Thursday, August 21, 2008

பட்டங்கள் பல - கூடவே வரும் பண அறுவடை

கம்பன் எழுத்துக்களைக் கரைத்துக் குடித்தோம்
குறள்களை வரிக்கு வரி விரிவாக விவாதித்தோம்
கவிதைக் கடை பரப்பிவிட்டோம் இப்பொழுது நாம்
எழுதுவதெல்லாம் விரசமும், ஆபாசமும் தான் - கிடைக்கிறதல்லவா
பணம் கட்டுக் கட்டாக - கூடவே வரும் பல பட்டங்களும்
தன் மானத்தைத் தள்ளி வைத்து தலைவர்கள் காலில் விழுந்து எழுந்தால்
பட்டங்களுடன், பதவியும் கிட்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!

Wednesday, August 20, 2008

வெறுப்பில் வளர்ந்தோம்

மொழி வெறுப்பை விதைத்தோம்
- வளர்த்தோம்
இன, சாதி வெறுப்பை விதைத்தோம்
- வளர்த்தோம்
கூடவே பண ஆசை விதைத்தோம்
- வளர்த்தோம்
பணத்துடன், பதவி ஆசை விதைத்தோம்
- வளர்த்தோம்
பணம் குவிந்து விட்டது,
பதவிகள் பல பெற்று விட்டோம்
வெறுப்பு எண்ணங்கள் விதைப்பதை நாம்
விட்டு விடவில்லை.
அவாள், ஆத்துக்காறாள் என்று
கிண்டல் கவிதைகள் எழுதி இன்னமும்
வெறுப்பை உமிழ்வோம்.

தமிழன்பன்

இளவயதில் என் இனிய பள்ளியில்
தள்ளி வைக்கப் பட்டேன் தனிமைப் படுத்தப்பட்டேன்
குற்றம் என்ன நான் செய்தேன் என்று
கேட்டால் பதில் என்ன கூறுவேன்
தமிழைத் 'தமில்' என்று சொல்லாமல் தமிழ்
என்று தவறாமல் சொன்னேன்
'தமில் வாள்க' என்று சொல்லாமல், தமிழ் வாழ்க
என்று தெளிவாகச் சொன்னேன்
பாப்பான் என்று பழிக்கப் பட்டேன்,
பூணூல் அறுபட்டேன் - இருந்தும்
சொல்கிறேன் - தமிழ் வாழ்க, தமிழன் வளர்க.

Saturday, August 16, 2008

ஆணவம்! அலட்சியம்! அடக்கம்!

சுதந்திர தின பரிசளிப்பு விழா! முதல்வர் கருணாநிதி அமர்ந்திருக்கிறார். சாதனையாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறார்கள். பெரும் சாதனையாளர்கள் சிலர், தாய்க்குலம் உள் பட, முதல்வர்கள் முன்னே மண்டி இட்டு பதக்கத்தையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
முக்கியமாக திருச்சியிலிருந்து வந்த ஒரு பெண் சாதனையாளர், இயேசு கிருஸ்து முன்னர் மற்றுமே மண்டிஇட வேண்டியவர் முதல்வர் முன் மண்டியிட்டது காணவே கஷ்டமாக இருந்தது. இது எதைக்காட்டுகிறது? பதவியில் இருப்பவர்களின் ஆணவத்தையா? முதவரின் உடல் நிலை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் ஏற்பாடுகளை செய்யாத அதிகாரிகளின் அலட்சியப் போக்கையா? அல்லது அடக்கம் என்ற பெயரில் சாதனையாளர்களுக்கு ஏற்பட்ட தலை குனிவையா? எல்லாவற்றையுமேயா?

ஊதிய உயர்வு

சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அறிவித்துள்ளார்: தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று. அரசு ஊழியர்களும் உடனே தங்களது நன்றி உணர்வைத் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். கருனாநிதிக்கும் அவர் அரசுக்கும் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம் என்று. நன்று நண்பர்களே! உங்கள் சம்பளம் மக்கள் வரிப்பணத்திலிருந்து வருகிறது. நீங்கள் என்றும் தமிழ் மக்களுக்கு நன்றியுடன் இருப்பது மட்டுமல்லாமல் உரிய கடமைகளை, உரிய முறையில், உரிய நேரத்தில் அவர்களுக்குச் செய்வதுதான், சரியான செயல். அதை விட்டு, முதல்வருக்கும் அவர் அரசுக்கும் நன்றியுடன் இருப்போம் என்று சொல்வது பற்பல சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது.

Sunday, August 10, 2008

விடுதலைப் போராட்டம்

நான் 1947 க்குப்பிறகு பிறந்தவன். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். பெரியோர்கள் சொல்லக் கேடடு இருக்கிறேன். ஆனால் வருடம் செல்லச் செல்ல நல்மனம் கொண்டோர் மீண்டும் புத்துணர்வு பெற்று, புதிய விடுதலைப் போராட்டத்திற்கித் தேவையான உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.
இன்றைய பெரியோர்கள் அதாவது, 1947 லிருந்து 1955 க்கு இடையில் பிறந்தவர்கள், தம் சிறு வயதில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரில் பார்த்தவர்கள், அவர்கள் பேசக்கேட்டவர்கள் இளைஞர்களை வழி நடத்த வேண்டும்.
இனிமேல் நடக்க வேண்டிய சுதந்திர போராட்டம், 1900 களில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை விட வலிமையானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்று நமது எதிரிகள் வெளி நாட்டவர்கள் அல்ல. நம் நாட்டு மக்கள். அரசியல்வாதி, அதிகாரி, வியாபாரி, குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி என்ற பெயர்களில், அயோக்கியத் தனத்திற்கும், அநியாயத்திற்கும், ஊழல் செயல்களுக்கும் துணை போகும் நாணயம் இழந்த மக்கள்.
இவர்கள் எல்லாரிடமுமிருந்து வேண்டும் மீண்டும் ஒரு சுதந்திரம். மீண்டும் தலை தூக்கட்டும் ஒரு "விடுதலைப் போராட்டம்".

Saturday, August 9, 2008

உரையாடல் 6

கல்பனா "அம்மா! நாணயம்னா என்ன?
"நாணயம்னா, நியாயங்களை ஒட்டி நடத்தல்" என்று ஒரு வரியில் பதில் கூறினாள் வைதேகி.
"புரியற மாதிரி விளக்கமா சொல்லுங்கம்மா!" என்று வலியுறித்தினாள் கல்பனா.
"நாணயமாக நடப்பது எப்படின்னா, நியாயம்னா என்னன்னு புரிஞ்சிக்கணும். நியாயம், நேர்மை என்ற வார்த்தைகளைப் புரிஞ்சிக்கிறது ரொம்ப சுலபம்". சுலபமாகச்சொன்னாள் வைதேகி.
"என்னம்மா, இவ்ளோ சுலபமா சொல்றீங்க?" ஆச்சரியத்துடன் கேட்டாள் கல்பனா.
"ரொம்ப சுலபம்தாம்மா. நியாயம், நேர்மை, நாணயம் போன்ற வார்த்தைகளைப் புரிஞ்சிக்கனும்னா, இயற்கையின் தன்மையைப் புரிஞ்சிக்கணும். நல்ல அறுவடை வேணும்னா சில விதிகளைக் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேணும். அவை:
௧. சரியான நிலத்தை தேர்ந்தெடு.
௨. ஆழ உழுதிடு
௩. சரியான நேரத்தில் தேர்ந்தேடுத்த விதைகளைப் போடு.
௪. தண்ணீர் வூற்று, உரமிடு
௫. வீணானவற்றைப் பிடுங்கி ஏறி.
௬. விளைந்து முதிர்ந்ததும் அறுவடை செய்.
இது போலவே கல்பனா ஒவ்வொரு செயலுக்கும், அதனுடன் இணைந்த ஒரு இயற்கை நியதி உண்டு. நேர்மை, நாணயம் என்பது வேறு எதுவுமில்லை. இந்த இயற்கை நியதிகளை ஒட்டி நடப்பது தான்" என்று சொல்லி முடித்தாள் வைதேகி.
கல்பனா ஆச்சரியத்தில் முழுகினாள்.

CODE OF CONDUCT

An average Indian has no code of conduct. No code of conduct at home. No code of conduct on the roads while driving down his vehicle, no code of conduct in offices and no code of conduct in public places. This is the reason for our overall cultural degradation.

Adherence to a good code of conduct at any place begins with the understanding the word ‘Freedom’. Freedom means ‘the power to act or speak or think without externally imposed restraints’. Not just the words they mean, but one must understand the spirit behind these words. The true spirit begins with an understanding that ‘my freedom ends where the others’ begins. And none has unlimited freedom.

Unfortunately many in our country believe that they have an unlimited freedom. Freedom to encroach upon the others’. This is the beginning of our cultural degradation.

Can we have a clear code of conduct at every place we present ourselves? An earnest beginning at any level will spread slowly and bring about a cultural revolution. We need it now and we deserve it too!

OLYMPICS

Olympics has just begun in China! It was a great event 08:08:08 0n 08:08:’08. 91,000 people, in Beijing and over one billion on television, witnessed the three and a half hour show. This Olympics is expected to be the best Olympics run anywhere in the world at any time.

On the first day, in the qualifying rounds two of our participants failed to clear. Despite the fact that Ms.Sonia was present to cheer the Indian contingent.

At the end of the Olympic games, China will emerge victorious and triumphant. Not only it would have concluded the best organized Olympic games so far, but also would have bagged many golds, silvers, and bronzes. Most of our people will return empty handed. Not their fault at all. We must keep our hopes pinned, overall, to one or two medals.

All these will have no impact on our politicians, no impact on our educationists, no impact on the intellectuals, no impact on the common man.

We will go on to continue our rat race to eat our cakes. However at the end of winning or loosing, we will remain rats.

However to maintain some decorum, in between we will raise some slogans such as “Bharat desh hamara”, “Unity in Diversity”, “Bharat Mata ki Jay” etc., etc.,



Wednesday, August 6, 2008

LIFE IS CHEAP

THE SERIES OF BOMBS WHICH EXPLODED AHMEDABAD CITY HAS REALLY SHAKEN UP THE BELIEF THAT AHMEDABAD IS A SAFE CITY TO LIVE IN. THERE ARE MANY THEORIES DOING THE ROUNDS - SOME THEM ARE: REJUVENATION OF SIMI ACTIVISTS, REVENGE FOR 2002 RIOTS, INVOLVMENT OF INDIAN MUJAHUDDEEN AND SO ON. AT THE END THE MATTER OF FACT IS INNOCENT PEOPLE LOST THEIR LIVES IN THIS INHUMAN ACT.
AS WE READ THE PUBLICATIONS FROM THE CITY, IT IS REALLY HEART RENDERING AND PEOPLE WITH HUMANITY, WHATEVER RELIGION THEY BELONG TO WILL DEEPLY CONDEMN THE SAME.
CHILDREN HAVE BEEN BURNT TO DEATH. WHEN THE BOMB EXPLODED IN THE CIVIL HOSPITAL, A DOCTOR COUPLE LOST THEIR LIVES. THEY CAME FOR HER PREGNANCY CHECK. THEY WERE MARRIED HARDLY FOR A YEAR AND THE UNBORN CHILD TOO DIED WITH THEM.
THREE OF THEM WHO DIED IN THE HOSPITAL BLAST WERE THOSE WHO ON HEARING ABOUT THE BOMB BLASTS AT DIFFERENT LOCATIONS, RUSHED TO THE HOSPITAL TO DONATE BLOOD. THEY HAVE DONE IT IN THE PAST TOO WHENEVER THERE WAS A MAJOR TRAGEDY IN THE CITY. THIS TIME THEY DID NOT GIVE THIER BLOOD. THEY GAVE THEIR LIFE AWAY.
TWO CHILDREN WERE ON A RIDE IN THE HOSPITAL COMPOUND WITH THEIR NEW GIFT, THAT IS A SECOND HAND BICYCLE BOUGHT BY THEIR FATHER ON THAT DAY. THEY FATHER WAS WITH THEM, AS HE WAS AN EMPLOYEE IN THE HOSPITAL. THE BOMB BLAST IN THE HOSPITAL COMPOUND TOOK OUT FATHER'S LIFE INSTANTLY. THE ELDER SON DIED AFTER SIX DAYS AND THE YOUNGER IS STILL STRUGGLING FOR LIFE IN THE HOSPITAL.
THESE ARE SOME OF THE GLIMPSES OF THE TRAGEDY AS PUBLISHED IN THE LOCAL PUBLICATIONS. WHEREVER IN THE WORLD YOU ARE, MUST PREY FOR THE SUFFERING AND THEIR FAMILY MEMBERS AND CONDEMN THE ATROCITIES LOUDLY - WHICHEVER RELIGION YOU BELONG TO PLEASE!