Sunday, July 20, 2008

அன்றைய அரசியல் தலைவர்

வருடம் 1962. எனக்கு வயது எட்டு. என் அக்காவுக்கு வயது பதினாறு . என் அண்ணனுக்கு பதினொன்று. இந்தியா - சீனா போர் ஆரம்பம். நமது இந்தியப் பிரதமர், லால் பஹாதுர் ஷாஸ்த்ரி இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு திங்கள்கிழமையும், விரதம் இருக்க வேண்டும், மதிய உணவை விட்டுக்கொடுத்து, நாட்டுக்காக சேமிக்க வேண்டும் என்று. அன்று மாலை, எங்கள் வீட்டில் கூட்டம் துவங்கியது. நான், என் அண்ணன், அக்கா, அம்மா, அப்பா, மற்றும் என் நண்பன் வெங்கடேஷ். கூட்டத்தின் முடிவு, வரும் திங்கள் கிழமையிலிருந்து விரதம் கடைப்பிடிப்பது என்று. போர் முடிந்தது. வருடங்கள் ஓடி மறைந்தன. ஷாஸ்த்ரி தாஷ்கண்ட் சென்றார், காலமானார் - சிலர் இயற்கை மரணம் என்றனர். பலர் அவர் கொல்லப்பட்டார் என்றனர். ஆனால் எங்கள் திங்கள்கிழமை விரதம் தொடர்ந்தது, பல வருடங்களுக்கு. ஒரு வுயர்வான தலைவர், வுயர்வான எண்ணம், மக்கள் நாங்கள் மதித்தோம், மரியாதை செலுத்தினோம். அவர்கள் வார்த்தைகளை பின் பற்றினோம். இன்று அரசியல்வாதிகளில் பத்துக்கு ஒன்பது பழுது. தலைவர் என்ற பெயரில், திரியும் தெருப்பொறுக்கிகள். இனம் கண்டு கொள்வோம் அவர்களை.

No comments: