எல்.டி.டி. ஈ. செய்தது, செய்வது, சரி, தவறு என்ற வாக்கு வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் என்னால் உறுதியாகச்சொல்ல முடியும் ராஜபக்சே அரசு தமிழர்கள், தமிழ் பேசும் மனித குலத்தின் மீது நடத்தும் வெறியாட்டம் எந்த ஒரு இனத்தினனாலும், எந்த ஒரு மொழி பெசுபவனாலும், எந்த நாட்டைச் செர்ந்தவனாலும் ஒப்புக்கொள்ள முடியாத அநியாய செயல்.
ராஜபக்சே ஒரு தேர்ந்த ஊழலில் ஊறிய அரசியல்வாதி. அவன் தன் ஊழல் செயல்களை, தம் நாட்டு மக்களிடமிருந்து மறைக்க, திசை திருப்ப ஆடும் ஆட்டம் இது. உலகத்தில் பல விதமான மனித நேய நிறுவனங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் இது வரை, இந்த வெறியாட்டத்தை நிறுத்த செய்த செயல்கள் என்ன? பெரிதான கேள்விக்குறி!
அது போகட்டும். தமிழன், தமிழ் உடன்பிறப்பு என்று பிதற்றித் திரியும், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தது என்ன? மிகப்பெரிய கேள்விக்குறி! ஒன்றும் செய்ய விரும்ப வில்லையா? ஒன்றும் செய்ய இயலவில்லையா? அல்லது முயற்சி எடுப்பதில் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, அல்லது கட்சி விவகாரத்திலோ நஷ்டமா?
பதில் எதுவாக வேணாலும் இருக்கட்டும். உண்மை இதுதான். தமிழ் பேசும் மனிதனுக்கு, சாதாரண குடும்பங்களுக்கு, உலக அளவில், ஒரு கொடூரம் இழைக்கப்பட்டு வருகிறது. அரசியல் வாதி அரசியல் லாபம் பார்க்கிறான், மனித நேய நிறுவனங்கள் கண்கள் மூடி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கின்றன.
குழந்தைகள் செத்து மடிகின்றன. நாம் அனைவரும் கோழைகளாக, செயலற்றவர்களாக, செய்திகள் படித்து ச் ச் சூ கொட்டி சுய நலமிகளாக திரிகிறோம். யோசித்துப்பார் தமிழா! - யோசித்துப்பார் மனிதா! நீ செய்யக்கூடியது என்ன!
விழித்தெழு! உயிர்வதையை தடுத்து நிறுத்து!

No comments:
Post a Comment