நமது இந்தியா ஒரு செக்யுலர் நாடு. அனைவரும் சமம். சாதி மத வேறுபாடு கிடையாது. இந்திய நாட்டின் சட்டங்களுக்கு முன்னர், அனைவரும் ஒன்றே. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த ஐம்பத்து இரண்டு வருடங்களில் சொல்லப்பட்டு, நெய் ஊற்றி வளர்க்கப்பட்டு, உலகத்தை நம்ப வைத்ததாக உணரப்படும் மிகப்பெரிய பொய் இதுதான்.
மிகவும் கவனமாக, நாடு சுதந்திரம் அடைந்த தினத்திலிருந்தே, அல்லது அதற்கு முன்னாலிருந்தே, திட்டங்கள் தீட்டி, நம் அரசியல் வாதிகள் இந்தியர்கள் அனைவரையும், மொழியால், இனத்தால், மதத்தால் பிரித்து லாபம் அடைந்தார்கள், அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்து - இஸ்லாம் பிரிவினை மிகப்பெரியது. இதை நாட்டின் தெற்கில் வாழ்பவர்கள் உணர்வது சிரமம். இரண்டு மதத்தினருக்கும் இடையே இருக்கும் இடைவெளி, வெறுப்பு, விரோதம் எளிமையாகத் தீர்க்கக்கூடிய விஷயமல்ல. பற்பல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் கடுமையாக உழைத்து, இடைவெளியை அதிகப்படுத்தினார்கள். அதனால் பற்பல பெரும் லாபம் ஈட்டினார்கள்.
இன்று உண்மை நிலை இது தான். மேற்கிலும், வடக்கிலும், மற்றும் பல பிரதேசங்களிலும், இந்துக்கள் வாழும் இடங்களில் இஸ்லாமியர் வாழ முடியாது. இஸ்லாமியர் வாழும் இடங்கள், மினி பாகிஸ்தான் என்று அழைக்கப் படுகின்றன. மும்பையிலும், மற்றும் குஜராத்திலும், இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்து, பாகிஸ்தான் குழு வெற்றி பெற்றால், சில விஷமிகள் வெடி வைத்து கொண்டாடி விரோதத்தை வளர்த்தார்கள்.
தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் என்னிடம் ஒரு இஸ்லாமிய நண்பர் கூறினார் "அல்லா வாக்குப்படி, ஒரு நாள் இல்லை ஒரு நாள், உலகம் முழுதும் இஸ்லாமிய மதம் மட்டுமே இருக்கும். அதைச் செய்து காட்டுவது ஒவ்வொரு இஸ்லாமிய மதத்தினரின் கடமை"
இது போன்றே எண்ணங்களை வளர்த்ததில் மதத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பெரும் பங்கு ஆற்றினர். தங்கள் லாபங்களை பங்கு போட்டுக்கொண்டனர். நஷ்டங்களை பொது மக்களாகிய நாம் மட்டுமே அனுபவிக்கிறோம் . மத பாகு பாடின்றி. .....................தொடரும்