சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அறிவித்துள்ளார்: தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று. அரசு ஊழியர்களும் உடனே தங்களது நன்றி உணர்வைத் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். கருனாநிதிக்கும் அவர் அரசுக்கும் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம் என்று. நன்று நண்பர்களே! உங்கள் சம்பளம் மக்கள் வரிப்பணத்திலிருந்து வருகிறது. நீங்கள் என்றும் தமிழ் மக்களுக்கு நன்றியுடன் இருப்பது மட்டுமல்லாமல் உரிய கடமைகளை, உரிய முறையில், உரிய நேரத்தில் அவர்களுக்குச் செய்வதுதான், சரியான செயல். அதை விட்டு, முதல்வருக்கும் அவர் அரசுக்கும் நன்றியுடன் இருப்போம் என்று சொல்வது பற்பல சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது.
No comments:
Post a Comment