Monday, June 15, 2009

நீதி நெஞ்சுக்கு, பணம் பெட்டிக்கு


சமீபத்துல, வயசானவரு ஒரு அரசியல்வாதி, தமிழ் நாட்டுல இல்ல, மகாராஷ்டிரால கைது ஆயிருக்காரு. பதம் சிங் பாட்டில் அவர் பெயரு. அவுரு செய்த குற்றம் என்ன. எவ்வளோவோ வருஷத்துக்கு முன்னாடி காசு கொடுத்து வேண்டாதவங்க ரெண்டு பேரை கொலை பண்ணிட்டாருன்னு குத்தம் சாட்டியிருக்காங்க. சி.பி.ஐ. விசாரிச்சு கைது பண்ணி ரிமாண்டு வாங்கியிருக்கு. இதைக்கேட்டு, அவுரு இருந்த கட்சிக்கு அவமானமா போச்சு. வேக வேகமா மீட்டிங்கு போட்டு, அவுரா கச்சிலேருந்து விளக்கிட்டாங்க. என்னங்கடா இது? வேடிக்கையா இருக்கு. அரசியல், அரசியல் வாதின்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்.



நம்ம தலைவருங்க எவ்வளவோ என்னென்னவோ பண்ணியிருக்காங்க. இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்திக்கினா, முக்கா வாசி பேரு, வாழ்க்கை முழுக்க ஜெயில்ல தான் இருக்கணும். ஏதோ நீதிய நெஞ்சுக்குள்ள வெச்சிக்கினு, பெட்டில பணத்த ரொப்புனமான்னு போய்க்கிட்டே இருக்கணும். சரிப்பா, அவரு தான் தப்பு பண்ணிட்டாரு, ஏதோ வேகத்துல, சும்மா குறுக்க வந்திக்கினு இருக்கானேன்னு, காசு கொடுத்து கதைய முடிச்சிட்டாருன்னு வச்சுக்குவோம். கட்சி ஏம்ப்பா அவுர நீக்கணும். அரைக்கிறுக்கானா இருக்கானுங்க. ஏதோ ரெண்டு பெட்டிய தலைவருக்கு, அதாவது அவரு தலைவருக்கு தள்ளினோமா, அவுரு பார்லிமெண்டுல சப்போர்ட்டா நாலு வார்த்தை பேசினாரான்னு இல்லாம, கட்சிய வுட்டு தூக்கராங்கலாம். ஷரத் பவ்வரு அண்ணாச்சிய நம்மூருக்கு வந்து டிரெயினிங் எடுத்துக்கிட்டு போகச்சொல்லு. தன்மானம்னா என்ன்னன்னு அவருக்கும் புரியும், அவுரு கட்சிக்காரங்களுக்கும் புரியும்.



தன்மானம்னா, நெஞ்சுக்குள்ள நீதி, பொட்டிக்குள்ள பணம். புள்ளைங்களுக்கு பதவி. புரிஞ்சிதா உடன்பிறப்பே. புரியிலைன்னா நம்ம டாக்டர் அமைச்சர்ட்ட கேளு. அவுரு சொல்லுவாரு.

No comments: