Sunday, June 28, 2009

சூரத் கற்பழிப்புக் குற்றவாளிகள்


குஜராத் மாநிலத்தில், சூரத் நகரம். குஜராத் மாநிலம் பெரும்பாலும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு மாநிலம். குஜராத் மாநிலத்தில் பெரும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், பொதுவாக பெண்கள் பாதுகாப்புக்கு இன்னல் இல்லை. இருந்தும், அவ்வப்பொழுது சிற்சில சிறிய, பெரிய அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.


சூரத் மாநகரத்தில், சயீத், தாரிஃ, மற்றும் அபு பாக்கர் தொடர்ந்து பெண்களை ஓடும் கார்களில் கற்பழித்து, வீடியோவில் அவற்றை படமாக்கி விற்று இருக்கிறார்கள். இந்த மாதம் அவர்கள் பிடி பட்டார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. செய்தித் தாள்களிலும், ஆர்குட்டிலும், பிளாக்கர்களிலும் மக்கள் எழுதிக்குவிக்கிறார்கள். குற்றவாளிகள் மூவரையும், கடும் சொற்களால் வைது தீர்க்கிறார்கள். நல்ல செயல். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்ப போதிய ஆதாரம் இருக்கிறது. நன்று.


ஆனால், எங்கே அந்த மக்கள்? அந்த வீடியோ படங்களை வாங்கிப் பார்த்து ரசித்தவர்கள்? அக்கொடியவர்கள் இன்றும் அப்படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம். இம்மூன்று குற்றவாளிகள் நியாயமான முறையில் தண்டிக்கப்பட்ட பின்னரும், வீடியோ கண்டு களிப்பது தொடரலாம். கொடுமை என்னவென்றால், அவர்கள் நம் சமூகத்தில் நம்மிடையே பரவி இருக்கின்றனர். நம் குடும்பத்திலேயே கூட இருக்கலாம். உற்றார், உறவினர், சுற்றுப்புறத்தார் இவர்களில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் பிடிபடாத குற்றவாளிகள். தண்டிக்கப்படாத கொடுமையாளர்கள். இம்மக்கள் பிடி படாத வரை, இக்கொடுமையாளர்கள் தண்டிக்கப்படாத வரை, நியாயம் கிடைத்துவிட்டதாக யாரும் கூற முடியாது.


No comments: