Showing posts with label தமிழ் வாழ்க. Show all posts
Showing posts with label தமிழ் வாழ்க. Show all posts

Thursday, October 2, 2008

தமிழன் புகழ்

கம்பன் அன்று படித்தான் - இன்றோ
சும்பனுக்கும் சிலை வடிக்கிறான்
பாரதியை வாய் நிறைய புகழ்ந்தான் - இன்றோ
பச்சைப்பொருள் பாடலாசிரியனை
புலவர்களின் தலைவெனென்கிறான்
கண்ணகியின் நெறியைப் புகழ்ந்தான் - இன்றோ
காசுக்கு உடை களையும் கதா நாயகிகளுக்கு
கோவில் கட்டுகிறான்.

தமிழ் வளர்ந்து விட்டது, தமிழன் உயர்ந்து விட்டான் .

Wednesday, August 20, 2008

தமிழன்பன்

இளவயதில் என் இனிய பள்ளியில்
தள்ளி வைக்கப் பட்டேன் தனிமைப் படுத்தப்பட்டேன்
குற்றம் என்ன நான் செய்தேன் என்று
கேட்டால் பதில் என்ன கூறுவேன்
தமிழைத் 'தமில்' என்று சொல்லாமல் தமிழ்
என்று தவறாமல் சொன்னேன்
'தமில் வாள்க' என்று சொல்லாமல், தமிழ் வாழ்க
என்று தெளிவாகச் சொன்னேன்
பாப்பான் என்று பழிக்கப் பட்டேன்,
பூணூல் அறுபட்டேன் - இருந்தும்
சொல்கிறேன் - தமிழ் வாழ்க, தமிழன் வளர்க.