Tuesday, June 12, 2012

பராசக்தி படம் பார்த்தேன். ரசித்தேன். அதன் தாக்கம் இது.

டி வி சானல். விசித்திரம் நிறைந்த பல சீரியல்களை ஒளி பரப்பியிருக்கிறது. புதுமையான நடிகர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் சன் டி.வி. ஒரு விசித்திரமுமல்ல, நானும் புதுமையான மனிதனல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகத் தென்படக்கூடிய ஒரு ஜீவன் தான் நான். மெகா சீரியல் ஓடும்போது சத்தம் போட்டுப் பேசினேன். ரிமோட்டைக் கையிலெடுத்து தூரத்தில் வீசினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. சீரியல் சத்தத்தைத் தடுத்து நிறுத்தினேன். சீரியல் கூடாது என்பதற்காக அல்ல. சன் சீரியல்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்பக் கூடாது என்பதற்காக. ரிமோட்டை உடைத்தேன். அது சன் டி வி போட உதவுகிறது என்பதற்காக அல்ல. பகுத்தறிவு பேசியே வளர்ந்தவர்கள் மூட நம்பிக்கையாளர்களின் கூடாரம் கட்டி வளர்ந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான். நீங்கள் கேட்கலாம், உனக்கென்ன அக்கறை. யாருக்குமில்லாத அக்கறை. என்னைக் குற்றவாளி என்கிறார்களே. இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையில் கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரிந்து விடும். தமிழ் நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதி விலக்கா? பகுத்தறிவு என்றனர், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்றனர். கூடவே ஹிந்தி ஒழிப்பு என்று கூறித் தமிழர்களையே தாக்கிப் படுபாதகம் பல செய்தனர். அவர்களே ஹிந்தி பேசுபவர்களின் கால்களில் விழுந்து தங்களுடைய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலமென்பீர்கள். என் சுய நலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் நுழையும்போது, கற்களால் தாக்கப்பட்டேன், பின்னால் திரும்பி பார்ப்பதற்குள் பூணூல் அறுக்கப்பட்டேன். பார்ப்பனன் என்று கேலியாகக் கூவப்பட்டேன்.

போதுமப்பா...............சாமி.........போதும்..............பல மதங்களிலும், இனங்களிலும், பிரிவுகளிலும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. நான் யாரின் மனமும் புண்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு, பார்ப்பன ஒழிப்பு என்று பேசியே, வசனங்கள் பல எழுதியே பல தலை முறைகளுக்கு பணம் கோடிகள் பலவில் சேர்த்திட்ட....................குடும்பத்தினரே - இவ்வீன வாழ்வு உங்களுக்கு எதற்கு?

No comments: