Saturday, October 22, 2011

உதிந்து போன உதிரிக் கட்சிகள்

பெருந்தலைவர் காமராஜ் மறைவுடன் செத்துப் போனது காங்கிரஸ் தமிழ் நாட்டில். மேலும், அன்று ஒரு பெரும் கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது. திராவடர் கழகங்களின் உதட்டுச்சாயப் பேச்சு, தமிழனுக்குத் தேனாக இனித்தது. பார்ப்பனருடன் போட்டியிட்டு வெல்வதை விட அவனை உதைத்து மகிழ்வதே மேல் என்று போதிக்கப் பட்டனர். ஹிந்தி மொழி கற்று வடநாட்டில் சென்று ஆட்சி செலுத்து என்று சொல்லாமல், 'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று வாய்ச்சவடால் பேசி, தமிழனின் ஆண்மை நிலையையயும், தன்மானச் செல்வத்தையும் குறைத்தளித்து, தமிழ் நாட்டைச் சூறையாடத் துணிந்தனர் கழகத்தினர். பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பேசியே அதனை ஒழித்தளித்து, இலவசப் பொருளாசையை அளவில்லாமல் பெருக்கி, ஆனந்தம் கொண்டனர். ஆனாலும் இன்றைய தமிழ் இளைஞன் சாதி, மத, இன வேறுபாடின்றி பல் துறையிலும் வெற்றி காண ஆரம்பித்து விட்டான். இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில், அன்றைய இளைஞர் சமுதாயத்தால் நாம் தமிழ்நாட்டில் நல்லதொரு, உயர்த்ததொரு மாற்றம் காண்போம்.

No comments: