விகாஸ் யாதவ் உயர் வகுப்பு கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவன். முதல் கொலை நான் ஏற்கனவே எழுதிய ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கு. இதில் முக்கிய கொலையாளி மனு ஷர்மாவுக்குத் துணை போனவன். இக்கேடு கெட்ட பிள்ளையின் ஈனமான அப்ப்பன், பெரும் உதவி செய்தான், தண்டனையிலிருந்து தப்பிக்க.
டி.பி.யாதவுக்கு ஒரு பெண் பாரதி யாதவ். இவள் நிதிஷ் கட்டாரா என்பவனை காதலித்தாள். இதை விரும்பாத, விகாஸ் யாதவ் தன் ஒன்று விட்ட சகோதரன் விஷால் யாதவுடன் இணைந்து, நிதிஷ் கட்டாராவை, ஒரு திருமண விழாவிலிருந்து கடத்திச்சென்று மண்டையை உடைத்து, கொலை செய்தான். பின்னர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தான். அவனுடைய கொலை வாக்கு மூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறான்.

Sunday, August 9, 2009

அப்பு குப்பு உரையாடல் 9

குப்பு: அது சரி அண்ணே! இப்ப அவுரு மகன எதுக்கு போலீசு அரெஸ்டு பண்ணாங்க? ஒடம்பு சைசு ஒரு முழு ரோடு ரோலர் மாதிரி இருந்தாலும், பாவம் அண்ணே மூஞ்சியப்ப் பாத்தா பாலு குடிக்கிற பச்சப் புள்ள மாதிரி இருக்கு அண்ணே.
அப்பு: மொதல்ல அவுரு மகன் சரப்ஜோத் சிங்க போலீசு அரெஸ்ட் பண்ணல. அரெஸ்ட் பண்ணது சி.பி.ஐ. இன்னமும் சி.பி.ஐ. னா ஒரு மரியாதை உண்டு. அதுக்காகத்தான் லோக்கல்ல ஏதாவது தப்பு தண்டா, உள்ளூர் அரசியல்வாதி சதி பண்ணிடுவான்னா கேசை சி.பி.ஐ. கிட்ட குடு அப்படீங்கறாங்க.
பூனால பாடீல்னு ஒருத்தன். பெரிய கான்ட்ராக்டர். பெரிய தகிடுதத்தம். அவன் ஒண்ணும் நேர்மையானவனா தெரியல. ஆனாலும் அவன் செஞ்சதா சொல்லப்படற ஊழல ஈடு கட்ட, அஞ்சு கோடி குடு, பத்து கோடி குடுன்னதும் அரண்டுட்டான். கை விரல நீட்டிட்டான். பூட்டா சிங்கோட மகன், சரப்ஜோத் சிங் கையும் கலுவுமா பிடி பட்டுட்டான்.
அப்பா பூட்டா சிங்கு, நீ சொன்ன மாதிரி தான், என் பிள்ளை அறியா பிள்ளை. கை விரல குடுத்த கூட கடிக்கத்தெரியாது. பிற்படுத்த சமூகத்தினருக்காக நான் பலானது பலானதெல்லாம் செஞ்சிருக்கேன். இதப்பிடிக்காமோ அரசியல் சதி பண்ணிட்டாங்கன்னு, இருட்டுல போன சின்னப்புள்ள, பேயு பேயுன்னு பயந்து போயு அலறுமே, அது மாதிரி அரட்டுராறு பாவம். மோர சூடா குடுத்தா பயம் கொஞ்சம் தணியும்.
அதுக்கு மேல இருக்கு விழயம். கேளு. இந்த லஞ்சப்பணம் பேச்சு வார்த்தை எல்லாம் பூட்ட சிங்கோட ஆஃபீஸ் போன்ல நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு. ஆனா பாவம், அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது. சரப்ஜோத் சிங் வீட்டுல, துப்பாக்கியும் குண்டுகளும் பிடிபட்டிருக்கு. லைசென்சு இல்லேன்னு குற்றச்சாட்டு, ஆனா அப்பனுக்கும், பச்சப்பிள்ளைக்கும் ஒண்ணுமே தெரியாது.
அப்ப சொல்றாரு அரசியல் சதி. செத்தாலும் சாவேனே தவிர பதவியை ராஜினாமா பண்ண மாட்டேங்கறாரு. சொன்னத செய்யுங்க அண்ணாச்சி. நாங்க யாரும் வருத்தப்பட மாட்டோம். மாறா பூமி அன்னை மேல வேண்டாத வெயிட்டு கொஞ்சம் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படரவங்க கண்டிப்பா இருப்பாங்க.
வாழ்க இந்தியா! ஒழிக ஊழல் கலாச்சாரம்!

