Sunday, August 2, 2009

உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 4

பிரியதர்ஷினி மட்டு. அழகானவள். அறிவாற்றல் மிக்கவள். எம்.காம். முடித்து டெல்லி மாநகரத்தில் சட்டம் படித்துக் கொண்டிருந்தாள். அதே கல்லூரியில் இருந்தான் மற்றொரு மாணவன் சந்தோஷ் சிங் என்று பெயர். உயர் அதிகாரியின் ஊதாரிப் பிள்ளை. அப்பொழுது அவன் தந்தை பாண்டியில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.
பிரியதர்ஷினியால் வசீகரிக்கப்பட்டு அவள் பின்னே சுற்றி வந்தான். நாகரிக எல்லைகளை மீறி அவளுக்கு ஈடூறுகள் விளைவித்தான். தன்னுடைய பின்னணியைக் காட்டி பயமுறுத்தினான். அவள் போலீசுக்கு புகார் செய்தாள். பல முயற்சிகளுக்குப் பிறகு அவளுக்குப் பாதுகாப்பு கொடுக்கப் பட்டது. ஆனால் காமுகன் சந்தோஷின் தொந்தரவுகள் அடங்கவில்லை. அவள் மீது குற்றம் சாட்டினான். சட்டப் படிப்பைத்தவிர விதிகளுக்குப் புறம்பாக எம்.காம். படிக்கிறாள் என்று. அது பொய் என்றும், அவள் அதற்கு முன்னரே எம்.காம். பட்டம் பெற்றிருந்தாள் என்று நிரூபணம் ஆனது. வெகுண்டு எழுந்தான் வெட்கம் கேட்டவன். மேலும் மேலும் இன்னல் கொடுத்தான்.
இதற்கு இடையே, அவன் தந்தை டெல்லி மாநகரத்திற்கு மாற்றலானார். போலீஸ் ஐ.ஜி. யாக. துணிச்சல் கொண்டான். பிரியதர்ஷினி வீட்டில் புகுந்தான். கற்பழித்தது மட்டுமன்றி, கழுத்தை நெரித்துக் கொன்றான். ஹெல்மெட் கொண்டு முகத்தில் பல முறை அடித்து, முகத்தை சின்னா பின்னமாக்கினான் கொடுமையாளன்.
கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. போலீஸ் துறை முழுமையாக கொலையாளிக்குத் துணையாக நின்றது. தீர்ப்பளித்த நீதிபதி, இவன் தான் கொலையாளி, ஆனால் போலீஸ் அதை முழுமையாக நிரூபிக்கத் தவறி விட்டது, என்று கூறி அவனை விடுதலை செய்தார்.
உயர் நீதி மன்றத்துக்கு சென்றது விவகாரம். கொலை செய்த வெறியன் காமுகன் சந்தோஷுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. இருக்கிறான் இப்பொழுது திஹார் ஜெயிலில். வழக்கு இப்பொழுது தலைமை நீதி மன்றத்தில் இருக்கிறது. தண்டனை கிடைக்கட்டும் கொலைகாரனுக்கு மட்டுமல்ல, அவனுக்குத்துணை போன அவன் தம் கேடு கெட்ட அப்பனுக்கும், அந்த அப்பனுக்கு துணை போன போலீசாருக்கும்.

No comments: