சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கலைஞர் திரு.கருணாநிதி அவர்களின் மத, கடவுள் சம்பந்தப் பற்றிய உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் படித்தேன். நெற்றியில் நாம் விபூதி பூிக்கொள்வதைப் பற்றியும், பார்ப்பனர்கள் பூணூல் அணிவதைப் பற்றியும் கேள்விகள் எழுப்பினார்.
பகுத்தறிவு (அவர்கள் எண்ணப்படி) வாதங்களை முன் வைத்தார். சற்றே எள்ளி நகையாடினார். நன்று அய்யா! நன்று! இதே போன்ற முற்போக்கு எண்ணங்களை கிருத்துவர் முன்னமும், இஸ்லாமியர் முன்னமும் வைப்பீர்களா? சிலுவை எதற்கு என்றோ, தாடி மற்றும் குல்லா எதற்கு என்றோ உங்களால் கேட்டு விட முடியுமா? ஐந்து கால வழிபாடு எதற்கு என்றோ உங்களால் கேட்டு விட முடியாமா?

(இக்கேள்விகளை எழுப்புவதற்கு, கிருத்துவ அன்பர்களும், இஸ்லாமிய அன்பர்களும் என்னை மன்னிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ள நான் இது போன்ற அர்த்தமற்ற கேள்விகளை, பகுத்தறிவு என்ற போர்வையில் கேட்கத் துணிய மாட்டேன்.)
முடியாது. எனென்றால், இது அவர்கள் மேல் உள்ள பாச உணர்வோ, அல்லது அவர் தம் மதங்களின் மேல் உள்ள அபிமானமோ அல்ல. அவர்களிடம் மற்றும் பார்ப்பன விரோத இந்து மக்களின் கைகளில் இருக்கும் ஒட்டு. இவர் இது போன்ற பேச்சுக்களால் பார்ப்பன விரோத ஓட்டுக்களை எண்ணும் போது, கலைஞரின், கலைஞர் தொலைக்காட்சி வல்லுனர்கள் பார்ப்பன ஆதரவு தொடர் நாடகங்களை மற்றவர் மூலம் அரங்கேற்றி பார்ப்பனர் ஓட்டுக்களையும், முக்கியமாக பெண்மக்களின் ஓட்டுக்களை, வலுப்படுத்திக் கொள்வார்கள்.
நெஞ்சுக்கு நீதி
பெட்டிக்குள் ஒட்டு
பிள்ளைக்குப் பதவி- நாம்
குனிபவர்களை மட்டுமே குட்டுவோம்
No comments:
Post a Comment