நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்னர் இவர்கள் கடை விரித்தார்கள். கழகம் என்பது அதன் பேர். பகுத்தறிவு பிரச்சாரம் துவங்கினார்கள். ஒப்புக்கொள்ள வேண்டும். வியாபார தந்திரத்தில் திறமை அவர்களது. மெச்ச வேண்டும். இப்பகுத்தறிவு பிரச்சாரத்தில் மிகவும் கை கொடுத்தது மொழி வெறியும், பார்ப்பன விரோதமும். பிரச்சாரத்திற்குக் கிடைத்தார்கள் திறமையான பேச்சாளர்கள். அடுக்கு மொழியில் ஆவேசமாகப் பேசினார்கள். சாதாரணத் தமிழன், புளகாங்கிதம் அடைந்தான். கைகள் தட்டி ஆரவாரித்தான். வியாபாரம் சூடு பிடித்து விட்டது.நேற்று வரை, பார்ப்பன நண்பனுடன் தோள் மீது கை போட்டு நடந்தவன் உணர்ச்சிகள் உச்சத்துக்கு சென்றான். பூணூல் அறுத்தான். பெருமை அடைந்தான்.
ஆங்கில எழுத்துக்கும், இந்தி எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் தார் கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தான். தலைவர்கள் "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது" என்று கூக்குரல் கொடுத்தார்கள். கரி கொண்டு சுவற்றில் எழுதுவதிலும், தார் கொண்டு எழுத்துக்களை அழிப்பதிலும், பார்ப்பனனின் பூணூலை அறுப்பதிலும் தான் பகுத்தறிவின் பொருள் அடங்கி இருப்பாதாக எண்ணி இறுமாப்படைந்தான்.
பேச்சுசுத்திறமை உள்ளவர்கள் புகழ் பெற்றார்கள். புகழ் பெற்றவர்கள் பதவியும், பணமும், பேரளவு பெற்றார்கள். அண்ணன், தம்பிகளும், மச்சினன், மச்சினிச்சியும் கூடவே வளர்ந்தார்கள். விரிவான குடும்ப நபர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களானார்கள். தலைவர்களுக்கு கூஜா தூக்கி, சேவகம் செய்த தொண்டர்கள், மனைவி, மக்கள் மறந்து, குடும்ப பொறுப்புகள் துறந்து, வீணாய்ப் போனார்கள். தலைவன் வாழ்க என்று கூறி தன் சொந்த குடும்புகளை வீழ்த்தினார்கள். பகுத்தறிவு மலர ஆரம்பித்தது. . . .................................. தொடரும்.