மனோஜ் என்று ஒருவன் தப்பிப்பிழைத்தான். உயர் சமூக அநீதியாளர்களுக்கு விலை போனான். ஏற்றிக்கொன்றது லாரி என்று பொய் வாக்கு மூலம் கொடுத்தான். அதற்குப்பிறகு மனோஜ் முழுவதுமாக காணாமல் போனான்.
சுனில் குல்கர்னி என்பவர் தானாகவே சாட்சி சொல்ல வந்தார். சஞ்சீவ் நந்தா விபத்துக்குப் பிறகு வண்டியில் இருந்து இறங்கி, வண்டிக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்ததாகச் சொன்னார். காலம் கடந்து செல்ல தடுமாற்றத்துக்கு உள்ளானார். பாவிகள் அவரை எப்படி எல்லாம் பயமுறுத்தினார்களோ.
இதற்கு உச்சி கட்டமாக, உயர் நிலை வழக்கறிஞர்கள் ஆனந்தும், கானும், வெட்கங்கெட்டு, சாட்சிகளை மாற்றும் ஈனமான செயலுக்குத் துணை போனார்கள். இதைத்தவிர சுரேஷ் நந்தா பாரக் மிசைல் ஊழலில் குற்றவாளி. மேலும் தந்தையும், மகனும், அதாவது சுரேஷும், சஞ்சீவும் வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கையில், மும்பை மாநகரித்தில் கைதானார்கள்.
எந்த விதத்தில் பார்த்தாலும், உயர் குடும்பத்தில் பிறந்து, உயர் படிப்பு படித்து ஈனமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட, ஈடுபடும் நந்தா குடும்பம் வேரோடு களையப்பட வேண்டியது நாட்டுக்கு அவசியம். ஈனச்செயல்களுக்கு துணை போன அனைத்து குடும்ப உறுப்பினர்களும், ஆனந்தும், கானும் வாழ்க்கை முழுவதும் சிறையிடப்பட வேண்டும்.
No comments:
Post a Comment