Showing posts with label நீதியை நிலை நாட்டுவார்கள். Show all posts
Showing posts with label நீதியை நிலை நாட்டுவார்கள். Show all posts

Saturday, May 30, 2009

மாறனும், மதுரை வீரனும்

பார்லிமென்ட் களை கட்டி விட்டது. மாறனும், மதுரை வீரனும் ஒரே குழுவில். தம் உயர் கொள்கைகளுக்காக, அவற்றை நிலை நாட்டுவதற்காக இவ்வுயர் தமிழ்த் தலைவர்கள் எந்த ஒரு தியாகமும் செய்வார்கள். அவர்கள் நினைவில் ஆழந்து நிலைத்திருப்பது, நாட்டின் நலனும், அதில் அவர்கள் பங்கு மற்றும் தான். அதற்காகவே தான் இருவரும் ஒன்று இணைந்து தாய் நாட்டின் தலை நகரில் செங்கோல் ஆட்சியில் அமரச் சென்று விட்டார்கள். இருவரும் இனி அடிக்கடி சந்தித்து, மதுரை மாநகரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அநியாயத்துக்கு நீதி தேடுவார்கள். கொலையாளிகளை கூண்டில் ஏற்றுவார்கள். கொலையுண்டவரின் குடும்பம் மாறனுக்கும், மதுரை வீரனுக்கும் நன்றி கூறும்.
வாழ்க மாறனும், மதுரை வீரனும்! செத்தொழிக கொலை செய்தவர்களும், அதைத் தூண்டியவர்களும், மற்றும் அதன் காரண கர்த்தாக்களும்!