Thursday, June 4, 2009

ஆரம்பிச்சிட்டங்கைய்யா, ஆரம்பிச்சிட்டாங்க!

நேத்திக்கு, தமிழ் நாட்டுக்கு ஆயிரத்து சொச்சம் மைல்கள் தூரத்தில் உட்கார்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரை வாங்கியதும், முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தமிழ் நாட்டுச்செய்தி. மத்திய அமைச்சர் ஜகத்ரக்க்ஷகனுக்கு சொந்தமான கல்லூரியில் மருத்துவக் கல்விச் சீட்டுக்கு இருபது இலட்சம் ரூபாய் வேண்டினார்கள்.
ஏங்கையா! என்னய்யா புதுசா கண்டுபிடிச்சிட்டீங்க? என்னமோ உலக மகா அதிசயத்த கண்டுபிடிச்ச மாதிரி. எவ்வளுவு வருசக்கணக்கா, பல பேரு, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம, உருப்படியா எந்த வேலையும் செய்ய, அதற்கு உண்டான படிப்பு இல்லாம, பொறுக்கிகளாய் திரிந்து, அரசியலே சிறந்த தொழில் என்று அதில் புகுந்து, தங்களோட முழு வாழ்க்கையையும் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள்.
இந்த மாதிரி பொதுப்பணிக்காக தங்களோட வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது சில நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். இதப்போய் பெரிசு பண்றீங்களே! இப்படி வாங்கற பணத்தை பூரா அவங்க என்ன அவங்க வூட்டுக்கேவா தூக்கிட்டிப் போறாங்க? எவ்வளவு பேருக்கு தினப்பட்டுவாடா, மாதப்பட்டுவாடா, வருடப்பட்டுவாடா - இதெல்லாம் புரியாம வம்பு பண்றீங்களேய்யா!
இதெல்லாம் மீறி, சுருட்டற பணத்தை சுவிஸ் பாங்கில கொண்டு போய் சேக்கிறதுக்கு படர பாடு, மாத சம்பளத்துக்கு வேலை பாத்து, கம்பனி செலவுல பேனாவும் பேப்பரும் வாங்கி கிறுக்கரவுங்களுக்கு எங்க தெரியும்.
இதுக்கு நடுவுல அத்வானியும், மோதியும் புருடா உட்டாங்க. சுவிஸ் பாங்கில இருக்குற பணத்தையெல்லாம் வெளில கொண்டு வருவோம்னு. நல்ல வேளை - அவங்க கட்சி ஊத்திக்கிச்சு. இதனால்தான் மதச்சார்பு கட்ச்சிகளோட உறவே வச்சுக்கல.
சரி அத வுடு! டாக்டர் சீட்டுக்கு இருபது லட்ச ரூபா குடுத்தா என்ன தப்பு! டாக்டர் ஆயி வெளிய வந்ததும் எவ்வளுவு வழி இருக்கு சம்பாதிக்க. நேர்மையா இருந்து சில ஆயிரம் பார்க்கலாம். ஆனா அந்த மாதிரி ஆளு எங்க காலேஜுக்கு ஏன் வரான். இருபது லட்சம் குடுத்து வரவன் சில வருஷங்கள்ல பல கோடி பார்ப்பான். மருத்துவ உதவியிலிருந்து, நீலப்படம் வரைக்கும்.
மறுபடியும் சொல்றேன் - சாதாரண, மரியாதையான குடும்பத்தில் பிறந்து, படிப்புகள் படித்து, மாத சம்பள சாமானியனுக்கு இதெல்லாம் புரியாது. இதெல்லாம் புரியணும்னா, தெருப்பொறுக்கியா சுத்தி, சோடா பாட்டில் வீசி, கட்ச்சித்தொண்டனா இருந்து, கை கால் பிடித்து, வாழ்க்கைல முன்னுக்கு வந்திருக்கணும். புரியுதா உடன்பிறப்பே?

1 comment:

சாய்ராம் கோபாலன் said...

Brilliant

- Sairam Gopalan, New York City, USA