கல்பனா "அப்பா, அப்பா, காந்திங்கறவர் யாருப்பா?"
ஜானகிராமன் "என்னம்மா, இப்படி கேக்கற? அவர் தான் நமது தேசத்தந்தை, நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்."
கல்பனா "அப்பா, சுதந்திரம்னா என்னப்பா?"
ஜானகிராமன் "சுதந்திரம்னா 'Freedom'. நமக்கெல்லாம் விரும்பியதைப் பேசவும், செய்யவும் உண்டான உரிமை."
கல்பனா "சரிப்பா, புரிஞ்சுடுத்து, ரோடுல போகும்போது முரட்டுத்தனமா தப்பான வழில வண்டியை ஓட்டலாம், குப்பைகளை தெருவில கொட்டலாம், வெத்தலை பாக்கு போட்டு எங்க வேணாலும் துப்பலாம், நம்ம வீட்டு நாய்க்குட்டியைத் தெருவில் கூட்டிக்கொண்டு போயி அசிங்கம் பண்ண வைக்கலாம். இதெல்லாம் காந்தி தான் நமக்கு வாங்கிக் கொடுத்தராப்பா?
No comments:
Post a Comment