அரசியல்வாதிகள் ஆசை காட்டி மோசம் செய்வார்களென்பான்
ஆசிரியர்கள் கல்வியை காசாக்குகிறார்களென்பான்
வக்கீல்களை பொய்களின் வியாபாரிகளென்பான்
மருத்துவர்களின் முதலீடு மனிதனின் நோயென்பான்
கடைக்காரர்களை கலப்பட வாதிகளென்பான்
பேராசை கொண்டு பொய்யான இடங்களில் முதலீடு செய்வான்
இலவச பொருள் ஆசையில் பொழுதும் அலைவான்
கிடைத்தால் அள்ளிக்கொள்வான்,
கிடைக்காவிட்டால் பழைய பாட்டைப்பாடத் துவங்குவான்
அரசியல்வாதிகள் .............................
No comments:
Post a Comment