சுதந்திர தின பரிசளிப்பு விழா! முதல்வர் கருணாநிதி அமர்ந்திருக்கிறார். சாதனையாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறார்கள். பெரும் சாதனையாளர்கள் சிலர், தாய்க்குலம் உள் பட, முதல்வர்கள் முன்னே மண்டி இட்டு பதக்கத்தையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
முக்கியமாக திருச்சியிலிருந்து வந்த ஒரு பெண் சாதனையாளர், இயேசு கிருஸ்து முன்னர் மற்றுமே மண்டிஇட வேண்டியவர் முதல்வர் முன் மண்டியிட்டது காணவே கஷ்டமாக இருந்தது. இது எதைக்காட்டுகிறது? பதவியில் இருப்பவர்களின் ஆணவத்தையா? முதவரின் உடல் நிலை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் ஏற்பாடுகளை செய்யாத அதிகாரிகளின் அலட்சியப் போக்கையா? அல்லது அடக்கம் என்ற பெயரில் சாதனையாளர்களுக்கு ஏற்பட்ட தலை குனிவையா? எல்லாவற்றையுமேயா?
No comments:
Post a Comment