Tuesday, September 11, 2012

எதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை 2

சென்ற வருடம் ........................ சில துளிகளுடன்:

அதில்லடா. பெரியார் சாமி இந்த பூமில ஈ. வே. ராமசாமி நாயக்கரா அவதரித்த போது நாத்திக மதம்னு ஒரு மதத்த ஆரம்பிச்சாரு. அந்த மதத்துல இருந்தவங்களுக்கு, சில கடுமையான விதிகள் இருந்துச்சு. கருப்பு சட்ட போடணும், கருப்பு துண்டு போர்த்தனும், நெத்தில விபூதி, குங்குமம் இதெல்லாம் இடக்கூடாது. பெண்கள் கல்யாணம் ஆனாலும், ஐயற கூப்பிட்டு, ஹோமம் வளக்கறது, தாலி கட்டறது இதெல்லாம் கூடாது.


கல்யாணத்துல பின்ன வேற என்னம்மா செய்வாங்க?


அதுவா! பெரியார் சாமியோட பக்தர் யாரையாவது கூப்பிட்டு அவர் தலைமையில கல்யாணத்த நடத்துவாங்க. அந்த பக்தரும், ஒரு அரை மணி நேரம் பார்ப்பன வசவுப்பேச்சு, கடவுள் இல்லை பேச்சு பேசி கல்யாணத்தை முடித்துக் கொடுப்பார்.


ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கு - இன்னும் சொல்லுங்க அம்மா


தலைக்கு மேல வேல இருக்குடா. அடுத்த ஞாயித்திக்கிழம மத்தியானம் வீட்ல தான இருப்ப, அப்ப சொல்றேன். . . . ... தொடர்கிறது:


பெரியார் சாமி, சமுதாய சீர்திருத்தவாதி. சமுதாயத்தில அப்பா இருந்த ஜாதி வேறுபாடுகள், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்கின்றன வேறுபாடுகள், ஒருவரை ஒருவர் இழிவு படுத்தியும், அழித்தும் வாழ்வதை தடுத்து நிறுத்த ஜெஸ்டிஸ் பார்ட்டி என்று ஒரு கட்சி ஆரம்பித்தார். அதன் சின்னம் 'தராசு'. எலெக்ஷன்ல நின்னு ஆட்சியப் பிடிக்க அவர் விரும்பல. அத ஒரு சமுதாய சீர்திருத்த நிறுவனமாகவே நினைத்தார். பின்னர் அதன் பெயர், திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது.


சரிம்மா! பெரியார் சாமி, சாமியாரா? அரசியல்வாதியா? கடவுளின் அவதாரமா? இல்ல இந்த எதுவுமே இல்லையே?


மொதல்ல அவுரு சாமியார் இல்ல. ஏன்னா அவரோட மதமே நாத்திக, அதாவது கடவுளை நம்பாதவர்களோட மதம்.


ரொம்ப கனஃபியூஸ் பண்றம்மா! ராசாமணி சாமிய கேட்டா, பெரியார் சாமியும், மணியம்மை அம்மனும் தான் எங்க சாமிங்கங்கறான்.
சச்சின் டெண்டுல்கரின் செல்வாக்கு! 

நானும் கிரிக்கெட் விளையாட்டு வீரார் சச்சின் டெண்டுல்கரின் ரசிகன் தான்.  சச்சின் மைதானத்தில் இறங்கி விட்டால், என்னை சுற்றி இருப்பவை, நடப்பவை   அனைத்தையும் மறந்து விடுவேன். ஆனாலும் எந்த ஒரு தனி மனிதரையும்  கடவுள் நிலையில் வைத்துப் பார்ப்பதற்கு என் மனம் என்றும் ஒப்பியதில்லை. எந்த ஒரு மனிதரும் தன துறையில் சாதனைகள் பல ஆற்றியுள்ளார் என்பதற்காக அவர் ஒரு  உன்னத மனிதர் என்று நான் முடிவு செய்ததில்லை. அது தேவையும் இல்லை - என் எண்ணப்படி.

சச்சின் ஒரு தலை சிறந்த  விளையாட்டு வீரர். ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே பல  லட்சங்கள், பற்பல பரிசுகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.  இனாமாக எந்த ஒரு செயலையும் அவர் செய்து விட வில்லை. பல நற்செயல்களை அவர் தனி மனிதனாக செய்து கொண்டிருக்கலாம். அது அவர்தம் தனி மனித விவகாரம்.

ஆனால் அவரை ஒரு கொடையாளி போல், தேச அபிமானி போல், தியாகங்கள் பல செய்தவர் போல் பரிமளித்துக்  காட்டுவதில் எனக்கு எந்த  ஒரு உடன்பாடும்  இல்லை. இப்பொழுது அவர் ராஜ்ய சபா உறுப்பினரும் கூட. என்ன செய்கிறார் என்று பார்ப்போம். 

சச்சின் டெண்டுல்கர்   போன்ற  பல சாதனையாளர்களை நாம்  வானளாவப்  புகழ்ந்துப் பேசும்போது ஒரு  விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது. இந்தியாவில் பொழுது போக்கு  அம்சங்கள் இல்லாத,  முழுமையாக  இந்திய நாட்டின்    முன்னேற்றத்திற்காகவும்,  இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இயங்கும் பற்பல துறைகளில் பணியாற்றும் சாதனையாளர்கள்   மாதத்தில் வருமானமாகக் கொண்டு செல்வது சில ஆயிரங்களே. ஆனால் நாட்டிற்காக அவர்கள் ஆற்றும் பணி, அளவிட முடியாதது. 

என்ன செய்வது? பொழுதுபோக்கு விஷயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நமக்கு உணவளித்து வறுமையில் வாடும் ஒரு ஏழை விவசாயிக்கு நாம் கொடுப்பதில்லை.  நமது கலாசாரம் இன்னும் வளரவில்லை. மாறாகத் தேய்ந்து கொண்டிருக்கிறது.

Monday, September 10, 2012

Do you think that Shri.Narendra Modi will be our next Prime Minister?

When we rise this question, due to the fact that many young men and women across the country are raising their voices every day in various media and expressing their wish to see Modi as the next Prime Minister of India, I have few other questions in my mind to have clarity on this subject and to anticipate the events in future. 

The first and foremost question is that "Does Modi want to leave Gujarat and go back to Delhi, from where he came to occupy the present seat?

Secondly when Mr.Modi has set certain standards of Governance in Gujarat and is eager to see that Gujarat is the most progressive model in the country, is their any other person in BJP fold and in Gujarat who can take his mantle and maintain the same standard and ensure further progress?

Thirdly, but most importantly "Do the most influential leaders in BJP and other allied parties too want Modi to be next Prime Minister if NDA wins the next elections? Will they support Modi's candidature without any bargain?

Your thoughts through your comments will certainly help me to bring in more clarity to my thoughts and move forward in writing the blog.
மோதி பிரதமர் ஆவாரா?

இந்தியாவில் பற்பல மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் குரல்கள் ஒலித்துக்  கொண்டே இருக்கின்றன. நரேந்திர மோதி, இந்திய நாட்டின்  அடுத்த பிரதமராக வேண்டும் என்ற ஆசை மக்களிடையே அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கிடையே என்னிடம் எழுந்தன சில கேள்விகள்.

முதல் கேள்வி  மோதி அவர்களே குஜராத் மாநிலத்திலிருந்து விலகி தில்லி செல்ல விரும்புவாரா?

இரண்டாவது கேள்வி மோதி ஒரு முன்மாதிரி முதலமைச்சர் என்னும் முத்திரையை குஜராத்தில் பதித்த பிறகு, அதற்குச்  சமமான, அந்நற்பெயரைக் காப்பாற்றி, போற்றி வளர்க்கக்கூடிய மாற்று அரசியல்வாதி இன்று இருக்கிறாரா?

மூன்றாவது கேள்வி. முக்கியமான கேள்வி. பாரதிய ஜனதா பார்ட்டி மற்றும் அதன் தோழமை கட்சிகள் மோதி பிரதமராவதை விரும்புகின்றனவா? அம்முயற்சியில் அவர்களின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்குமா?

நண்பர்களே, உங்கள் தம் குறிப்புகளின் மூலம், என் எண்ணங்களுக்கு தெளிவு அதிகம் அளிக்க விரும்புகிறீர்களா?

Tuesday, June 12, 2012

பராசக்தி படம் பார்த்தேன். ரசித்தேன். அதன் தாக்கம் இது.

டி வி சானல். விசித்திரம் நிறைந்த பல சீரியல்களை ஒளி பரப்பியிருக்கிறது. புதுமையான நடிகர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் சன் டி.வி. ஒரு விசித்திரமுமல்ல, நானும் புதுமையான மனிதனல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகத் தென்படக்கூடிய ஒரு ஜீவன் தான் நான். மெகா சீரியல் ஓடும்போது சத்தம் போட்டுப் பேசினேன். ரிமோட்டைக் கையிலெடுத்து தூரத்தில் வீசினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. சீரியல் சத்தத்தைத் தடுத்து நிறுத்தினேன். சீரியல் கூடாது என்பதற்காக அல்ல. சன் சீரியல்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்பக் கூடாது என்பதற்காக. ரிமோட்டை உடைத்தேன். அது சன் டி வி போட உதவுகிறது என்பதற்காக அல்ல. பகுத்தறிவு பேசியே வளர்ந்தவர்கள் மூட நம்பிக்கையாளர்களின் கூடாரம் கட்டி வளர்ந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான். நீங்கள் கேட்கலாம், உனக்கென்ன அக்கறை. யாருக்குமில்லாத அக்கறை. என்னைக் குற்றவாளி என்கிறார்களே. இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையில் கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரிந்து விடும். தமிழ் நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதி விலக்கா? பகுத்தறிவு என்றனர், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்றனர். கூடவே ஹிந்தி ஒழிப்பு என்று கூறித் தமிழர்களையே தாக்கிப் படுபாதகம் பல செய்தனர். அவர்களே ஹிந்தி பேசுபவர்களின் கால்களில் விழுந்து தங்களுடைய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலமென்பீர்கள். என் சுய நலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் நுழையும்போது, கற்களால் தாக்கப்பட்டேன், பின்னால் திரும்பி பார்ப்பதற்குள் பூணூல் அறுக்கப்பட்டேன். பார்ப்பனன் என்று கேலியாகக் கூவப்பட்டேன்.

போதுமப்பா...............சாமி.........போதும்..............பல மதங்களிலும், இனங்களிலும், பிரிவுகளிலும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. நான் யாரின் மனமும் புண்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு, பார்ப்பன ஒழிப்பு என்று பேசியே, வசனங்கள் பல எழுதியே பல தலை முறைகளுக்கு பணம் கோடிகள் பலவில் சேர்த்திட்ட....................குடும்பத்தினரே - இவ்வீன வாழ்வு உங்களுக்கு எதற்கு?

Thursday, June 7, 2012

ஆணவம் அன்றொரு நாள் அடங்கும்

அறுவடை காலம்
ஊழலின் விளைவிடம்
ஆயிரத்து ஐம்பதுகளில் நிலங்களை உழுதனர். ஆழ உழுவதற்கு அவர்களுக்கு உதவியவை கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு. நன்கு உழுது முடிந்ததும், விதைகளை சுறு சுறுப்பாக விதைக்க ஆரம்பித்தனர். ஊழல் விதைகளை. ஆட்சியில் அமர்ந்தனர்.

ஆனால் அண்ணா என்று ஒரு தலைவர் இருந்தார். சில பல தவறுகள் இருந்தாலும், தனக்காகவும், தன குடும்பத்திற்காகவும் ஊழல் வழிகளில் சொத்து சேர்க்க விரும்பி இருக்கவில்லை, அதற்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

அண்ணாதுரை அவர்களின் இறுதி காலத்திற்காகக் காத்திருந்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பதில் அவர் இறந்ததும், கலைஞர் சோகக்கவிதை பாடினார். முன்னமே எதிர்பார்த்து தயாரித்து வைத்த கவிதைப் பேச்சு போல் ஒலித்தது. தமிழ்ப் புலமையாலும், பேச்சுத்திறனாலும் பதவியைப் பிடித்தார். முதலமைச்சர் ஆனார்.

தஞ்சை மண்ணின் மைந்தன். விவ்சாயக்கலை உள்ளுக்குள் வேரூன்றி இருக்க வேண்டும். அரசியல் என்னும் பொது நிலத்தில் வேளாண்மை துவங்கி விட்டது. தமிழ் மக்களின் மனமென்னும் நிலத்தில் விதைத்த ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு வளர்ப்பு என்னும் பசப்புகள் பொருளீட்டத் துவங்கி இருந்தன. தன்மானத்தில் சிறந்தவன் தமிழன் என்று பேசிப் பேசி அவனது தன்மானத்தை ஒழிப்பதில் வெகுவாகச் செயல் பட்டனர். அமைதிப் பூங்கா தமிழகம் என்று பேசியே, தமிழ் நாட்டின் அமைதியை அழிப்பதில் சிறப்பாக செயல் பட்டனர். சட்டக்கல்லூரி அராஜகம் முதல், காவலர்கள் வழக்கறிஞர்கள் மோதல் தொடர்ந்து பற்பல செயல்கள். ஊழலுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் போன பல வட மாநில மக்களே வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும்.

அறுவடை காலம் நீண்டு தொடர்ந்தது. தினமும் பொங்கல் தான். ஊழலை விதைத்தார்கள். அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும், மற்றும் பல செல்வங்களையும் அறுவடை செய்தார்கள். நெருங்கிய மற்றும் பறந்து விரிந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், வோட்டுக்கு பணம் என்ற பாசன நீர் செலுத்தி ஊழலை தமிழ் நாடு முழுவதும் பரப்பி விட்டார்கள்.

வினைகளை அவர் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் ஹிந்தி எதிர்ப்பு,  பார்ப்பன எதிர்ப்பு, திராவிட நாடு திராவிடனுக்கே என்று துவங்கி விட்டார். மூப்படைந்து விட்டார் பாவம். இன்றைய நிஜங்கள் அவர் கண்களுக்குப்  புலப்படவில்லை.

சற்கர நாற்காலியில் அமர்ந்து நடை இயக்கம் நின்றிருந்த போதிலும், நெஞ்சுக்கு நீதி இன்னமும் தேடிக்கொண்டிருந்த போதிலும், ஆழ் மனதில் குடி கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி, பொறாமை, பணிவின்மை அனைத்தும் ஒருங்கே எதிரொலித்தன சமீபத்திய பேச்சுக்களில். ஆணவம் ஒரு நாள் அடங்கும். அந்நாள் வெகு தூரத்திலில்லை.  

Sunday, May 27, 2012

இந்தியாவில் என்றாவது ஒருநாள் ......................... தொடர்ச்சி


இந்தியாவில் என்றாவது ஒருநாள் ......................... தொடர்ச்சி 
 
இந்திய அரசியல் வாதிகளின் ஊழல் பயணம், சுதந்திரம் பெற்று சில வருடங்களிலேயே துவங்கி விட்டிருந்தன. ஜவஹர்லால் நேரு 47 லிருந்து 64 வரை பதினேழு ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தார். அந்த வருடங்கள் உன்னத வாய்ப்புகளுக்கான வருடங்கள். அப்பொழுதும் சுதந்திர வேட்கையில் வீறு கொண்ட இளைஞர்கள் பலர், அறிவு முதிர்ச்சி அடைந்த முதியவர்கள் பலர் வாழ்ந்து வந்த காலம். ஆனாலும் நேருவுக்கு நாட்டை ஒரு சீரிய வழியில் கொண்டு செல்வதற்கான வேட்கையும், விவேகமும் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு பணக்காரத் தந்தை இறந்தவுடன், அவரின் சுயநலப் பிள்ளைகள் அவர் விட்டுச்சென்ற பொருட்களில் ஆசை கொண்டு சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு குடும்ப நிலை. சில வடஇந்திய மாநிலங்கள் (தற்போதைய உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான்) இன்னமும் சுதந்திரம் பெறுவதற்கான தயார் நிலையில் இருந்திருக்கவில்லை. மனித மேம்பாட்டில் மிகவும் பின் தங்கி இருந்தனர். ஜாதிப் பிரிவினைகள், பணக்காரன் - ஏழை இடையே பெரும் பிளவுகள், படிப்பறிவு, ஜனத்தொகை கட்டுப்பாடு, என்று எல்லா விதங்களிலும் பெரும் பின்னடைவு. இவற்றில் சில பல கண்றாவிகள் இன்னமும் வெகுவாகத் தொடர்கின்றன. எனினும் அதிக அளவு மக்கள் தொகை காரணமாகவும், பிரதேசங்களின் விரிவான அமைப்புக்காரணமாகவும், அரசாங்கத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்தனர், இன்னமும் பெற்றுள்ளனர்.

பின்னர் இந்திய அரசமைப்புக்கு இந்திய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பெரியதோர் சவால். ஆனால் அரியதோர் வாய்ப்பு. சாசன உருவாகத்திற்கு தலைமை வகித்தவர் அம்பேத்கார். நீதித்துறை அறிஞர். குழுவில் இருந்தவர்கள் அனைவரும் நீதித்துறை சார்ந்தவர்கள். என்னுடைய எண்ணத்தில் குறைந்தது ஒரு உலக சரித்திர அறிஞரும், ஒரு சமூக இயல் வல்லுனரும் அவசியம் இருந்திருக்க வேண்டும். அவர்களது பங்களிப்பு, அரசியல் சாசன அமைப்புக்குப் பல வகைகளிலும் உதவியிருக்கும். இன்று நமது அரசியல் சாசனத்தில் இருக்கும் ஊழல்வாதி, மற்றும் குற்றவாளி அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும், பேராசை ஏமாற்று வியாபாரிகளும், எளிதாக குறுகிய சந்தில் வெளியேறி ஓடி விடும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் தலைவர்கள் பேச்சுக்கு வருவோம். லால் பஹாதுர் சாஸ்த்ரி 1965 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பிறகு, ரேடியோவில் உரையாற்றினார். வாரம் ஒரு நாள், அதாவது திங்கள் கிழமை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உன்ன வேண்டும். நாட்டின் உணவுப் பொருள் சேமிப்பு மிக அவசியம் என்று வலியுறித்தினார். அப்பொழுது எனக்கு வயது 11. எனது அண்ணன், அக்கா, அம்மா, அப்பா அனைவரும் கூடினோம். முடிவெடுத்தோம். விரதம் காத்தோம். பற்பல வருடங்களுக்கு. சாஸ்த்ரி இருந்த பொழுதும். அவர் இறந்த பின்னரும். எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சாஸ்த்ரி இறந்த அன்று எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனது போல் நாங்கள் விக்கி விக்கி அழுதோம். இன்று அன்பர்களே எனக்கு ஒரு தலைவரைக் காட்டுங்கள். அவன் இறந்தால் நாம் துயரமடைவோம் என்று. முக்காவாசி கேசு எப்ப செத்துத் தொலையும்னு காத்துக்கொண்டிருக்கிறோம். ................தொடரும்