Tuesday, August 4, 2009

அப்பு குப்பு உரையாடல் 8

குப்பு: அப்பு அண்ணே! யாருண்ணே இந்த பூட்டா சிங்கு. அவருக்கு இப்ப என்ன பிரச்சினை?

அப்பு: இந்த பூட்டா சிங்கு, எழுபத்து அஞ்சு வயசு கிழடு. அரசியல் குட்டையிலே ஊரித் திளச்ச நீர் யானை. ஒரு காலத்துல மத்திய அமைச்சரவைலே மினிஸ்டரா இருந்தவரு. இன்னும் பல விழயங்க இருக்க. என்னத்தச் சொல்ல.

குப்பு: சொல்லுங்க அண்ணே! எனக்கு நீங்க சொல்லலேன்னா யாருங்க அண்ணே சொல்லுவாங்க, இந்த மாதிரி நம்ம ஜனநாயக நாட்டோட பெருந்தலைவர்களைப் பத்தி.


அப்பு: முக்கியமானத மட்டும் சொல்றேன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஊழல் வழக்குல நரசிம்ம ராவோட அவரும் ஒரு குற்றவாளி. பின்னர் குற்றத்திலிருந்து விடு பட்டார். அது அரசியல் சதின்னு அப்ப அவரு சொல்லல.

அப்புறம் பீஹார் கவர்னரா இருந்தாரு. மந்திரி சபையை கலைச்சாரு. செய்தது அநியாயம் என்று நீதி மன்றம் கூறியது. பின்னர் பதவி விலகினார்.
குப்பு: அவுரு எந்த கட்சிய சேர்ந்தவரு அண்ணே!

அப்பு: எங்க லாபமோ அந்த கட்சி. அகாலி தல் என்கிற கச்சில இருந்தாரு, பின்ன காங்கிரசுக்குப் போனாரு. அடுக்கு அப்புறம் பி.ஜெ.பி. மறுபடியும் காங்கிரசு. இப்ப காங்கிரசு அவுர கை உட்டிடுச்சு.
குப்பு: ஏண்ணே, காங்கிரசு கை வுட்டுடிச்சு?

அப்பு: பல விழயங்கள் இருக்கு அப்பு. இல்ல குப்பு. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாரியத்துக்கு தலைவரா இருக்காரு. அப்படி இருக்கும்போதே, விதிகளுக்கு புறம்பாக, தன் மகனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தாரு டெல்லில. போன எலெக்ஷன்ல காங்கிரஸ் சீட்டு கிடக்காம, தனித்து நின்னு, பி.ஜெ.பி. ட்ட தோத்துப் போனாரு. இது நடந்தது ராஜஸ்தான்ல. .............................................தொடரும்.

Sunday, August 2, 2009

உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 4

பிரியதர்ஷினி மட்டு. அழகானவள். அறிவாற்றல் மிக்கவள். எம்.காம். முடித்து டெல்லி மாநகரத்தில் சட்டம் படித்துக் கொண்டிருந்தாள். அதே கல்லூரியில் இருந்தான் மற்றொரு மாணவன் சந்தோஷ் சிங் என்று பெயர். உயர் அதிகாரியின் ஊதாரிப் பிள்ளை. அப்பொழுது அவன் தந்தை பாண்டியில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.
பிரியதர்ஷினியால் வசீகரிக்கப்பட்டு அவள் பின்னே சுற்றி வந்தான். நாகரிக எல்லைகளை மீறி அவளுக்கு ஈடூறுகள் விளைவித்தான். தன்னுடைய பின்னணியைக் காட்டி பயமுறுத்தினான். அவள் போலீசுக்கு புகார் செய்தாள். பல முயற்சிகளுக்குப் பிறகு அவளுக்குப் பாதுகாப்பு கொடுக்கப் பட்டது. ஆனால் காமுகன் சந்தோஷின் தொந்தரவுகள் அடங்கவில்லை. அவள் மீது குற்றம் சாட்டினான். சட்டப் படிப்பைத்தவிர விதிகளுக்குப் புறம்பாக எம்.காம். படிக்கிறாள் என்று. அது பொய் என்றும், அவள் அதற்கு முன்னரே எம்.காம். பட்டம் பெற்றிருந்தாள் என்று நிரூபணம் ஆனது. வெகுண்டு எழுந்தான் வெட்கம் கேட்டவன். மேலும் மேலும் இன்னல் கொடுத்தான்.
இதற்கு இடையே, அவன் தந்தை டெல்லி மாநகரத்திற்கு மாற்றலானார். போலீஸ் ஐ.ஜி. யாக. துணிச்சல் கொண்டான். பிரியதர்ஷினி வீட்டில் புகுந்தான். கற்பழித்தது மட்டுமன்றி, கழுத்தை நெரித்துக் கொன்றான். ஹெல்மெட் கொண்டு முகத்தில் பல முறை அடித்து, முகத்தை சின்னா பின்னமாக்கினான் கொடுமையாளன்.
கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. போலீஸ் துறை முழுமையாக கொலையாளிக்குத் துணையாக நின்றது. தீர்ப்பளித்த நீதிபதி, இவன் தான் கொலையாளி, ஆனால் போலீஸ் அதை முழுமையாக நிரூபிக்கத் தவறி விட்டது, என்று கூறி அவனை விடுதலை செய்தார்.
உயர் நீதி மன்றத்துக்கு சென்றது விவகாரம். கொலை செய்த வெறியன் காமுகன் சந்தோஷுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. இருக்கிறான் இப்பொழுது திஹார் ஜெயிலில். வழக்கு இப்பொழுது தலைமை நீதி மன்றத்தில் இருக்கிறது. தண்டனை கிடைக்கட்டும் கொலைகாரனுக்கு மட்டுமல்ல, அவனுக்குத்துணை போன அவன் தம் கேடு கெட்ட அப்பனுக்கும், அந்த அப்பனுக்கு துணை போன போலீசாருக்கும்.

உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 3

சென்னை என்றால், மெரீனா பீச்சு, வள்ளுவர் கோட்டம், அடையார் பாம்புப் பண்ணை, இது போன்று பல. இருபது வருடங்களாக இதோடு இணைந்தது மற்றும் ஒன்று. சரவணா பவனில் சுவையான டிஃபன், சாப்பாடு. முப்பது வருடங்களுக்கு முன்னர் பாண்டிய நாட்டிலிருந்து சென்னை வந்து, சிறு சிறு வேலைகள் செய்து, ஓட்டல் தொழில் துவங்கி, அதை உலக அளவில் உயர் ஒரு நிறுவனமாக உருவாக்கியவர் திரு.இராஜகோபால். பெரும் சாதனையாளர். இன்று அவர் எங்கே?
பக்தி என்ற போர்வையில் மூட நம்பிக்கையில் ஊறி, ஒன்றுக்கும் மேலாக திருமணம் செய்து, அதுவும் போதாமல், மாற்றான் மனைவிமேல் ஆசை கொண்டு, அவள் கிடைக்காமல், ஆட்கள் அனுப்பி அப்பெண்மணியின் கணவனை கொள்ளத்துணிந்தான். பத்து வருடம் சிறை தண்டனை பெற்று, ஜாமீனில் வெளி வந்தான். மறுபடியும் வாதாடினால் தண்டனை காலம் குறையும் என்று கணக்குப் போட்டான். ஆயுள் தண்டனை என்றவுடன் அழுது அரற்றினான்.
கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் அவர்தம் அருமை மகன் அமெரிக்க விசா விவகாரத்தில் கைது செய்யப்பட்டான். அப்பன் எவ்வழி அருமை மகன் அவ்வழி. என்ன ஒரு குடும்பம்? என்ன ஒரு குடும்ப கவுரவம் மற்றும் பெருமை?
ஒழுக்கம் இழந்தவன் நல்வாழ்க்கையை இழப்பான்.
வள்ளுவர் சரியாகச் சொன்னார்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

