சேகர் திவாரி என்னும் உத்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினர். தன் கட்சித் தலைவி அம்மாநில முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக, பணம் திரட்டும் முயற்சியில் கொலையே செய்யத் துணிந்தார். இன்று பத்திரிகைகளில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த்ததாக பிரசுரிக்கப் பட்டுள்ளது. இந்த குற்றத்தில் சாட்சிகளை அழித்ததாக அவர் மனைவி விபா திவாரி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மஹாத்மா காந்தியில் ஆரம்பித்து, பல இலட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் , உடலையும், உடமைகளையும், உயிரையும், பணையம் வைத்து வாங்கிய சுதந்திரம், இப்பொழுது கொலையாளர்கள் கையிலும், பண்பற்ற, ஈனமடைந்த அரசியல், அதிகார வர்கங்களிடம் குன்றி, நிலைகெட்டுக் கிடக்கிறது. நாம் துவங்குவோம் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்.
No comments:
Post a Comment