Thursday, October 30, 2008

பெரியாரின் சீடர்கள்

இன்று மாலை, தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் - 'கலைஞர்' சேனல். கண் கொள்ளாக் காட்சி. நடிகர் மற்றும் அ. இ.அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஈழத் தமிழர்களுக்காக நன்கொடை தருகிறார். உன்னிப்பாகக் கவனித்தால், அவர் அளித்த ஃபோல்டேரில் இந்திய நாட்டுக்கொடிப் பளிச்சிடுகிறது. அதற்குப் பிறகு அவர் கேமராவை நோக்கிப் பேசுகிறார். அவர் கழுத்தில் தங்கச் செயினும், பூணூலும் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றைப்பர்த்து நான் இன்பமாக இருந்த பொழுது அடுத்து அதிர்ச்சி இன்பம். கலைஞர் அவர்களின் அன்பு மகன், மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை இடுகிறார். பூசாரி போன்று ஒருவர், விபூதியை அள்ளி அவர் நெற்றியில் பூசுகிறார். அவரும் சிரித்த படியே அதை ஏற்றுக்கொள்கிறார். சந்தோஷம், பரம சந்தோஷம். கடவுளே உன் லீலைகளை என்னென்று சொல்வேன்.

No comments: