Sunday, January 4, 2009







நான் 1947 க்குப்பிறகு பிறந்தவன். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். பெரியோர்கள் chollak கேடடு இருக்கிறேன். ஆனால் வருடம் செல்லச் செல்ல நல்மனம் கொண்டோர் மீண்டும் புத்துணர்வு பெற்று, புதிய விடுதலைப் போராட்டத்திற்கித் தேவையான உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.



இன்றைய பெரியோர்கள் அதாவது, 1947 லிருந்து 1955 க்கு இடையில் பிறந்தவர்கள், தம் சிறு வயதில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரில் பார்த்தவர்கள், அவர்கள் பேசக்கேட்டவர்கள் இளைஞர்களை வழி நடத்த வேண்டும்.



இனிமேல் நடக்க வேண்டிய சுதந்திர போராட்டம், 1900 களில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை விட வலிமையானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்று நமது எதிரிகள் வெளி நாட்டவர்கள் அல்ல. நம் நாட்டு மக்கள். அரசியல்வாதி, அதிகாரி, வியாபாரி, குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி என்ற பெயர்களில், அயோக்கியத் தனத்திற்கும், அநியாயத்திற்கும், ஊழல் செயல்களுக்கும் துணை போகும் நாணயம் இழந்த மக்கள்.



இவர்கள் எல்லாரிடமுமிருந்து வேண்டும் மீண்டும் ஒரு சுதந்திரம். மீண்டும் தலை தூக்கட்டும் ஒரு "விடுதலைப் போராட்டம்".

No comments: