கல்பனா "அம்மா! நாணயம்னா என்ன?
"நாணயம்னா, நியாயங்களை ஒட்டி நடத்தல்" என்று ஒரு வரியில் பதில் கூறினாள் வைதேகி.
"புரியற மாதிரி விளக்கமா சொல்லுங்கம்மா!" என்று வலியுறித்தினாள் கல்பனா.
"நாணயமாக நடப்பது எப்படின்னா, நியாயம்னா என்னன்னு புரிஞ்சிக்கணும். நியாயம், நேர்மை என்ற வார்த்தைகளைப் புரிஞ்சிக்கிறது ரொம்ப சுலபம்". சுலபமாகச்சொன்னாள் வைதேகி.
"என்னம்மா, இவ்ளோ சுலபமா சொல்றீங்க?" ஆச்சரியத்துடன் கேட்டாள் கல்பனா.
"ரொம்ப சுலபம்தாம்மா. நியாயம், நேர்மை, நாணயம் போன்ற வார்த்தைகளைப் புரிஞ்சிக்கனும்னா, இயற்கையின் தன்மையைப் புரிஞ்சிக்கணும். நல்ல அறுவடை வேணும்னா சில விதிகளைக் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேணும். அவை:
௧. சரியான நிலத்தை தேர்ந்தெடு.
௨. ஆழ உழுதிடு
௩. சரியான நேரத்தில் தேர்ந்தேடுத்த விதைகளைப் போடு.
௪. தண்ணீர் வூற்று, உரமிடு
௫. வீணானவற்றைப் பிடுங்கி ஏறி.
௬. விளைந்து முதிர்ந்ததும் அறுவடை செய்.
இது போலவே கல்பனா ஒவ்வொரு செயலுக்கும், அதனுடன் இணைந்த ஒரு இயற்கை நியதி உண்டு. நேர்மை, நாணயம் என்பது வேறு எதுவுமில்லை. இந்த இயற்கை நியதிகளை ஒட்டி நடப்பது தான்" என்று சொல்லி முடித்தாள் வைதேகி.
கல்பனா ஆச்சரியத்தில் முழுகினாள்.
No comments:
Post a Comment