இன்றைய இந்தியாவில் கருணாநிதிகளுக்கு இடையே, மாயாவதிகளுக்கு இடையே, ஷிபு சோரன்களுக்கு இடையே, ஒரு வித்தியாசமான முதல்வர். ஒரு வித்தியாசமான இந்தியர். அவரை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமானால், உணர வேண்டுமானால், குஜராத் என்னும் மாநிலத்தில் வாழ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், நீண்ட நாட்கள் குஜராத்தில் வாழ்பவர்களிடமிருந்து அறிந்து கொள்ளவேண்டும். நான் ஒரு குஜராத்தில் வாழும் தமிழன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
நேற்று இம்முதல்வர் ஒரு சரித்திரம் படைத்தார். இந்தியாவின் தலைமை நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவின் முன் கடுமையான், பல மணிநேரங்கள் நீண்ட, கேள்விக் கணைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் ஒரு நாயகனாக வெளி வந்தார்.
இவர் அக்குழுவின் முன் நிறுத்தப்பட்டது, தன குடும்பத்திற்காக ஊழல் வழிகளில், பெருமளவில் சொத்து சேர்த்தற்காக அல்ல. ஒரு பெட்டியுடன் இரண்டு மூண்டு உடைகளுடன் நகரத்திற்கு வந்து, அரசியல் வாழ்வில் புகுந்து, பல பெண்களை மணம் புரிந்து, தன பெண் பிள்ளைகளுக்கும், விரிந்து பரந்த உறவினர்களுக்கும் பதவிகளும், மிகப்பெருமளவில் பணமும் சேர்த்து உல்லாச வாழ்க்கை வாழ வழி வகுத்ததற்காக அல்ல. அது போன்ற கேடு கேட்ட அரசியல் வாதி ரகத்தைச் சேர்ந்தவரல்ல நரேந்திர மோதி.
நாடு சுதந்திரமடைந்தும் பல வருடங்கள், குஜராத் மக்கள், தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், தீய வழி நடத்தப்பட்ட சிலரின் செயல்களால், பெரிதும் அவதிக்கு உள்ளானர். அங்கும் இங்குமாக தொடர்ந்து கொல்லப்பட்டனர். காங்கிரஸ் அரசினர், வாக்குகள் வேண்டி மௌனம் சாதித்தனர். கோத்ரா புகைவண்டி எரிப்பு ஒரு ஊக்கி. மக்கள் வெகுண்டு எழுந்தனர். நடந்தவை உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடுகள்.
இன்று மோதியை எதிர்த்துப் பேசும் காங்கிரஸ் கட்சியனருக்கு, வாய் திறந்து பேச எந்த வித அருகதையும் கிடையாது. இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் இந்திரா காந்தி அவர்களே ஊட்டி வளர்த்த ஒரு குழுவினரினால் கொல்லப்பட்ட பொழுது நடந்தது என்ன? இந்திய நாட்டுக்கு பெரு வாரியாக ரத்தம் சிந்தும் ஒரு சமூகத்தினர், வீடு புகுந்து அடித்துக் கொல்லப்பட்டனர். அவ்வினப்பெண்களின் கற்பு சூறையாடப் பட்டது. சஜ்ஜன் குமார் போன்ற காங்கிரம் தலைவர்கள் இவற்றை வழி நின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். சஜ்ஜன் குமார் முன் ஜாமீன் பெற்றான். தலை மறைவானான். இன்று வரை தண்டிக்கப்படவில்லை.
குஜராத்தில் இன்னலுற்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக, நீங்கள் கண்ணீர் சிந்துபவராக இருந்தால் நான் உங்களிடம் கேட்க விரும்புவது இதுதான். நம் இந்திய நாட்டின் பாதுகாப்பு படைகளில் பெருமளவு பங்கு பெற்று, நாட்டிற்கு தன்னலமற்ற சேவை செய்யும் ஒரு சமூகத்தினருக்காக நீங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினீர்களா? இல்லையென்றேல், உங்கள் செயல் ஒரு பசப்பு. பொய்யானது. ஒரு சமூக அநீதி. இது போன்ற மக்களின் செயல்கள் நாடுப்பட்று இல்லாத ஒரு சமூகத்தினை உண்டாக்கிக் கொண்ட்ரிருக்கிறது.
நரேந்திர மோதி ஒரு உண்மையான மனிதர். குஜராத்தில் வாழும் அனைவரையும், மொழி, மத, இன வேறுபாடன்றி, குஜராத்தியாக கருதுபவர். அவர் மூச்சு, எண்ணம், உணர்வு, செயல், அனைத்துமே குஜராத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தியவை. அவர் ஒரு நிகரில்லாத் தலைவர். அவர் ஆட்சி பீடத்தில் இருக்கும் மாநிலத்தில் வாழ நாங்கள் பெருமைப் படுகிறோம்.
கருணாநிதிகளும், மாயாவதிகளும், ஷிபு சோரன்களும் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் வாழும் நிலை ஏற்படாததற்கு நன்றி கூறுகிறோம். மோதி என்னும் தலை சிறந்த இந்தியன், நாட்டுப் பற்று கொண்ட ஒரு அரசியல் தலைவன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்க மோதி! வாழ்க குஜராத்! வாழ்க குஜராத் நன்மக்கள்!