Showing posts with label உயர் சமூகம் அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 5. Show all posts
Showing posts with label உயர் சமூகம் அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 5. Show all posts

Sunday, August 9, 2009

அப்பு குப்பு உரையாடல் 9

குப்பு: அது சரி அண்ணே! இப்ப அவுரு மகன எதுக்கு போலீசு அரெஸ்டு பண்ணாங்க? ஒடம்பு சைசு ஒரு முழு ரோடு ரோலர் மாதிரி இருந்தாலும், பாவம் அண்ணே மூஞ்சியப்ப் பாத்தா பாலு குடிக்கிற பச்சப் புள்ள மாதிரி இருக்கு அண்ணே.
அப்பு: மொதல்ல அவுரு மகன் சரப்ஜோத் சிங்க போலீசு அரெஸ்ட் பண்ணல. அரெஸ்ட் பண்ணது சி.பி.ஐ. இன்னமும் சி.பி.ஐ. னா ஒரு மரியாதை உண்டு. அதுக்காகத்தான் லோக்கல்ல ஏதாவது தப்பு தண்டா, உள்ளூர் அரசியல்வாதி சதி பண்ணிடுவான்னா கேசை சி.பி.ஐ. கிட்ட குடு அப்படீங்கறாங்க.
பூனால பாடீல்னு ஒருத்தன். பெரிய கான்ட்ராக்டர். பெரிய தகிடுதத்தம். அவன் ஒண்ணும் நேர்மையானவனா தெரியல. ஆனாலும் அவன் செஞ்சதா சொல்லப்படற ஊழல ஈடு கட்ட, அஞ்சு கோடி குடு, பத்து கோடி குடுன்னதும் அரண்டுட்டான். கை விரல நீட்டிட்டான். பூட்டா சிங்கோட மகன், சரப்ஜோத் சிங் கையும் கலுவுமா பிடி பட்டுட்டான்.
அப்பா பூட்டா சிங்கு, நீ சொன்ன மாதிரி தான், என் பிள்ளை அறியா பிள்ளை. கை விரல குடுத்த கூட கடிக்கத்தெரியாது. பிற்படுத்த சமூகத்தினருக்காக நான் பலானது பலானதெல்லாம் செஞ்சிருக்கேன். இதப்பிடிக்காமோ அரசியல் சதி பண்ணிட்டாங்கன்னு, இருட்டுல போன சின்னப்புள்ள, பேயு பேயுன்னு பயந்து போயு அலறுமே, அது மாதிரி அரட்டுராறு பாவம். மோர சூடா குடுத்தா பயம் கொஞ்சம் தணியும்.
அதுக்கு மேல இருக்கு விழயம். கேளு. இந்த லஞ்சப்பணம் பேச்சு வார்த்தை எல்லாம் பூட்ட சிங்கோட ஆஃபீஸ் போன்ல நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு. ஆனா பாவம், அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது. சரப்ஜோத் சிங் வீட்டுல, துப்பாக்கியும் குண்டுகளும் பிடிபட்டிருக்கு. லைசென்சு இல்லேன்னு குற்றச்சாட்டு, ஆனா அப்பனுக்கும், பச்சப்பிள்ளைக்கும் ஒண்ணுமே தெரியாது.
அப்ப சொல்றாரு அரசியல் சதி. செத்தாலும் சாவேனே தவிர பதவியை ராஜினாமா பண்ண மாட்டேங்கறாரு. சொன்னத செய்யுங்க அண்ணாச்சி. நாங்க யாரும் வருத்தப்பட மாட்டோம். மாறா பூமி அன்னை மேல வேண்டாத வெயிட்டு கொஞ்சம் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படரவங்க கண்டிப்பா இருப்பாங்க.
வாழ்க இந்தியா! ஒழிக ஊழல் கலாச்சாரம்!

Tuesday, August 4, 2009

அப்பு குப்பு உரையாடல் 8

குப்பு: அப்பு அண்ணே! யாருண்ணே இந்த பூட்டா சிங்கு. அவருக்கு இப்ப என்ன பிரச்சினை?

அப்பு: இந்த பூட்டா சிங்கு, எழுபத்து அஞ்சு வயசு கிழடு. அரசியல் குட்டையிலே ஊரித் திளச்ச நீர் யானை. ஒரு காலத்துல மத்திய அமைச்சரவைலே மினிஸ்டரா இருந்தவரு. இன்னும் பல விழயங்க இருக்க. என்னத்தச் சொல்ல.

குப்பு: சொல்லுங்க அண்ணே! எனக்கு நீங்க சொல்லலேன்னா யாருங்க அண்ணே சொல்லுவாங்க, இந்த மாதிரி நம்ம ஜனநாயக நாட்டோட பெருந்தலைவர்களைப் பத்தி.


அப்பு: முக்கியமானத மட்டும் சொல்றேன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஊழல் வழக்குல நரசிம்ம ராவோட அவரும் ஒரு குற்றவாளி. பின்னர் குற்றத்திலிருந்து விடு பட்டார். அது அரசியல் சதின்னு அப்ப அவரு சொல்லல.

அப்புறம் பீஹார் கவர்னரா இருந்தாரு. மந்திரி சபையை கலைச்சாரு. செய்தது அநியாயம் என்று நீதி மன்றம் கூறியது. பின்னர் பதவி விலகினார்.
குப்பு: அவுரு எந்த கட்சிய சேர்ந்தவரு அண்ணே!

அப்பு: எங்க லாபமோ அந்த கட்சி. அகாலி தல் என்கிற கச்சில இருந்தாரு, பின்ன காங்கிரசுக்குப் போனாரு. அடுக்கு அப்புறம் பி.ஜெ.பி. மறுபடியும் காங்கிரசு. இப்ப காங்கிரசு அவுர கை உட்டிடுச்சு.
குப்பு: ஏண்ணே, காங்கிரசு கை வுட்டுடிச்சு?

அப்பு: பல விழயங்கள் இருக்கு அப்பு. இல்ல குப்பு. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாரியத்துக்கு தலைவரா இருக்காரு. அப்படி இருக்கும்போதே, விதிகளுக்கு புறம்பாக, தன் மகனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தாரு டெல்லில. போன எலெக்ஷன்ல காங்கிரஸ் சீட்டு கிடக்காம, தனித்து நின்னு, பி.ஜெ.பி. ட்ட தோத்துப் போனாரு. இது நடந்தது ராஜஸ்தான்ல. .............................................தொடரும்.