இலக்கியம், கலை, வணிகம் மற்றும் விஞ்ஞான்னத் துறை பள்ளிகளில், கல்லூரிகளில் ஜாதி வழி ஒதுக்கீடு. சரி. மேல் படிப்பு, மற்றும் சிறப்பு கல்வி நிறுவனங்கள் - ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களை விட்டு விடலாமா? அங்கும் வந்தது ஜாதி வழி ஒதுக்கீடு. ஜாதி வழி ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவனுக்கு, மதிப்பு வழியில் இடம் பெற்ற ஆசிரியர் மட்டும் படிப்பித்தால் போதுமா? போதவே போதாது. இந்த உயரிய சிந்தனையில் பிறந்தது ஐ.ஐ.டி. யில் ஆசிரியர்களுக்கும் ஜாதி வழி ஒதுக்கீடு.
சட்டதைப்ப் பின் பற்றும் ஒவ்வொரு குடி மகனும், இவ்வழியைத் தன் குடும்ப மற்றும் சமுதாய வாழ்க்கையில் பின் பற்றுவது, அவனது தலையாய கடமை. மேலும், இதன் மூலம் அவன் தூக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் ஒவ்வொரு மதிப்பு முறையில் முன்னேறும் இந்தியனையும் எழுப்பி சிந்தனையில் ஆழ்த்த வேண்டும். அவன் இந்நாட்டை விட்டு ஓட வழிகள் காட்ட வேண்டும். ஒவ்வொரு மதிப்பு முறை குடி மகனும் நாட்டை விட்டு வெளியேறி விட்டால், பிறகு என்ன ஜாதி முறை ஒதுக்கீடுக்கு அவசியமே இருக்காது. எனவே தங்கள் அனைவருக்கும் என் பணிவார்ந்த வேண்டுகோள். கீழுள்ள சில செயல்களை தவறாமல் செய்ய. நன்றி.
௧. தானும் தன் குடும்ப வுருப்பினர்களும், பத்தில் ஏழு முறை ஜாதி முறை ஒதுக்கீட்டில் பட்டம் பெற்ற மருத்துவரிடமே போக வேண்டும்.
௨. பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும்போது, பத்து ஆசிரியர்களில், ஏழு பேர் ஜாதி முறை ஒதுக்கீட்டில் வந்தவர்களா என்று பார்த்து சேர்க்க வேண்டும்.
௩. அச்சிறுவர், சிறுமியர்களின் பத்து நண்பர்களில், ஏழு பேர் ஜாதி முறை ஒதுக்கீடில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
௪. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், பங்கேற்கும் பத்து விழாக்களில், ஏழு ஜாதி முறை ஒதுக்கீட்டில் வந்தவர்களின் இல்லங்களாக இருக்க வேண்டும்.
௫. இந்திய கிரிக்கெட், புட் பால், ஹாக்கி, மற்றும் அனைத்து அணிகளிலும் பத்தில் ஏழு பேர் ஜாதி வழி ஒதுக்கீட்டில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
௬. பத்தில் ஏழு படங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் ஜாதி வழி ஒதுக்கீட்டில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
௭. இதே சட்டம் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் மற்றும் எல்லோருக்கும் பொருந்த வேண்டும். சிரிப்பு நடிக நடிகையர்கள், இச்சட்டத்திலிருந்து ஒதுக்கப் படலாம்.
௮. புகை வண்டியில் போனாலும் சரி, ஆகாய விமானத்தில் போனாலும் சரி, பத்தில் ஏழு முறை, ஓட்டுனர் ஜாதி வழி ஒதுக்கீடு முறையில் வந்தவராக இருக்க வேண்டும்.
இது போன்று மேலும், மேலும் பற்பல எண்ணங்கள். வாழ்க இந்தியா. வளர்க இந்தியன்.