Sunday, November 23, 2008

அன்புமணியின் ஆணை

அன்பு மணி ஆணை இட்டார். பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்று. இன்று நிலை என்ன? சில நாட்களுக்கு முன்னே அவர் ஆட்சியில் அமர்ந்திருக்கும் டில்லி மாநகரம் சென்று இருந்தேன். மிக்க மகிழ்ச்சி. சிற்சில சிறிய உள் தெருவுகளிலன்றி பெரும்பாலான இடங்களில் மக்கள் புகை பிடிப்பதை நான் காணவில்லை. ஆனால் சென்னையில் நான் கண்டது என்ன?

பீடி பிடிப்பவர்களும் சரி! சிகரெட்டு பிடிப்பவர்களும் சரி! வேட்டி அணிந்திருந்தாலும், லுங்கி அணிந்திருந்தாலும், பாண்ட் அணிந்திருந்தாலும், எந்த பாகுப்பாடும் இல்லாமல், முழுச்சுதந்திரமான உணர்வோடு புகைப் பிடித்துத் தள்ளுவதை தாராளமாகப் பார்க்க முடிந்தது. ஒரு உயர்தர ஓட்டலில், நுழைவு வாயிலில் படித்தவராக, நல்ல பதவியில் இருப்பதாகக் காணப்பட்ட ஒரு நபர் நின்று சிகரெட்டு பிடித்துக்கொண்டிருந்தார். நான் அதை ஆட்சேபிக்கவும், நீங்க என்ன போலிஸ்காரரா? உங்க வேலைப் பாத்துக்கிட்டுப்போங்க சார் என்று அதட்டலாகச் சொன்னார். மேலும் பேச விருப்பமில்லாமல் நகர்ந்தேன். என்ன அன்பு மணி சார்? உங்கள் உத்திரவு, தமிழ்நாடு சென்று அடைய வில்லையா? அங்கு இயங்கும் உங்கள் நண்பர்களின் அரசு உங்கள் ஆணையை மதிக்கவில்லையா?

பதவியில் அமர்ந்து பேசுவதும், பேப்பர் வழியில் ஆணை போடுவதும் எளிது? எந்த ஒரு ஆணையும் நடைமுறை படுத்தப்பட வேண்டும். அதற்கு உண்டான தயாரிப்புகளுக்கு பின்னரே ஆணை போட வேண்டும். இல்லையென்றால் இது போன்ற நல்லெண்ணங்கள் எள்ளி நகையாட வைக்கும், வெட்டிப் பேச்சுக்களாகவே முடியும்.

No comments: