அன்று அவள் மகள் பிறந்த தினம். அருமையாக வடித்தாள் அவள் ஓர் ஆருயிர் கவிதை. மகனுக்கு இரு தினங்கள் சென்று பேச்சுப் போட்டி. புள்ளி போட்டு பட்டியலிட்டு குறிப்புகளைக் கொடுத்தாள். வருடக்கடைசி - கணவன் வருமான வரிக்கணக்கில் தடுமாறினான். பத்து நிமிடத்தில் பகுதி போட்டு சரளமக்கினாள் அவன் கணக்கை. மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போகலாம் அவள் திறமைகளை.
பெரும்பகுதி நேரம் தினம் சமையலறையில். சமைக்கவும், பாத்திரம் தேய்க்கவும், துணி துவைக்கவும். அவள் ஒரு சாணி சுமக்கும் சுஷ்மிதா.
No comments:
Post a Comment