Saturday, November 22, 2008

அறிவுரை வேண்டாம்

சட்டக் கல்லூரி வாசலில் நடந்தது, இன்றைய சமுதாய வளர்ச்சி நோக்கில் பார்த்தால், காட்டு மிராண்டித் தனமானது, கண்டிக்கத் தக்கது, கண்டனம் செய்யப்பட வேண்டியது. ஆனால் தமிழ் நாட்டின் முதலமைச்சர் வருத்தப்படவில்லை, அநீதிகளை கண்டிக்கவில்லை, கொடுத்தது அறிவுரைகள் மட்டுமே. அறிவுரைகள் யாருக்குத் தேவை? தவறு செய்பவர்களுக்கு. அறியாமையின் காரணமாக, தவறாக சிந்தித்து, தன் செயல்களின் பின் விளைவுகளை உணராமல் தவறு செய்பவர்களுக்கு, வயதிலும், வாழ்க்கை நெறியிலும் வுயர்ந்தவர்கள், முதிர்ந்தவர்கள் கொடுக்க வேண்டியது அறிவுரை. ஆனால் சட்டக்கல்லூரி வாயிலில் நடந்தது, தவறு அல்ல. அநாகரீகம், அநீதி, அதிகாரத்தில் இருப்பவர்களால் முழுவதும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியல் செயல். கைபொத்தி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்தபின், அறிவுரை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டியது, ஆறுதல் மட்டுமன்றி, மருத்துவத்துறையில் முழு உதவி. அநியாயம் இழைத்தவர்கள் கண்டிக்கப் படுவது மட்டுமன்றி, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டியவர்கள். இதற்கு உண்டான, நெஞ்சுக்கு நீதி யும், நீதியை நிலை நாட்ட வேண்டிய துணிவும், வேற்றுமை பாராத உயர்ந்த எண்ணமும் இருக்கிறதா தமிழக முதல்வரிடம் என்பதை காலம் நன்றாகக் காட்டிக் கொடுத்து விடும்.

No comments: