Showing posts with label வடக்கு - தெற்கு இடைவெளி. Show all posts
Showing posts with label வடக்கு - தெற்கு இடைவெளி. Show all posts

Tuesday, November 11, 2008

ஆனந்த் மற்றும் பிந்த்ரா - தொடர்ச்சி

நான் தமிழ் நாட்டில் குக்கிராமத்தில் பள்ளிப் படிப்பு படிக்கும்போதே எனது ஆசிரியர்கள் எனக்கு, தாததாபாய் நவ்ரோஜியைப் பற்றியும் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே, சுபாஷ் சந்த்ர போஸ், இரும்பு மனிதர் வல்லப் பாய் படேல் போன்றவர்களைப் பற்றி விளக்கி இருக்கிறார்கள். நாங்களும் அவற்றை கவனமாகக் கேட்டு இன்று வரை நினைவில் நிறுத்தி இருக்கிறோம்.
நான் கேட்பதெல்லாம் ஒரு சிறிய கேள்வி மட்டுமே. விந்திய மலைக்கு மேற்புறம் இருப்பவர்கள் திருப்பூர் குமரனை அறிவார்களா? கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யை அறிவார்களா? வாஞ்சிநாதனை அறிவார்களா? நாட்டுப்பற்று உள்ளவர்கள், நாட்டுக்காக உடமை மற்றும், உயிரைத துறந்தவர்கள் வடக்கில் மட்டுமே இருந்தது போல் ஓர் மாயை உருவாக்கப் பட்டு இருக்கிறது. வடக்கு - தெற்கு இடைவெளி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே உருவாக்கப் பட்டு விட்டது. இந்த இடைவெளி இன்று மேல் மேலும் வளர்வதாகவே நான் உணர்கிறேன். ------------ தொடரும்

Wednesday, November 5, 2008

ஆனந்த் மற்றும் பிந்த்ரா

கேட்பதற்கு கடினமாக இருக்கும். ஜீரணிப்பது சுலபமான விஷயமல்ல. ஒப்புக்கொள்ள முடியாது என்று மறுப்பவர்களும் இருக்கலாம். ஆனால் நீண்ட நாள் யோசித்து நான் எழுத முடிவு எடுத்தேன். என்னைப் பொறுத்தவரை நான் எழுதுவதில் பெருமளவு உண்மை இருக்கிறது.
வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வருபவர்கள் சொல்லிகிறார்கள், "அங்கு மக்கள் இந்தி பேச மறுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் மட்டுமே பதில் தருகிறார்கள். இந்தி பேசுபவர்களை விரோதியாகக் கருதுகிறார்கள்". இதில் பெருமளவு உண்மையும் இருக்கிறது. இது போன்ற நிலை உருவாக யார் காரணம், என்ன காரணம்..........தொடரும்