உயர் சமூகம் அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 2

வினோத் ஷர்மா என்பவன் ஒரு முன்னாள் ஹரியானா மாநில அமைச்சர். அவனோட தறுதலை பிள்ளை மனு ஷர்மா. நண்பர்களுடன் உயர் விலை கார்களில் ஊர் சுற்றுவதும், நாளையும் இரவையும், மதுவுடனும், தரம் கெட்ட மாதர்களுடனும் போக்குவதுதான் இது போன்ற பல உயர் வகுப்பு, பொருளாதாரத்தில் உயர் வகுப்பு தருதலைப்பிள்ளைகளின் பொழுதுபோக்கு.
அது போன்றே ஒரு இரவு திரிந்து அலைந்தவன், ஜெச்சிக்கா லால் என்பவளை சுட்டுக்கொன்றான். அவனுடன் கூடவே இருந்தனர் அமரீந்தர் சிங், அவனுடைய நண்பன் ஆலோக் கன்னா மற்றும் விகாஸ் யாதவ். இதில் விகாஸ் யாதவ் என்பவன் உத்தர் பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு ராஜ்ய சபா உறுப்பினரின் தறுதலை மகன்.
இக்கொலைக்கு பிறகு, வேறு வழியில்லாமல் மனு போலீசில் சரணடைந்தான். கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தான். பின்னர் தனக்கும் ஜெஸ்ஸிகா லால் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான். தருதலைப்பிள்ளையின் தரம் கெட்ட அப்பன் சாட்சியங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தான். பிடி பட்டான். தன் அமைச்சர் பதவியை விட்டு விலகினான்.
கொலையாளிக்கு வாதாட விலை உயர் சட்ட நிபுணர்கள். அவனுக்காக வாதாடியது மட்டுமல்லாமல் தரம் கெட்டு பதப்பித் திரிந்தார்கள். மக்கள் முட்டாள்கள் என்றனர். குற்றத்தை திசை திருப்ப முயற்சித்தனர். கேடு கெட்ட காவலர்கள் துணை போனார்கள்.
ஷயன் முன்ஷி என்பவன் கொல்கத்தாவில் ஒரு கண்மருத்துவரின் மகன். உயர் தர பள்ளிகளில் பயின்றவன். கொலையை நேரில் பார்த்தவன். முதலில் பார்த்ததாகச்சொன்னவன், பிறகு மாற்றி மாற்றி பேசினான். பெண்டாட்டியுடன் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றான். விமான மையத்தில் பிடி பட்டான்.
காவலர்கள் சோரம் போனார்கள். வழக்கறிஞர்கள் உண்மை அதாவது அன்னையை விற்கத் துணிந்தார்கள், காசுக்காக. நீதிபதிகள் தடுமாறினார்கள். பதவிகளில் இருப்பவர்களின் அதிகாரத்திற்கு பயந்தார்கள். மக்களும், பத்திரிக்கை உலகமும் வெகுண்டு எழுந்தனர். மனு ஷர்மா ஆயுள் தண்டனை பெற்றான். அவன் நண்பர்கள், கொலைக்கு உடந்தையானவர்கள் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.
வினோத் ஷர்மா, தருதலைப்பிள்ளையின் கேடு கெட்ட தந்தை இன்னமும் அரசியல் வியாபாரம் பண்ணிக்கொண்டுதானிருப்பான் என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் எதுவும் சாத்தியம்.

உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 1

நந்தா என்பது இவர்கள் குடும்பப்பெயர். தாத்தா நந்தா அதாவது எஸ்.எம்.நந்தா இந்திய கடற் படையில் அட்மிரல் பதவி வகுத்தவர். இப்பொழுது அவர் தம் மகன் சுரேஷ் நந்தாவும், பேரன் சஞ்சீவ் நந்தாவும் செய்யும் தேச விரோத செயல்களைப் பற்றிக் கேட்கும்பொழுது, எஸ்.எம்.நந்தா மீதும் சந்தேகம் வருகிறது. அந்த ஆளு கடற் படை தலைவராக இருக்கும்பொழுது, நாட்டுக்கு என்னென்ன பாதகம் செய்திருக்கக் கூடும் என்று நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது. எனென்றால், சுரேஷும், சஞ்சீவும் செய்திருக்கும் செயல்களை நினைத்தால் குடும்பமே ஒரு உயர் சமூகத்தின் ஒரு கேடு கெட்ட அங்கமாக புலப்படுகிறது.
பேரன் சஞ்சீவ் நந்தா அதிகாலை நேரத்தில் குடி போதையில் தன் பி.எம்.டபில்யூ. காரை நூற்றி நாற்பது கிலோ மீட்டெர் வேகத்தில் ஓட்டி, ஆறு பேரை கொன்று, சிறிதும் ஈவிரக்கம் இல்லாமல் வண்டி ஓட்டி மறைந்தான். கூடவே இருந்த நண்பன் வீட்டிற்கு ஓட்டிச் சென்று, நண்பனின் தந்தை மற்றும் வேலைக்காரர்களின் உதவியுடன் வண்டியை சுத்தமாகக் கழுவி சாட்சியங்களை அழித்தான்.

மனோஜ் என்று ஒருவன் தப்பிப்பிழைத்தான். உயர் சமூக அநீதியாளர்களுக்கு விலை போனான். ஏற்றிக்கொன்றது லாரி என்று பொய் வாக்கு மூலம் கொடுத்தான். அதற்குப்பிறகு மனோஜ் முழுவதுமாக காணாமல் போனான்.

சுனில் குல்கர்னி என்பவர் தானாகவே சாட்சி சொல்ல வந்தார். சஞ்சீவ் நந்தா விபத்துக்குப் பிறகு வண்டியில் இருந்து இறங்கி, வண்டிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்ததாகச் சொன்னார். காலம் கடந்து செல்ல தடுமாற்றத்துக்கு உள்ளானார். பாவிகள் அவரை எப்படி எல்லாம் பயமுறுத்தினார்களோ.

இதற்கு உச்சி கட்டமாக, உயர் நிலை வழக்கறிஞர்கள் ஆனந்தும், கானும், வெட்கங்கெட்டு, சாட்சிகளை மாற்றும் ஈனமான செயலுக்குத் துணை போனார்கள். இதைத்தவிர சுரேஷ் நந்தா பாரக் மிசைல் ஊழலில் குற்றவாளி. மேலும் தந்தையும், மகனும், அதாவது சுரேஷும், சஞ்சீவும் வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கையில், மும்பை மாநகரித்தில் கைதானார்கள்.

எந்த விதத்தில் பார்த்தாலும், உயர் குடும்பத்தில் பிறந்து, உயர் படிப்பு படித்து ஈனமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட, ஈடுபடும் நந்தா குடும்பம் வேரோடு களையப்பட வேண்டியது நாட்டுக்கு அவசியம். ஈனச்செயல்களுக்கு துணை போன அனைத்து குடும்ப உறுப்பினர்களும், ஆனந்தும், கானும் வாழ்க்கை முழுவதும் சிறையிடப்பட வேண்டும்.

Saturday, August 1, 2009

மாறனும் மதுரை வீரனும்

பார்லிமென்ட் களை கட்டி விட்டது. மாறனும், மதுரை வீரனும் ஒரே குழுவில். தம் உயர் கொள்கைகளுக்காக, அவற்றை நிலை நாட்டுவதற்காக இவ்வுயர் தமிழ்த் தலைவர்கள் எந்த ஒரு தியாகமும் செய்வார்கள். அவர்கள் நினைவில் ஆழந்து நிலைத்திருப்பது, நாட்டின் நலனும், அதில் அவர்கள் பங்கு மற்றும் தான். அதற்காகவே தான் இருவரும் ஒன்று இணைந்து தாய் நாட்டின் தலை நகரில் செங்கோல் ஆட்சியில் அமரச் சென்று விட்டார்கள்.
இருவரும் இனி அடிக்கடி சந்தித்து, மதுரை மாநகரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அநியாயத்துக்கு நீதி தேடுவார்கள். கொலையாளிகளை கூண்டில் ஏற்றுவார்கள். கொலையுண்டவரின் குடும்பம் மாறனுக்கும், மதுரை வீரனுக்கும் நன்றி கூறும்.

வாழ்க மாறனும், மதுரை வீரனும்! செத்தொழிக கொலை செய்தவர்களும், அதைத் தூண்டியவர்களும், மற்றும் அதன் காரண கர்த்தாக்களும்!
காத்திருக்கிறோம், செங்கோல் மன்னர்களே! நீதி வழுவா தலைவர்களே! நெஞ்சுக்கு எப்பொழுதும் நீதி தேடும் தமிழினத்தலைவனின் குடும்பக்கொழுந்துகளே! சீக்கிரம் மதுரை வந்து வழங்குங்கையா நீதி.
செத்து ஒழிந்தது சாமானியத் தமிழனாக இருந்தாலும், வளர்வது தலைவனின் பிறப்புகளாக இருக்கட்டும்!

KNOW OUR CENTRAL MINISTER FROM TAMILNADU

Many of my colleagues and friends outside Tamilnadu, have been regularly, over conversations asking me "Who is this Azhagiri? What is his background for being a central minister besides the fact that he is one of the sons of one of the wives of Karunanidhi.

Whatever I tried to tell them, they were least convinced. Recently I searched out the article on Karunanidhi in Wikipedia and passed on the following and they were fully convinced about his eligibility to become a minister in the central governement. A portion of the article says that

"Because the Dinakaran Newspaper (run by the Maran brothers) has shown M.K. Stalin of having the possibility to be the next Chief Minister of Tamilnadu which created a bloody violence in the Madurai branch of Dinakaran office (carried out by M.K. Azhagiri), causing the death of three employees".

இத்த பாருய்யா வேடிக்கய

முனியா, வெங்கைய்யா, கருப்புசாமி, கோதண்டம் வாங்கையா வாங்க, பாருங்கையா வேடிக்கய. அண்ணன் ஸ்டாலினுக்குக் குடுத்துட்டாங்கயா டாக்டருப் பட்டம்.
இதுல என்ன அண்ணே வேடிக்க?
அவருக்கு டாக்டரு பட்டம் கொடுத்தது ஒண்ணும் வேடிக்க இல்ல. இனிமே தான் இருக்கு வேடிக்க!
என்னண்ணே புதிர் போட்டே பேசுறீங்க.
இதில என்னடா புதிரு? நம்ம கலைஞரோட புள்ளைங்களுக்கு நல்லது எது நடந்தாலும் அவருக்கு ஆரம்பிச்சுடும் தொல்லை. ஒரு பொண்டாட்டிய கல்யாணம் பண்ணிக்கிட்டே நம்மல்லாம் அப்பப்ப தடுமாறிப் போறோம். கலைஞரு பாவம் மூணு பொண்டாட்டிக்காரருப்பா. இருக்காதா பிரச்சினை!
அவருக்கு என்னண்ணே இந்த விழயத்துல பிரச்சினை வரும்.
அவரு பிரச்சினை அவருக்கு. ஒண்ணு நிச்சயமா எதிர்பார்க்கலாம். அண்ணா பல்கலைக்களகத்துக்கு தாங்க ஒண்ணும் குறைஞ்சவங்க இல்லேன்னு, தமில் நாட்டுல இருக்குற மத்த பல்கலைகளகங்க போட்டி போட்டுக்கிட்டு கலைஞரோட மத்த புள்ளைங்களுக்கும், மச்சான் புள்ளைங்களுக்கும் டாக்டரு பட்டம் ஒவ்வொருத்தருக்கா, குடுக்கறாங்களா இல்லையா பாரு. குடுக்கலேன்னா விட்டுருவாங்களா?