Saturday, June 13, 2009

புதுப் புதுச் செய்திகள்

புதியன புகுதலும், பழையன கழிதலும், தினம் தினம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயங்கள் தான். ஆனால், அரசியல் அநாகரீகங்களும், ஒழுங்கீனங்களும், மிகப்பெரும் அளவு ஊழல்களும், பெருமளவு, அன்றாடம் புகுந்து, பத்திரிகைகளுக்கு கொண்டாட்டம் தான். இன்று ஒரு செய்தி. நாளை வேறு புது செய்தி. மக்களுக்கு தினம் தினம் மகிழ்ச்சி. மருத்துவர் ஜகத்ரக்ஷகன் செய்தி வந்து அந்த ரீல் இரண்டு நாட்களுக்கு ஓடியது. மூன்றாவது நாள் பத்திரிகைகளும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டார்கள். அதற்குள் என்.சி.பி. கட்சித்தலைவர் கொலை வழக்கில் கைதான செய்தி. ஒன்றுக்கு ஒன்று மிஞ்சும் செய்தி. மக்களுக்கோ தினம் தினம் மகிழ்ச்சி. தினம் தினம் மறதி. இன்னைக்கு பிக் பாக்கெட்டு செய்தின்னா, நாளைக்கு முடிச்சு அவுக்கி செய்தி, மத்தா நாள் வீடு புகுந்து கொள்ளை அடித்தவன் கதை. அதற்கு அடுத்தநாள் கற்பழிப்பு, கொலை செய்தவன் கதை. இவர்களெல்லாம் சொத்த்துக்கு வழியில்லாம தெருப்போருக்கும் பொறுக்கி கூட்டத்தினர் அல்ல. இவர்களெல்லாம் அரசியல் வாதிகள். தலைவர்கள்.எம்.எல்.ஏ.வாக, எம்.பி. யாக இருந்தவர்கள் இருப்பவர்கள். ஏன்? இதில் அமைச்சர்கள் கூட உண்டு. உலகின் தலை சிறந்த குடியாட்சியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள்.
வெட்கக்கேடு - அரசியல் தலைவர்களுக்கல்ல. அவர்களுக்கு ஒட்டுப்போட்ட ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும்.

Friday, June 5, 2009

தார்மீகப் பொறுப்பு

எங்க வூட்டுப் பக்கத்தில ஒரு சீனியர் சிட்டிசன் இருக்காரு. அந்துருண்டை போட்டு காப்பாத்தின பழைய சமசாரங்களெல்லாம் அப்பப்ப எடுத்து வுடுவாரு. காமராசு, காமராசு, அவரு கொள்கை வழில வந்தவங்கன்னு, சொல்ராங்களே இவங்கெல்லாம் இப்ப, அவரு இறந்தப்ப அவருக்குன்னு எந்த வித சொத்து பத்தும் கிடையாது. கக்கன், கக்கன்னு, ஒரு அமைச்சர் இருந்தார் தமிழ் நாட்ல. தாழ்த்தப் பட்ட வகுப்பினரை சேர்ந்தவர். அவர் போக்குவரத்துக்கு டவுன் பஸ் தான். லால் பஹதூர் சாஸ்த்ரி இரயில் துறை அமைச்சரா இருந்தார். அறியலூர்ல ஒரு டிரெயின் ஆற்றில் விழுந்தது. அதுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று தன் பதவியை உடனே ராஜினாமா செஞ்சாராம்.
சொல்லு உடன் பிறப்பு. இந்த அந்துருண்ட கதையெல்லாம் சொல்லி, டாக்டர் அய்யா, அவரு தான், டாக்டர் ஜகத்ரக்ஷகன், அமைச்சர் பதவி விலகணும்னு ஒளர்ராறு. இது என்ன வெறும் ரயில் கவுரற விஷயமா? கோடிக்கணக்கான சொத்து கவுர்ற விஷயம். அதுவும் என்ன, தெரியாமலா டோனேஷன் வாங்கறோம். இதுக்காக எவ்வளவு வருஷ உழைப்பு. அதிகமா சொல்ல வேண்டாம். தன் மானத்தை விட்டு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்குன்னு பண்றவங்களுக்குத்தான் தெரியும். தன் மானமாம், தார்மீகப் பொறுப்பாம், வெங்காயம், இதெல்லாம் வெட்டிப்பேச்சு. சீனியர் சிட்டிசன் பேச்சு.
விசாரண தாண்டி, வழக்கு நடந்தா அதுவும் தாண்டி, பதவிய பத்திரமா பாதுகாத்தாத்தான், அவர் நெஞ்சுக்கும், எங்கள் தலைவர் நெஞ்சுக்கும் உண்மையான நீதி கிடைக்கும்.

SINGH IS THE KING 3

Last time when I wrote on this topic, Dr.Manmohan Singh was forming his ministry. Karunanidhi and company pushed themselves ahead and got his son and grand nephew in to the ministry. Dr.Singh stated clearly that when we have to run the government we also have to look into it's effectiveness.
The first scam is out. Times of India's investigation has put minister Jagathrakshakan in a spot. Will Dr.Singh be a Rakshakan for Jagathrakshakan or simply the Jagath. We will have to wait and watch.
The initial response from Kapil Sibal is encouraging. But will he or anyoneelse take full responsibility, go ahead, reveal the truth and help the country's justice system punish the guilty.
It is a great opportunity for the Singh's ministry to control the alliance parties' arm twisting for ministerial berths. Jagath, must be removed unceremoniously and the people of the country will be with 'Singh the King'

Thursday, June 4, 2009

முகத்தில் கரி!

யார் முகத்திலையா கரி? எங்க டாக்டரையா முகத்திலையா? அவரு எப்படி டபாய்ச்சாரு பாத்தியா! முட்டி மோதி பேப்பர் காரங்க நேர்ல வந்தவுடனே டாக்டரு அய்யா எவ்வளுவு தெளிவா பதில் சொன்ன்னாரு படிச்சியா? அந்த காலேஜுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு. எப்பவோ பாவம் எல்லாரும் கேட்டாங்களேன்னு டிரச்டியா இருந்தார். அதுவும் ஒரு பொது நலப் பணியாகத்தான். நெட்டுல பாத்தாங்கலாமான்! அவுரு தான் சேர்மனாம். நெட்டுல எவன் வேணா எது வேணா போடுவான் எல்லாம் உண்மையாயிடுமா?
போகப்போக பாரு. அவரு விசாரணை, வழக்கு எது வந்தாலும் எப்படி சந்திப்பாருன்னு. மக்கள் வரிப்பணம் வீணா தண்ணியா செலவாகும். நாட்கள் ஓடும், மாதங்கள் ஓடும், வருடங்கள் ஓடும். அய்யா, நமது உடன்பிறப்பு, கரை படியாம, சின்ன நெஞ்சுக்கு ஒரு சின்ன நீதியோட பளபளப்பாரு. வரிப்பணத்தை வீணா வெட்டி வேலையா விசாரணைக்கும், வழக்குக்கும் குடுத்த மக்களின் முகத்தில் கரி.
என்ன, ஒரே ஒரு சிக்கல். அடுத்த வருஷம் இந்த டொனேஷன் பணத்தை இருபதிலேருந்து, முப்பது லட்சமாக்க வேண்டி வரும். பின்ன, விசாரணைக்கும், வழக்குக்கும் லட்ச லட்சமா செலவு பண்ண பணம் எவன் குடுப்பான்.
வாழ்க இந்தியா! வளர்க சுதந்திரம்! அரசியல் புரிவோரின் அளவு கடந்த சுதந்திரம்!

ஆரம்பிச்சிட்டங்கைய்யா, ஆரம்பிச்சிட்டாங்க!

