Thursday, July 24, 2008

கலி யுகம்

சிறு வயதில் என் பக்கத்து வீட்டுப்பாட்டி, வாய்க்கு வாய் சொல்லுவாள்: கலி முத்திடுத்துடான்னு. அப்பல்லாம் எனக்கு அர்த்தம் புரியாது. பாட்டி என்னவோ வுலக மக்கள் பண்ற கெட்ட காரியங்களுக்கெல்லாம் கலி மேல பழி போடரான்னு நான் யோசிப்பேன். வர வர அவளுடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தினசரி பேப்பர்களின் முதல் பக்கத்திலேயே புரிய ஆரம்பித்துவிட்டது. எப்படின்னு கேக்கரீங்களா?
௧. அப்பா மகளை வருடம் முழுவதும் கற்பழிப்பு. கேட்டால் 'அல்லா உததிரவு', அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிதற்றுகிறான்.
௨. கொலைகாரன்களும், கூட்டம் சேர்த்து கொள்ளை அடிப்பவர்களும் பல பெயர்களில் நாட்டை ஆளக் கிளம்பி விட்டார்கள்.
௩. ஆசிரியன் பள்ளிக்கூடத்தில் பாய் விரித்து, மாணவிகளைத் தற்காலிக மனைவிகளாக்கிக் கொள்கிறான்.
௪. அறிவிற்சிறந்து பட்டம் பல பெற்று, பொய் கணக்கு எழுதி, பணக்காரர்களுக்கு பக்க பலம் போடுகிறான். பசித்துத் தவிப்பவர்களை வயிற்றிலடிக்கிறான்.
௫. எழுத்தாளனும், கவிஞனும், காசுக்காக வார்த்தைகளை விவச்தையற்றுக் கொட்டுகிறான். பணத்தோடு புகழையும், பட்டங்களையும் அள்ளுகிறான்.
௬. பதவி வகிப்பவன், மேல் பதவி மனிதர் முன்னே, மானம் இழந்து மண்டி போடுகிறான்.
ஆமாம்! பாட்டி சொன்னது உண்மை. கலி முத்திடுத்து.

No comments: