'புகழ் பெற்ற தமிழன்' சொன்னான் "எல்லாப்புகழும் இறைவனுக்கே". கைகளில் பெற்ற உலக மகா விருதுகள். உதடுகளில் தன்னடக்கத்துடன் கூடிய சிரிப்பு. குரலில் மென்மை. சிந்தனையில் நன்றியுடன் கூடிய பெருமை. அத்தருணம் மாயையான இப்பிறவியில், உண்மையான சில நொடிகள்.
இவற்றின் பின்னே தான், எவ்வளவு இடர்ப்பாடுகள், கடுமையான உழைப்பு, உயரிய தியாகங்கள். அவனை உயர்ந்த தமிழன், இந்தியன், என்று மட்டுமே சொல்லி, குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நாம் முயல வேண்டாம். ரஹ்மான் ஒரு உயர் மானுடப் பிறவி. இந்தியனாகவும், தமிழனாகவும் பிறந்ததில் நாம் பெறுகிறோம் இரட்டிப்பு மகிழ்ச்சி.
No comments:
Post a Comment