Saturday, January 9, 2010

விழித்தெழு இந்தியா. விழித்தெழு!

ரூபாய் ஆயிரம் கோடி மோசடி.

Friday, January 8, 2010

விழித்தெழு, இந்தியா விழித்தெழு!

வெடிகுண்டு வீசி எஸ்.. படுகொலை, அமைச்சர்களுக்கு முன்பாக பயங்கரம். இது இன்றைய தமிழ் செய்தித்தாளில் தலைப்புச் செய்தி. திராவிடர் கழகங்களின் ஆட்சியில் தமிழ் மண் ரத்தம் சுவைத்துக் கொண்டிருக்கிறது. நடக்க வேண்டியதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நாற்பது வருடங்களுக்கு முன்னர், ஹிந்தி போராட்டம் என்ற பெயரில், பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில், கழகங்கள் கட்டவிழ்த்துவிட்ட, அராஜகங்கள் சுதந்திர இந்திய சரித்திரத்தில் ஒரு முன்னோடி. அன்று இவர்கள் சொன்னார்கள். தமிழ் நாடு அமைதிப் பூங்கா என்று. அன்றே ஒவ்வொரு தமிழனுக்கும் புரிந்திருக்க வேண்டும். இவ்வமைதியை அழிக்காமல் விட மாட்டார்கள் இவர்கள் என்று. உண்மையில் பார்த்தால் இன்று, ஊழலிலும், அராஜக நடவடிக்கைகளிலும், சமூகக் குற்றங்களிலும், வட இந்திய மாநிலங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தமிழ் நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. கழகங்களின், தன மானத் தலைவர்களின் மிகப்பெரும் காணிக்கை இது.

தூங்கியது போதும் தமிழா, விழித்தெழு!


விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

ஹரியானா மாநிலத்தில் ராதோட் என்னும் உயர் போலீஸ் அதிகாரி. பெரும்பாலான அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் மமதை. தான் நினைத்ததைச் செய்யலாம் என்ற அதி சுதந்திரப் போக்கு. செயல். இதன் உரு வடிவம், டென்னிஸ் வீராங்கனை ருசிகா என்ன்ற பெயர் கொண்ட பதினான்கு வயதுடைய பெண்ணின் மீது அவன் கொண்ட காம வெறி. அவள் மீது அவன் செய்த பலாத்காரம். அவள் பணிந்து போக வில்லை. வெகுண்டு எழுந்தாள். தப்பி ஓடினாள். அவள் உயிர் தோழி ஆராதனா, ராதோட் செய்த ஈனச்செயலை, நேரில் கண்டாள். தோழிக்குத் தோள் கொடுத்தாள். போலீசில் புகார் செய்ய அக்குடும்பத்தை ஊக்குவித்தாள்.


உயர் போலீஸ் அதிகாரியின் மீது பலாத்காரப் புகாரா? பொறுக்குமா, போலீஸ் துறை. விட்டுவிடுவானா காமுகன், ராதோட். ருசிகாவின் குடும்பத்திற்கு இன்னல் பல கொடுத்தான். வேடிக்கை என்னவென்றால், காமுகன், ராதோடின் மகளும் ருசிகாவும் ஒரே பள்ளியில் படித்து வந்தார்கள். ராதோடின் மகளுக்கு அது அவமானமாக இருந்தது. தன் தரம் கேட்ட தந்தையின் உதவியுடன், ருசிகாவை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு வெளியேற்றச் செய்தாள்.

இது மட்டுமா, ருசிகாவின் அண்ணன் மீது பல பொய்யான வழக்குகள் போட்டு பல முறை சித்திரவதை செய்தனர். ருசிகாவின் குடும்பத்தினர் தளர்ந்து போய் விடவில்லை. ராதோடின் மீதான வழக்கை திரும்பப் பெறவில்லை. ஆவேசம் கொண்ட ராதோட் தொடர்ந்து ருசிகா குடும்பத்துற்கு இன்னல் கொடுத்தான். கடைசியாக, தன்னால் தன் குடும்பத்திற்கு, குறிப்பாக அண்ணனுக்கு நடக்கும் கொடுமைகளை காணச்சகிக்காமல் ருசிகா தற்கொலை செய்து கொண்டாள்.

அவள் உயிர் தோழி ஆராதனாவும் அவள் குடும்பத்தினரும் ராதோடை விடவில்லை. வழக்கு தொடர்ந்தது. திருமணமாகி ஆஸ்திரேலியா சென்ற தோழி தொடர்ந்து வழக்கை வாதாடினாள்.

குற்றவாளி ராதோட், சன்மானங்கள் பல பெற்றான். விருதுகள் பல பெற்றான். பதவி உயர்வுகள் பெற்றான். ஹரியானாவின் டி.ஜி.பி. பதவி பெற்றான். வழக்கு தொடர்ந்தது. குற்றவாளி தண்டிக்கப்பட்டான். ஆறு மாத சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம். தீர்ப்பு வந்ததுமே பெயிலில் வெளியானான். தற்பொழுது அவனுக்காக அவன் மனைவி அபா நீதி மன்றத்தில் வாதாடுகிறாள். நடப்பதெல்லாம், பத்திரிகைகளின் வியாபாரம் என்கிறாள். கணவனைச் சிறை தண்டனையிலிருந்து காப்பாற்ற, என்ன விலை வேணுமானால் கொடுக்கத் துணிந்து நீதிக்கு எதிராகச் சோரம் போகிறாள்.

ருசிகாவின் குடும்பத்தினரும், அவள் தோழி ஆராதனாவின் குடும்பத்தினரும் தங்கள் முற்றுகையைத் துவங்கி விட்டார்கள். பொது மக்கள் பெருமளவில் ஆதரவு கொடுக்கிறார்கள். பத்திரிகை உலகம் கை கொடுக்கிறது. வெற்றி நிச்சயம். காமுகன் சிறை படுவான். குறைந்தது பத்து வருடங்கள் ஜெயில் வாசம் உறுதி.


தூக்கம் போதும் இந்தியனே!


விழித்தெழு, இந்தியா விழித்தெழு!




Sunday, January 3, 2010

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

தப்பி ஓடினர் கைதிகள். தப்பி ஓடிய மூன்று கைதிகள், சாதாரண பிக் பாக்கெட் குற்றவாளிகளோ, கழுத்துச் சங்கிலி அறுப்புக் குற்றவாளிகளோ அல்ல. பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்கள். நம் நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும், பேரளவில் அழிவு விளைவிக்கக் கூடியவர்கள்.

இம்மூவரும், அப்துல் ரசாக், முஹம்மத் சாடிக், மற்றும் ரபாகத் அலி, இந்திய தலை நகராம், தில்லி மாநகரத்தில் ரெட் ஃபோர்ட் பகுதியில், குண்டு வெடிப்பு செய்து அதற்காக, சிறை தண்டனை முடிந்து, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப் பட இருந்தனர். 2000 ல் இவர்கள் கைது செய்யப்பட பொழுது இவர்கள் வசம் பதினேழு கிலோ ஆர்.டி.எக்ஸ். மற்றும் ஐம்பது கிலோ ஹெரோயின் இருந்தது. இந்நிலையில் சிறை தண்டனை அனுபவித்து, பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட இருந்தார்கள். ஆனால் அம்பிகா ரெஸ்டாரண்டுக்கு உணவு உண்ண, ஒரு இன்ஸ்பெக்டருடன் சென்று, தப்பி ஓடினார்கள்.

இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. நமது அரசுத்துறைகள் எல்லா வற்றிலும் புரையோடி இருக்கும், அதிகாரிகளின் தகுதியின்மை, பொறுப்பின்மை, ஊழலின் உள்ளோட்டம், மற்றும் குற்றங்களிலிருந்து எளிதாக தப்பிக்கக்க் கூடிய உண்மை நிலைகளின் எடுத்துக்காட்டு.

இம்மூன்று குற்றவாளிகளின் நிலை என்னாகும். அவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓட மாட்டார்கள். இந்தியாவிலேயே தங்குவார்கள். தங்கள் சதிச் செயல்களுக்கு ஆட்கள் சேர்ப்பார்கள். இந்திய வோட்டர் லிஸ்டிலும் இடம் பெறுவார்கள். நமது கேடு கேட்ட அரசியல் தலைவர்கள் வீராப்பாக வெட்டிப் பேச்சு பேசுவார்கள். கொலை காரர்களிடம் காசு கொடுத்து ஒட்டு வாங்குவார்கள். அரசுத்துறை கமிட்டிகள் அமைத்து, வேலை வெட்டி அற்ற வெட்டிக் கிழங்களுக்கு வேலை போட்டுத் தரும். வரிப்பணத்தில் தள்ளாத வயதிலும் அவன் உல்லாசமாக கார், டிரைவர் சகிதம் உலா வருவான். குற்றம் செய்தவர்கள் தப்பிப்பார்கள்.

தேசப்பற்று அற்ற இந்தியன் தூங்குவான்.

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

ஒரு மாத உறக்கம்

ஒரு மாதத்திற்கு மேலாக, நான் எதுவும் எழுதவில்லை, தமிழன்பனில். தொடர்ச்சியாக படிப்பவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கடந்த ஒரு மாதத்தில், நான் இதுவரை எழுதியவற்றை, நுணுக்கமாகப் படித்தேன். எனக்குள்ளே வாதம் - பிரதிவாதம் செய்தேன். மேலும் சிறப்பாக எழுதும் முடிவுடன், அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன். நன்றி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!