கல்பனா "அப்பா, அப்பா, திருவள்ளுவர் யாருப்பா?"
ஜானகிராமன் "அவர் ஒரு புலவர், மக்களுக்கும், மன்னர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் நல் வழிகளை, அன்றும், இன்றும், என்றும் காட்டுபவர். நீ தான் அவரோட குறள்கள் நிறைய படித்திருக்கிறாயே".
"ஆமாம்பா, படித்திருக்கிறேன். படித்துக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் புரியலைப்பா. திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார்கள், அவருக்கு சிலை வைக்கிறார்கள், மேடையில் அவரைப்பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அவர் சொன்னது எதுவுமே பின் பற்றுவது இல்லையேப்பா" என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தாள் கல்பனா.
"புரியலைம்மா" என்றார் ஜானகிராமன்.
"ஆமாம்ப்பா, அவர் கடவுள் வாழ்த்து பாடுகிறார், நம் தலைவர்கள் கடவுள் இல்லை என்கிறார்கள், புலால் உண்கிறார்கள், பல பெண்மணிகளை திருமணம் செய்து கொள்கிறார்கள், குடும்பத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்கிறார்கள். திருவள்ளுவரைத் தமிழ்த் தந்தை என்கிறார்கள். உண்மையிலே அவர் தமிழராப்பா? அவர் தமிழரென்றால், இவர்களெல்லாம் எப்படித் தமிழர்களாக இருக்க முடியும்?"
No comments:
Post a Comment