எங்க வூட்டுப் பக்கத்தில ஒரு சீனியர் சிட்டிசன் இருக்காரு. அந்துருண்டை போட்டு காப்பாத்தின பழைய சமசாரங்களெல்லாம் அப்பப்ப எடுத்து வுடுவாரு. காமராசு, காமராசு, அவரு கொள்கை வழில வந்தவங்கன்னு, சொல்ராங்களே இவங்கெல்லாம் இப்ப, அவரு இறந்தப்ப அவருக்குன்னு எந்த வித சொத்து பத்தும் கிடையாது. கக்கன், கக்கன்னு, ஒரு அமைச்சர் இருந்தார் தமிழ் நாட்ல. தாழ்த்தப் பட்ட வகுப்பினரை சேர்ந்தவர். அவர் போக்குவரத்துக்கு டவுன் பஸ் தான். லால் பஹதூர் சாஸ்த்ரி இரயில் துறை அமைச்சரா இருந்தார். அறியலூர்ல ஒரு டிரெயின் ஆற்றில் விழுந்தது. அதுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று தன் பதவியை உடனே ராஜினாமா செஞ்சாராம்.
சொல்லு உடன் பிறப்பு. இந்த அந்துருண்ட கதையெல்லாம் சொல்லி, டாக்டர் அய்யா, அவரு தான், டாக்டர் ஜகத்ரக்ஷகன், அமைச்சர் பதவி விலகணும்னு ஒளர்ராறு. இது என்ன வெறும் ரயில் கவுரற விஷயமா? கோடிக்கணக்கான சொத்து கவுர்ற விஷயம். அதுவும் என்ன, தெரியாமலா டோனேஷன் வாங்கறோம். இதுக்காக எவ்வளவு வருஷ உழைப்பு. அதிகமா சொல்ல வேண்டாம். தன் மானத்தை விட்டு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்குன்னு பண்றவங்களுக்குத்தான் தெரியும். தன் மானமாம், தார்மீகப் பொறுப்பாம், வெங்காயம், இதெல்லாம் வெட்டிப்பேச்சு. சீனியர் சிட்டிசன் பேச்சு.
விசாரண தாண்டி, வழக்கு நடந்தா அதுவும் தாண்டி, பதவிய பத்திரமா பாதுகாத்தாத்தான், அவர் நெஞ்சுக்கும், எங்கள் தலைவர் நெஞ்சுக்கும் உண்மையான நீதி கிடைக்கும்.
No comments:
Post a Comment