Sunday, January 25, 2009

கோட்டு சூட்டுக் குற்றவாளிகள்



தமிழ் மொழியில் பழமொழிகள் பல உண்டு. "பேராசை பெரு நஷ்டம்". "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்". இவ்விரு பழ மொழிகளும் "சத்யம்" என்ற பெயரில் உண்மைகளை மூடி மறைத்து அநீதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறை வாசம் புரியும் ராமலிங்க ராஜுக்கும், அவன் குற்றங்களுக்கு துணை போன மற்றும் பலருக்கும், முழுமையாகப் பொருந்தும்.





பொய்த்த பழமொழி "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்". படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், அறிவுத்திறமை அதிகம் கொண்டவர்கள், தன் அறிவை முழுமையாகப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான, பொருள் பல ஈட்டுவதற்கான வழிகள் பல இருக்கும்போது, இன்னமும், தெருப்போருக்கிகளைப் போல், கேடு கேட்டு, தவறான வழி முறைகளை பயன் படுத்துவதின், ஒரு அத்தியாயம், அசத்தியம் ராஜுவின் கதை.





இவர்கள், விசாரணைகளில் வித்தியாசம் பார்க்கத் தேவையில்லை. கற்பழிப்புக் குற்றம், கொலைக் குற்றம், மற்றும் வீடு அல்லது வங்கி புகுந்து கொள்ளை போன்ற குற்றங்களுக்காக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்படி விசாரிக்கப்படுகிறார்களோ அது போன்றே சத்யம் குற்றவாளிகள் விசாரிக் கப்பட வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளி வரும்.

No comments: