கண்களை மூடித் திறந்ததாக நினைத்தேன்
உலகம் பல பகல்களையும், இரவுகளையும்
ஒன்றின் பின் ஒன்றாகத் திறந்து மூடின!
நாள் தாள்களை தினம் களைந்ததாக நினைத்தேன்
வாரத்தாள்களும் மாதத்தாள்களும் மணிக்கணக்குகளில்
தானே வீழ்ந்து மண்ணில் மாய்ந்தன.
உன் வாழ்வும் ஒரு நாள் காட்டி தான்
வேகத்தில் உதிர்ந்து விடும் வாழ்க்கைத் தாள்கள்!
மடியட்டும் மனித இறுமாப்பு!
மலரட்டும் மானிட நேயம்
No comments:
Post a Comment