நான் தமிழ் நாட்டில் குக்கிராமத்தில் பள்ளிப் படிப்பு படிக்கும்போதே எனது ஆசிரியர்கள் எனக்கு, தாததாபாய் நவ்ரோஜியைப் பற்றியும் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே, சுபாஷ் சந்த்ர போஸ், இரும்பு மனிதர் வல்லப் பாய் படேல் போன்றவர்களைப் பற்றி விளக்கி இருக்கிறார்கள். நாங்களும் அவற்றை கவனமாகக் கேட்டு இன்று வரை நினைவில் நிறுத்தி இருக்கிறோம்.
நான் கேட்பதெல்லாம் ஒரு சிறிய கேள்வி மட்டுமே. விந்திய மலைக்கு மேற்புறம் இருப்பவர்கள் திருப்பூர் குமரனை அறிவார்களா? கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யை அறிவார்களா? வாஞ்சிநாதனை அறிவார்களா? நாட்டுப்பற்று உள்ளவர்கள், நாட்டுக்காக உடமை மற்றும், உயிரைத துறந்தவர்கள் வடக்கில் மட்டுமே இருந்தது போல் ஓர் மாயை உருவாக்கப் பட்டு இருக்கிறது. வடக்கு - தெற்கு இடைவெளி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே உருவாக்கப் பட்டு விட்டது. இந்த இடைவெளி இன்று மேல் மேலும் வளர்வதாகவே நான் உணர்கிறேன். ------------ தொடரும்
1 comment:
How I wish the distance narrows down a lot and soon. Though a little late, wishing you Happy Diwali and Prosperous future. Those who have met you can never forget ur charismatic profile. Cheers.
Post a Comment