நேத்திக்கு, தமிழ் நாட்டுக்கு ஆயிரத்து சொச்சம் மைல்கள் தூரத்தில் உட்கார்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரை வாங்கியதும், முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தமிழ் நாட்டுச்செய்தி. மத்திய அமைச்சர் ஜகத்ரக்க்ஷகனுக்கு சொந்தமான கல்லூரியில் மருத்துவக் கல்விச் சீட்டுக்கு இருபது இலட்சம் ரூபாய் வேண்டினார்கள்.
ஏங்கையா! என்னய்யா புதுசா கண்டுபிடிச்சிட்டீங்க? என்னமோ உலக மகா அதிசயத்த கண்டுபிடிச்ச மாதிரி. எவ்வளுவு வருசக்கணக்கா, பல பேரு, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம, உருப்படியா எந்த வேலையும் செய்ய, அதற்கு உண்டான படிப்பு இல்லாம, பொறுக்கிகளாய் திரிந்து, அரசியலே சிறந்த தொழில் என்று அதில் புகுந்து, தங்களோட முழு வாழ்க்கையையும் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள்.
இந்த மாதிரி பொதுப்பணிக்காக தங்களோட வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது சில நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். இதப்போய் பெரிசு பண்றீங்களே! இப்படி வாங்கற பணத்தை பூரா அவங்க என்ன அவங்க வூட்டுக்கேவா தூக்கிட்டிப் போறாங்க? எவ்வளவு பேருக்கு தினப்பட்டுவாடா, மாதப்பட்டுவாடா, வருடப்பட்டுவாடா - இதெல்லாம் புரியாம வம்பு பண்றீங்களேய்யா!
இதெல்லாம் மீறி, சுருட்டற பணத்தை சுவிஸ் பாங்கில கொண்டு போய் சேக்கிறதுக்கு படர பாடு, மாத சம்பளத்துக்கு வேலை பாத்து, கம்பனி செலவுல பேனாவும் பேப்பரும் வாங்கி கிறுக்கரவுங்களுக்கு எங்க தெரியும்.
இதுக்கு நடுவுல அத்வானியும், மோதியும் புருடா உட்டாங்க. சுவிஸ் பாங்கில இருக்குற பணத்தையெல்லாம் வெளில கொண்டு வருவோம்னு. நல்ல வேளை - அவங்க கட்சி ஊத்திக்கிச்சு. இதனால்தான் மதச்சார்பு கட்ச்சிகளோட உறவே வச்சுக்கல.
சரி அத வுடு! டாக்டர் சீட்டுக்கு இருபது லட்ச ரூபா குடுத்தா என்ன தப்பு! டாக்டர் ஆயி வெளிய வந்ததும் எவ்வளுவு வழி இருக்கு சம்பாதிக்க. நேர்மையா இருந்து சில ஆயிரம் பார்க்கலாம். ஆனா அந்த மாதிரி ஆளு எங்க காலேஜுக்கு ஏன் வரான். இருபது லட்சம் குடுத்து வரவன் சில வருஷங்கள்ல பல கோடி பார்ப்பான். மருத்துவ உதவியிலிருந்து, நீலப்படம் வரைக்கும்.
மறுபடியும் சொல்றேன் - சாதாரண, மரியாதையான குடும்பத்தில் பிறந்து, படிப்புகள் படித்து, மாத சம்பள சாமானியனுக்கு இதெல்லாம் புரியாது. இதெல்லாம் புரியணும்னா, தெருப்பொறுக்கியா சுத்தி, சோடா பாட்டில் வீசி, கட்ச்சித்தொண்டனா இருந்து, கை கால் பிடித்து, வாழ்க்கைல முன்னுக்கு வந்திருக்கணும். புரியுதா உடன்பிறப்பே?

Tuesday, June 2, 2009

செக்யுலர் - மிகப்பெரிய பொய்

இந்திய அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் கடந்த ஐம்பத்து இரண்டு வருடங்களில் மிகச்சரியாகப் பணியாற்றி இருக்கிறார்கள். இந்திய மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு முழுவதுமாக வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். இன்று நாம் இந்தியர்கள், மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் பிரிக்கப்பட்டு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்கின்றன மிகவும் தேவையான உணர்வு இன்றி, ஒருவரிடம் ஒருவர் விரோதப்போக்கு கொண்டு திரிகிறோம்.
அது மட்டுமன்றி, தேசப் பற்று என்பது அறவே இல்லாமல், வெளி நாடுகளில் செய்யத்துணியாத செயல்களை, நமது அன்னை திரு நாட்டில் தயங்காமல் செய்கிறோம். சாதாரண இந்திய குடி மகன், இன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையோ, அல்லது அரசியல் வாதியையோ வெறுத்து ஒதுக்குவதில்லை. அவர்களிடம் அடிபணிந்து, கால்கள் பற்றி, தன் காரியங்களை சாதிக்கத் துணிந்து விட்டான். தன் மானம் என்ற பெரும் பொக்கிஷத்தை இழந்து, தன் லாபம் தேட இறங்கிவிட்டான். அரசியல்வாதி வென்று விட்டான். .......தொடரும்

Sunday, May 31, 2009

செக்யுலர் - மிகப் பெரிய பொய்

நமது இந்தியா ஒரு செக்யுலர் நாடு. அனைவரும் சமம். சாதி மத வேறுபாடு கிடையாது. இந்திய நாட்டின் சட்டங்களுக்கு முன்னர், அனைவரும் ஒன்றே. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த ஐம்பத்து இரண்டு வருடங்களில் சொல்லப்பட்டு, நெய் ஊற்றி வளர்க்கப்பட்டு, உலகத்தை நம்ப வைத்ததாக உணரப்படும் மிகப்பெரிய பொய் இதுதான்.
மிகவும் கவனமாக, நாடு சுதந்திரம் அடைந்த தினத்திலிருந்தே, அல்லது அதற்கு முன்னாலிருந்தே, திட்டங்கள் தீட்டி, நம் அரசியல் வாதிகள் இந்தியர்கள் அனைவரையும், மொழியால், இனத்தால், மதத்தால் பிரித்து லாபம் அடைந்தார்கள், அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்து - இஸ்லாம் பிரிவினை மிகப்பெரியது. இதை நாட்டின் தெற்கில் வாழ்பவர்கள் உணர்வது சிரமம். இரண்டு மதத்தினருக்கும் இடையே இருக்கும் இடைவெளி, வெறுப்பு, விரோதம் எளிமையாகத் தீர்க்கக்கூடிய விஷயமல்ல. பற்பல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் கடுமையாக உழைத்து, இடைவெளியை அதிகப்படுத்தினார்கள். அதனால் பற்பல பெரும் லாபம் ஈட்டினார்கள்.
இன்று உண்மை நிலை இது தான். மேற்கிலும், வடக்கிலும், மற்றும் பல பிரதேசங்களிலும், இந்துக்கள் வாழும் இடங்களில் இஸ்லாமியர் வாழ முடியாது. இஸ்லாமியர் வாழும் இடங்கள், மினி பாகிஸ்தான் என்று அழைக்கப் படுகின்றன. மும்பையிலும், மற்றும் குஜராத்திலும், இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்து, பாகிஸ்தான் குழு வெற்றி பெற்றால், சில விஷமிகள் வெடி வைத்து கொண்டாடி விரோதத்தை வளர்த்தார்கள்.
தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் என்னிடம் ஒரு இஸ்லாமிய நண்பர் கூறினார் "அல்லா வாக்குப்படி, ஒரு நாள் இல்லை ஒரு நாள், உலகம் முழுதும் இஸ்லாமிய மதம் மட்டுமே இருக்கும். அதைச் செய்து காட்டுவது ஒவ்வொரு இஸ்லாமிய மதத்தினரின் கடமை"
இது போன்றே எண்ணங்களை வளர்த்ததில் மதத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பெரும் பங்கு ஆற்றினர். தங்கள் லாபங்களை பங்கு போட்டுக்கொண்டனர். நஷ்டங்களை பொது மக்களாகிய நாம் மட்டுமே அனுபவிக்கிறோம் . மத பாகு பாடின்றி. .....................தொடரும்