Sunday, January 3, 2010

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

தப்பி ஓடினர் கைதிகள். தப்பி ஓடிய மூன்று கைதிகள், சாதாரண பிக் பாக்கெட் குற்றவாளிகளோ, கழுத்துச் சங்கிலி அறுப்புக் குற்றவாளிகளோ அல்ல. பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்கள். நம் நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும், பேரளவில் அழிவு விளைவிக்கக் கூடியவர்கள்.

இம்மூவரும், அப்துல் ரசாக், முஹம்மத் சாடிக், மற்றும் ரபாகத் அலி, இந்திய தலை நகராம், தில்லி மாநகரத்தில் ரெட் ஃபோர்ட் பகுதியில், குண்டு வெடிப்பு செய்து அதற்காக, சிறை தண்டனை முடிந்து, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப் பட இருந்தனர். 2000 ல் இவர்கள் கைது செய்யப்பட பொழுது இவர்கள் வசம் பதினேழு கிலோ ஆர்.டி.எக்ஸ். மற்றும் ஐம்பது கிலோ ஹெரோயின் இருந்தது. இந்நிலையில் சிறை தண்டனை அனுபவித்து, பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட இருந்தார்கள். ஆனால் அம்பிகா ரெஸ்டாரண்டுக்கு உணவு உண்ண, ஒரு இன்ஸ்பெக்டருடன் சென்று, தப்பி ஓடினார்கள்.

இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. நமது அரசுத்துறைகள் எல்லா வற்றிலும் புரையோடி இருக்கும், அதிகாரிகளின் தகுதியின்மை, பொறுப்பின்மை, ஊழலின் உள்ளோட்டம், மற்றும் குற்றங்களிலிருந்து எளிதாக தப்பிக்கக்க் கூடிய உண்மை நிலைகளின் எடுத்துக்காட்டு.

இம்மூன்று குற்றவாளிகளின் நிலை என்னாகும். அவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓட மாட்டார்கள். இந்தியாவிலேயே தங்குவார்கள். தங்கள் சதிச் செயல்களுக்கு ஆட்கள் சேர்ப்பார்கள். இந்திய வோட்டர் லிஸ்டிலும் இடம் பெறுவார்கள். நமது கேடு கேட்ட அரசியல் தலைவர்கள் வீராப்பாக வெட்டிப் பேச்சு பேசுவார்கள். கொலை காரர்களிடம் காசு கொடுத்து ஒட்டு வாங்குவார்கள். அரசுத்துறை கமிட்டிகள் அமைத்து, வேலை வெட்டி அற்ற வெட்டிக் கிழங்களுக்கு வேலை போட்டுத் தரும். வரிப்பணத்தில் தள்ளாத வயதிலும் அவன் உல்லாசமாக கார், டிரைவர் சகிதம் உலா வருவான். குற்றம் செய்தவர்கள் தப்பிப்பார்கள்.

தேசப்பற்று அற்ற இந்தியன் தூங்குவான்.

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

No comments: