Friday, May 23, 2008

வாழ்க்கை

வாழ்க்கை
நான் கிழக்கு நோக்கி நடக்கிறேன்
சிறு வயதில் நிழலும் என் பின்னே வருகிறது
இள வயதில் கூடவே அடியெடுத்து நடக்கிறது
முதுமையில் அதோ என் முன்னே ஓடுகிறது
ஓடி, ஓடி நிழல் கரைந்து விட்டது - சூரியன்
மேற்கில் மறைந்து விட்டான்

No comments: