Monday, June 15, 2009

சிறு பிள்ளைகள் போல்


நான் நேத்து ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன். சரியான கூட்டம். விடுமுறை தினங்களா, சிறு பிள்ளைகள் நிறைந்து இருந்தனர். சந்தோஷமாக இருந்தது. சாப்பாட்டு நேரம் துவங்கியது. சிறு குழந்தைகளுக்கு முதலில் சாப்பாடு போட ஆரம்பிச்சாங்க. ஒரு பையன், ஸ்வீட்டு வச்சதும் முதல்ல எடுத்து சாப்பிட்டு விட்டான். அந்த ஸ்வீட்டு வச்சவர் மறுபடியும் ஸ்வீட்டு எடுத்துக்கிட்டு அந்தப்பக்கம் வரவும், அச்சிறு பையன் அவர கூப்பிட்டு மறுபடியும் ஸ்வீட்டு கேட்டான். அவர் கண்டிப்பாக, ஒருத்தருக்கு ஒண்ணு தான் என்றார். அதற்கு அந்தச் சிறுவன் "சார் எனக்கு ஸ்வீட்டு வைக்க மறந்து போய்ட்டீங்க" என்று, இன்னுமொரு ஸ்வீட்டுக்கு அடி போட்டான்.



பக்கத்துல இருந்த பையன், "என்னடா அருண் இப்படி அநியாயமா ஜகத்ரக்ஷகன் மாதிரி பச்சப்பொய் சொல்ற"



அதற்கு அருணும் விட்டுக்கொடுக்கல "ஏண்டா! அவரோட என்ன ஏன் கம்பேர் பண்ற? நான் என்ன டாக்டரேட்டா வாங்கி இருக்கேன் பொய் சொல்ல. அதுவுமில்லாம நான் ஸ்வீட்டு சாப்ட்டேன்னு என்னோட வெப் சய்ட்டிலயா போட்டு இருக்கு. போடா! வேணும்னா எனக்கு அவர் வந்து ஸ்வீட்டு போடும்போது, உனக்கும் ஒண்ணு போட சொல்றேன். பேசாம சாப்ட்டுட்டு போ. என்ன சரியா?" என்றான். சுத்தி நின்னவங்க வாயடைச்சுப் போய்ட்டாங்க.



நான் நினைத்தேன், இங்கே அமைச்சர் ஒருவர் உருவாகிக்கொண்டிருக்கிறார் என்று.

No comments: