புதியன புகுதலும், பழையன கழிதலும், தினம் தினம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயங்கள் தான். ஆனால், அரசியல் அநாகரீகங்களும், ஒழுங்கீனங்களும், மிகப்பெரும் அளவு ஊழல்களும், பெருமளவு, அன்றாடம் புகுந்து, பத்திரிகைகளுக்கு கொண்டாட்டம் தான். இன்று ஒரு செய்தி. நாளை வேறு புது செய்தி. மக்களுக்கு தினம் தினம் மகிழ்ச்சி. மருத்துவர் ஜகத்ரக்ஷகன் செய்தி வந்து அந்த ரீல் இரண்டு நாட்களுக்கு ஓடியது. மூன்றாவது நாள் பத்திரிகைகளும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டார்கள். அதற்குள் என்.சி.பி. கட்சித்தலைவர் கொலை வழக்கில் கைதான செய்தி. ஒன்றுக்கு ஒன்று மிஞ்சும் செய்தி. மக்களுக்கோ தினம் தினம் மகிழ்ச்சி. தினம் தினம் மறதி. இன்னைக்கு பிக் பாக்கெட்டு செய்தின்னா, நாளைக்கு முடிச்சு அவுக்கி செய்தி, மத்தா நாள் வீடு புகுந்து கொள்ளை அடித்தவன் கதை. அதற்கு அடுத்தநாள் கற்பழிப்பு, கொலை செய்தவன் கதை. இவர்களெல்லாம் சொத்த்துக்கு வழியில்லாம தெருப்போருக்கும் பொறுக்கி கூட்டத்தினர் அல்ல. இவர்களெல்லாம் அரசியல் வாதிகள். தலைவர்கள்.எம்.எல்.ஏ.வாக, எம்.பி. யாக இருந்தவர்கள் இருப்பவர்கள். ஏன்? இதில் அமைச்சர்கள் கூட உண்டு. உலகின் தலை சிறந்த குடியாட்சியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள்.
வெட்கக்கேடு - அரசியல் தலைவர்களுக்கல்ல. அவர்களுக்கு ஒட்டுப்போட்ட ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும்.
No comments:
Post a Comment