Sunday, August 23, 2009

சோனாவின் சுயம்வரம்

இந்தி அலை வரிசைகளில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு வரலாறு சிறப்பு பெற்ற நிகழ்ச்சி. ராக்கி சாவந்த் என்ற நடன (நடன என்று சொவது சிரமமாக இருக்கிறது, ஆட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்) நடிகை. சபல மன ஆண்களுக்கு கிளு கிளுப்பு மூட்டும் ஆட்டங்கள் ஆடுவதில் சிறப்புப் பெற்றவர். அவருக்கு தொலைகாட்சி மூலம் சுயம்வரம். ஒரே நிகழ்ச்சியில் மூன்று பேருக்கு லாபம்.



ராக்கிக்கு உலக அளவு விளம்பரம், பணம் உண்டா என்று தெரியவில்லை. பெட்டி நிறைய பணம் என்று நம்ப இடமிருக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பெருத்த லாபம் வந்திருக்கும், கூடவே அளவிட முடியாத விளம்பரம். மக்களுக்கோ அளவில்லாத கிளு கிளுப்பு. ராக்கி எப்படியெல்லாம் கேள்வி கேட்டாள் - அசத்திட்டாங்க போங்க. இதுவரைக்கும் அவுங்க ஆட்டத்தை மட்டும் தான் பார்த்தோம். இந்த தடவ பேசியும் அசத்திட்டாங்க, அவங்க பேசுறத கேட்டப்ப, இல்ல, பாத்தப்ப என்ன ஒரு மகிழ்ச்சி.



லேட்டஸ்ட்டா ஒரு நியூஸ். தமிழ் நாடு இந்த விஷயத்துல பின்னோட்டம் அடையப்போவதில்லை. ஹிந்துசினிமா.காம் படித்துப்பாருங்கள். திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழ்ப்பெண், பிகினி உடையில் வந்து கோடானு கோடி தமிழ் உள்ளங்களை கொள்ளை கொண்ட சோனா ஹைடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார். இந்தச்செய்தியின் படி, சோனா ஹைடன் சுயம்வரம் செய்து கொள்வார். இந்நிகழ்ச்சி சன் டி.வி. யில் இடம் பெறும்.



சன் டி.வி.யாளர்களே, இந்த சரித்திர முக்கியம் பெறப் போகும் நிகழ்ச்சியை நடத்த எந்த விதத்திலும் தவற விடாதீர்கள். கோடானு கோடி தமிழர்கள் கிளு கிளுப்பு அடைவது மட்டுமல்லாமல், தங்களிடம் அளவு கடந்த நன்றியுணர்வு கொள்ளுவார்கள். இது மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக சார்ந்து இருக்கும் திராவிட இயக்கத்திற்கும் இது ஒரு சிறந்த தொண்டாக இருக்கும். தந்தை பெரியாரிலிருந்து, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வரை அனைவரும் இந்நிகழ்ச்சியை நடத்துபவர்களையும், இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களையும், இந்நிகழ்ச்சியை கண்டு களிக்கும் ஒவ்வொரு தமிழனையும் உளமார வாழ்த்துவார்கள்.


வாழ்க தமிழ்! வளாக தமிழினம்!

No comments: