கல்பனா "அப்பா, அரசியல்வாதின்னா யாருப்பா?"
ஜானகிராமன் "அரசியல்வாதின்னா முழு நேரமும் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள்"
"புரியலைப்பா!" என்று தன் அறியாமையை வெளிப்படுத்தினாள் கல்பனா.
"அதுதாம்மா, எம்.எல்.ஏ, எம்.பி, மற்றும் பல கட்சித்தலைவர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள் என்று பல பேர்". விளக்கினார் ஜானகிராமன்.
"புரிஞ்சிதுப்பா, அதுல கூட நிறைய பேர் இப்போ ஜெயில்ல இருக்காங்களே. பல வருஷங்களுக்கு முன்னால, சில வருஷங்களுக்கு முன்னால, பண்ணின பல குற்றங்களுக்காக"
"ஆமாம்மா! அதுவும் உண்டு".
"சரிப்பா, அப்பா அரசியல் குற்றவாளிகளின் புகலிடம் என்று சொன்னால் தப்பு இல்லை தானே?
No comments:
Post a Comment