43 ஆயிரம் இலவச டி.வி. விநியோகம். மு.க.ஸ்டாலின் பெருமிதம். இலவசமாக டி.வி பெற்ற ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும், ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருப்பார்கள். டி. வி. பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் அள்ளிக்கொடுத்த அரசியல்வாதிகளை மனதார வாழ்த்திக்கொண்டிருப்பார்கள். கொடுத்தவரும், கொண்டவரும், தன்மானத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். இலவசமாக பொருள்களைக் கூச்சமில்லாமல் பெற்றுக்கொள்வதில் உருவாகும் தன்மான நிலை, தனி மனித ஆக்கத்தில் வந்து விடுமா? அரசுப்பணத்தை, தன் தனி மனித உழைப்பில் உருவாக்கிய பணம் போல் கருதி அள்ளிக்கொடுப்பதில் வரும் ஆனந்தம் வேறு எதிலாவது கிடைக்குமா?
வாழ்க இலவசப்பொருள் ஆசை கொண்ட மனிதர்கள்! வளர்க அரசு சொத்தை அள்ளிக்கொடுக்கும் அரசியல்வாதிகள். யாருக்கும் வெட்கமில்லை!
No comments:
Post a Comment