கல்பனா "அம்மா! அந்தரங்கம்னா என்னம்மா?"
வைதேகி "முதல்ல உறவுன்னா என்னன்னு புரிஞ்சுக்கணும் நீ. சுருக்கமா சொல்லணும்னா, உறவு நெருக்கத்தைக் குறிக்கிறது. நான்கு விதமான உறவுகள், அல்லது நெருக்கங்கள் மனிதர்களிடையே உண்டு.
முதலாவது உடல் நெருக்கம். குழந்தையும் தாயும். குழந்தை, தாயின் கருவின் உள்ளே பிரிக்க முடியாதபடி ஒன்றோடு ஒன்றாக உள்ளது. பிறப்பின் பிறகு, மேலும் குழந்தை வளர, வளர, உடல் நெருக்கம் குறைந்து கொண்டே போகிறது.
இரண்டாவது நெருக்கம் வளர ஆரம்பிக்கிறது. அது, உணர்வுகளின் நெருக்கம். மூன்றாவதாக, எண்ணங்களின் நெருக்கம். நமது மனித வாழ்க்கையில், ஒவ்வொரு உறவிலும், ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டு விதமான உறவுகள் மட்டுமே தலை தூக்கி நிற்கும்.
கணவன், மனைவி உறவு, இவற்றிலெல்லாம் முதன்மையான தலை சிறந்த உறவு. கணவன் - மனைவி என்கின்றன பந்தத்தில் மட்டுமே மூன்று விதமான உறவுகளும், ஒரே நேரத்தில் ஒன்று கூடி, அது ஒரு தெய்வீக உறவாக மலர்கிறது.
இதைத்தான் அந்தரங்கம் என்று சொல்கிறோம். இவ்வுறவின் புனிதத்தன்மையினால் இதை அவ்விருவர் உணர்வுகளுக்கு வெளியே மற்றோர்
காண, கேட்க இடம் தரக்கூடாது."
"அம்மா! அருமையாகச் சொன்னீர்கள். இது புரியாமல், ஏனம்மா, சில தொலைக்காட்சிகளில், கணவனும், மனைவியும் ஆயிரக்கணக்கானோர் பார்க்கும்படியாக, கட்டிக்கொள்கிறார்கள், முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். அந்தரங்கம் மேடையில் ஏறும்போது, அருவருப்பாக இருக்கிறது. நீங்க என்னம்மா நினைக்கறீங்க?" என்றான் கல்பனா.
"அது ஒன்றும் இல்லை. பேராசை பிசாசு. மனிதனுக்கு பேராசை, அதாவது வெகு சிறிய செயலுக்கு, பெரும் வரவு கிடைத்து விடும் என்கின்றன வியாதி பற்றி விட்டால், அந்தரங்கம் அரங்கேற்றம் ஆகிவிடும். அதுதான் இப்பொழுது எங்கும் பொதுவாக நடந்து கொண்டிருக்கிறது. மனிதன், பேராசையில் தன் மானத்தை இழக்கத் தயாராகி விட்டான்". என்று முடித்தாள் வைதேகி.
No comments:
Post a Comment