ராஜுவைப் பற்றி, அவன் தம் பேராசை, பொருளீட்டும் ஆர்வத்தில் செய்த தில்லு முல்லுகள், படிக்கப் படிக்க திகைக்க வைக்கின்றன. இப்பொழுது எழும் கேள்வி, தில்லு முல்லுகளில் திறமைசாலி மாட்டிக்கொண்டது ஏன்? எப்படி? இதற்கு எனக்கு கிடைத்த பதில் ஒன்றே ஒன்று தான். ராஜூ ஒரு பாதையில் திசை மாறிய ஆடு? தான் செய்யும் தொழிலில் மிகப்பெரிய பெயரும், பல கோடிகள் பணமும் ஈட்டலாம் என்று அவன் ஆரம்பத்தில் நினைத்திருக்கக்கூடும். அதில் தவறில்லை. பெயரும், பொருளும் வெகுவாக வென்று கொண்டும் இருந்தான். ஆனால் அவன் பெற்ற பெயர், பொருள் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தவில்லை. பேராசைக்கு வித்தாகிவிட்டது. அந்த வித்து முளை விட்டு, வளர்ந்து பெரு மரம் ஆகி விட்டது. அம்மரத்தின் கனிகளை, சிறைக்குள்ளே இன்று கொய்து கொண்டிருக்கிறான்.
மீண்டும், சிறை வாசத்திலிருந்து மீண்டு வெளியே வருவான். அன்று, அவன் எண்ணத்தில், நோக்கத்தில், மாறுதல் இருக்குமா? செய்தவை தவறு என்று உணர்வானா? இது ஒரு பெரிய கேள்விக்குறி தான்! இழந்ததை வேகமாக மீட்க்கப்பார்ப்பான். தவறுகள் செய்வதில் ஏற்ப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வான். தொழில் துறையை மாற்றிக் கொள்வான். பல கோடிகள் களவாணித்தனம் செய்தாலும், இந்தியாவில் குற்றவாளியாகாமல் காத்து, குற்றம் சாட்டப்பட்டாலும், தந்திரமாக தப்பித்து, கடைசி வரை பேரும், புகழுடனும் வாழக்கூடிய துறை, கயவர்களின் பெருங்கூட்டத்துறை அரசியல் துறைதான் என்பதை உணர்ந்து, அதில் ஐக்கியமாகி விடுவான். ஆச்சரியப் படுவதிற் கில்லை. இப்பொழுதே, அவனிடம் உள்ள செல்வாக்கை உணர்ந்து, சில பல கட்சிகள் அவனுடன் பேச்சு வார்த்தை துவங்கி இருக்கலாம்.
வாழ்க இந்தியா! வளர்க நமது ஜனநாயகம்!
No comments:
Post a Comment